Basil Joseph : அப்பாவான 'மின்னல் முரளி' நாயகன்... குழந்தைக்கு வைத்த அழகான பெயர் என்ன ? குவியும் வாழ்த்துக்கள்
மலையாள திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகர் மற்றும் இயக்குனரான பசில் ஜோசப் அப்பாவாகி உள்ளார்.

'ஜெய ஜெய ஜெய ஜெய ஹே' என்ற திரைப்படத்தின் நாயகன் மற்றும் சூப்பர் ஹீரோ 'மின்னல் முரளி' எனும் அற்புதமான திரைப்படத்தின் மூலம் பிரபலமாகி புகழின் உச்சிக்கு சென்றவர் பசில் ஜோசப். நடிச்சா இப்படி ஒரு படத்தில் நடிக்கணும் என அனைவரையும் ஏங்க வைத்த இயக்குநர்.
மின்னல் முரளி :
ஒரு இன்ஃபோசிஸ் சாப்ட்வேர் என்ஜினீயராக வேலை பார்த்த ஒரு இளைஞன் சினிமா எடுக்க வேண்டும் என்ற கனவால் சினிமாவில் நுழைந்தவர். கொஞ்சம் கூட சினிமா வாசம் இல்லாத ஒரு குடும்ப பின்னணியில் இருந்து வந்த இந்த இளைஞன் இயக்குனர் வினீத் ஸ்ரீனிவாசனிடம் உதவி இயக்குநராக சேர்ந்தார். அது மட்டுமின்றி ஒரு சில திரைப்படங்களில் கேமியோ ரோல்களிலும் நடித்த பசில் ஜோசப் மூன்று படங்களை இயக்கியுள்ளார். குறிஞ்சிராமாயணம், கோதா, மின்னல் முரளி என ஒவ்வொரு திரைப்படமும் ஹிட் படங்களாக அமைந்தன. ஒரு நடிகராக மட்டுமின்றி ஒரு இயக்குனராகவும் மலையாள திரையுலகில் ஜொலித்த பசில் ஜோசப் இயக்கத்தில் வெளியான 'மின்னல் முரளி' திரைப்படத்தை தென்னிந்தியா கொண்டாடியது. இப்படம் ஆசிய அகாடமி விருதையும் பெற்றது.
View this post on Instagram
பசில் ஜோசப் காதல் கதை :
பசில் ஜோசப் காதல் கதையும் சுவாரஸ்யமானது. அவரோட லவ்வர் எலிசபெத் ஹேண்ட் பேக்கில் அவருக்கு தெரியாமல் பரிசுகளை ஒளித்து வைத்து பழைய டெக்னீக் மூலம் சர்ப்ரைஸ் எல்லாம் கொடுத்துள்ளார். இன்னும் சொல்ல போனால் எலிசபெத் அவரின் போனில் பசில் ஜோசப் நம்பரை 'பசில் ப்ரோ' என்று தான் ஸ்டோர் செய்து வைத்து இருந்தாராம். பின்னாடி எல்லாம் ஒகே செய்து திருமணம் செய்து கொண்டனர்.
View this post on Instagram
அப்பாவான பசில் ஜோசப் :
இந்த தம்பதியினருக்கு அழகான பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. குழந்தைக்கு ஹோப் எலிசபெத் பசில் என பெயரிட்டுள்ளனர். இந்த தகவலை தனது சோசியல் மீடியா பக்கம் மூலம் பகிர்ந்துள்ளார் பசில் ஜோசப். "எங்களுடைய இதயங்களை ஏற்கனவே கொள்ளைகொண்டு நிலவில் இருப்பது போன்ற உணர்வை கொடுத்துள்ளாள் எங்கள் அன்பு மகள். அவள் வளர்ந்து தினசரி பல புதிய விஷயங்களை கற்பதை காண ஆவலாக காத்து இருக்கிறோம்" என பதிவிட்டு இருந்தார் பசில் ஜோசப்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

