மேலும் அறிய

லுங்கியால் மறுக்கப்பட்ட சினிமா டிக்கெட்: வைரலான வீடியோ! விளக்கமளித்த தியேட்டர் நிர்வாகம்!

பங்களாதேஷின் முன்னணி மல்டிபிளக்ஸ் ஒன்றின் ஒரு அங்கமான ஸ்டார் சினிப்ளெக்ஸில் முதியவர் லுங்கி அணிந்திருந்ததால் டிக்கெட் மறுக்கப்பட்டதாக வீடியோ ஒன்று வைரலானது

பங்களாதேஷின் முன்னணி மல்டிபிளக்ஸ் ஒன்றின் ஒரு அங்கமான ஸ்டார் சினிப்ளெக்ஸில் முதியவர் லுங்கி அணிந்திருந்ததால் டிக்கெட் மறுக்கப்பட்டதாக வீடியோ ஒன்று வைரலானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமூக ஊடகங்களில் பரவி வரும் வீடியோவை அந்த அடுத்து, மல்டிபிளக்ஸ் தற்போது ஒரு விளக்கத்தை வெளியிட்டுள்ளது. புதன்கிழமை அன்று வெளியான இந்த வீடியோ, சிறிது நேரத்தில் வைரலானது. அந்த வீடியோவில் இருந்தவர் சமன் அலி சர்க்கார் என அடையாளம் காணப்பட்டது. டாக்காவின் சோனி ஸ்கொயர் கிளையில் உள்ள ஸ்டார் சினிப்ளெக்ஸ் தியேட்டருக்கு "போரன்" என்கிற படத்தைப் பார்க்கச் சென்றதாகவும், ஆனால் டிக்கெட் மறுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதை அடுத்து சினிப்ளெக்ஸ் தனது அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் வாடிக்கையாளர்களிடம் எதன் அடிப்படையிலும் பாகுபாடு காட்டுவதில்லை என்று தெளிவுபடுத்தியுள்ளது.

"ஸ்டார் சினிப்ளெக்ஸ் ஒரு நபரின் உடையின் அடிப்படையில் வாடிக்கையாளர்களுக்கு எதிராக பாகுபாடு காட்டாது என்பதை நாங்கள் தெளிவுபடுத்த விரும்புகிறோம். லுங்கி அணிந்திருப்பதால், ஒருவருக்கு டிக்கெட் வாங்குவதற்கான உரிமையை மறுக்கும் கொள்கைகள் எங்கள் நிறுவனத்தில் இல்லை. எங்கள் திரையரங்குகளில் தங்களுக்குப் பிடித்த திரைப்படங்களை பார்த்து ரசிக்க அனைவரும் வரவேற்கப்படுகிறார்கள் என்பதை நாங்கள் வலியுறுத்த விரும்புகிறோம்" என்று ஸ்டார் சினிப்ளெக்ஸ் ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளது.

"சமூக ஊடகங்கள் மூலம் பரப்பப்படும் இந்த சம்பவம் துரதிர்ஷ்டவசமான தவறான புரிதலின் விளைவாக இருக்கலாம். இதுபோன்ற ஒரு நிகழ்வு நடைபெறுவதைக் கண்டு நாங்கள் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளோம், மேலும் அதை எங்கள் கவனத்திற்குக் கொண்டுவந்த சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு நன்றி," என்று அது மேலும் குறிப்பிட்டுள்ளது.

திரையரங்கம் பின்னர் சர்கார் மற்றும் அவரது குடும்பத்தினரை அதே மல்டிப்ளெக்ஸில் படம் பார்க்க அழைத்தது. மேலும் இதுகுறித்த புகைப்படங்களை அதன் பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. "போரன்" படத்தின் நட்சத்திரங்களில் ஒருவரான சரிஃபுல் ராஸும் சர்கார் மற்றும் அவரது குடும்பத்தினருடன் தியேட்டருக்குச் சென்று அவர்களுடன் படத்தைப் பார்த்துள்ளார்.

