Arabic Kuthu : வெளியானது பீஸ்ட் படத்தின் ‛அரபிக் குத்து’ பாடல்... ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடித் தீர்க்கும் விஜய்!
பீஸ்ட் திரைப்படத்தின் "அரபிக் குத்து" பாடலின் பாடல் வரிகள் தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
கோலமாவு கோகிலா, டாக்டர் ஆகிய படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார், அடுத்தாக விஜய்யை வைத்து பீஸ்ட் படத்தை இயக்கி முடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். அனிருத் இசையமைத்திருக்கும் இப்படத்தில் இயக்குநர் செல்வராகவன், கிங்ஸ் லீ உள்ளிட்டோரும் நடித்திருக்கின்றனர்.
விரைவில் பீஸ்ட் திரைப்படம் ரசிகர்களுக்கு விருந்து அளிக்கும்வகையில் திரைக்குவரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.இந்த அரபிக் குத்து பாடலின் பாடல் வரிகள் காதலர் தினமான இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று நேற்றே பீஸ்ட் படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்தது.
#ArabicKuthu to rule your playlist from tomorrow!@actorvijay @Nelsondilpkumar @anirudhofficial @Siva_Kartikeyan @hegdepooja @manojdft @Nirmalcuts #Beast #ArabicKuthuFromTomorrow #BeastFirstSingle pic.twitter.com/6b8gNcmebJ
— Sun Pictures (@sunpictures) February 13, 2022
இந்தநிலையில், பீஸ்ட் திரைப்படத்தின் "அரபிக் குத்து" பாடலின் பாடல் வரிகள் தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஏற்கனவே வெளியான தகவலின் படி, இந்த பாடல் முழுக்க முழுக்க அரபிக் வரிகளை மையமாக கொண்டு இருக்கும் என்றும், இந்த பாடல் வரிகளை நடிகர் சிவகார்த்திகேயன் எழுத்திலும் தயாரித்து இருக்கின்றனர்.படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டாக விஜய் படத்தின் டப்பிங் வேலைகளை முடித்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. டப்பிங் வேலையை அடுத்து, போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருவதாக படக்குழு தெரிவித்திருக்கிறது.
ஏப்ரல் மாதம், திரையரங்குகளில் பீஸ்ட் படம் வெளியாகும் என்பது உறுதியாகிவிட்ட நிலையில், ரிலீஸ் தேதி என்ன என்பது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. மேலும், யோகிபாபு, வி.டி.வி. கணேஷ், ரெடின் கிங்ஸ்லி நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தொடர்ந்து, அபர்ணா தாஸ், ஜான் விஜய், டான்சிங் ரோஸ் புகழ் நடிகர் உள்பட ஏராளமான பட்டாளமே நடித்துள்ளனர்.
தமிழ் புத்தாண்டு பண்டிகையை அடுத்து ஏப்ரல் 14-ம் தேதி வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. எனினும், ஏப்ரல் 14-ம் தேதியா அல்லது 28-ம் தேதியா என்பது உறுதியாகவில்லை. படம் வெளியாவதற்கு தயாராகி வருவதால், ப்ரொமோஷன் பணிகளும் முழு வீச்சில் தொடங்கப்பட்டுள்ளது. படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் மற்றும் அரபிக் பாடலை தொடர்ந்து டீசர் விரைவில் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்ப்பார்த்துள்ளனர். இதனால், படக்குழு அடுத்தடுத்து அப்டேட்டுகளை அறிவிக்க உள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்