View this post on Instagram
 
A post shared by STAR Cineplex (@mystarcineplex)

தலைப்பு செய்திகள்

Flashback : ரஜினியை பார்க்க மறுத்த சித்தர்...சந்திரமுகி பட நினைவுகளை பகிர்ந்த இயக்குநர் பி வாசு
Flashback : ரஜினியை பார்க்க மறுத்த சித்தர்...சந்திரமுகி பட நினைவுகளை பகிர்ந்த இயக்குநர் பி வாசு
பெத்தி படத்தில் ஜான்வி கபூரின் கவர்ச்சி காட்சிகள் நீக்கம்..வருத்தம் தெரிவித்த இயக்குநர்
பெத்தி படத்தில் ஜான்வி கபூரின் கவர்ச்சி காட்சிகள் நீக்கம்..வருத்தம் தெரிவித்த இயக்குநர்
நயன்தாரா மகன்களை கிண்டல் செய்து காட்சி...சர்ச்சையை கிளப்பியிருக்கும் பாண்டிராஜின் பரிமளா & கோ படம்
நயன்தாரா மகன்களை கிண்டல் செய்து காட்சி...சர்ச்சையை கிளப்பியிருக்கும் பாண்டிராஜின் பரிமளா & கோ படம்
“மூன்றாம் கண்” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !
“மூன்றாம் கண்” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !

வீடியோ

DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
Annamalai New Party |
NEET Exam Student Suicide |
Illegal Relationship | மனைவி உயிரோடுதான் இருக்காங்க குழந்தையுடன் கணவன் தலைமறைவு போலீஸார் விசாரணை!
Annamalai Resignation | பாஜகவுக்கு Bye Bye! புதிய பாதையில் அண்ணாமலை.. வெளியான அறிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
US Iran War: ‘அவங்க அட்டாக் பண்ணா, நாங்க சும்மா இருப்போமா.?‘ - வளைகுடா அமெரிக்க தளங்களை பதம் பார்த்த ஈரான்
‘அவங்க அட்டாக் பண்ணா, நாங்க சும்மா இருப்போமா.?‘ - வளைகுடா அமெரிக்க தளங்களை பதம் பார்த்த ஈரான்
Putin Backs India: “இந்தியாவுக்கு அழுத்தம் கொடுத்தா எதிர்விளைவுகள ஏற்படுத்தும்“ - US-க்கு புதின் மறைமுக எச்சரிக்கை
“இந்தியாவுக்கு அழுத்தம் கொடுத்தா எதிர்விளைவுகள ஏற்படுத்தும்“ - US-க்கு புதின் மறைமுக எச்சரிக்கை
DMK - Congress: திருட்டு மாடல்.. அரசியல் ஒழுக்கமும் வேண்டும்.. திமுகவை வறுத்தெடுத்த மாணிக்கம் தாகூர்!
DMK - Congress: திருட்டு மாடல்.. அரசியல் ஒழுக்கமும் வேண்டும்.. திமுகவை வறுத்தெடுத்த மாணிக்கம் தாகூர்!
TVK: கேட்டைக்கூட திறக்காத தவெக.. கால்கடுக்க காத்திருந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்! பனையூரில் நடந்தது என்ன?
TVK: கேட்டைக்கூட திறக்காத தவெக.. கால்கடுக்க காத்திருந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்! பனையூரில் நடந்தது என்ன?
TVK: உள்ளாட்சி தேர்தல்தான் அடுத்த டார்கெட்! அதிமுக மாஜிக்களை வைத்து அஸ்திவாரம் போடும் தவெக!
TVK: உள்ளாட்சி தேர்தல்தான் அடுத்த டார்கெட்! அதிமுக மாஜிக்களை வைத்து அஸ்திவாரம் போடும் தவெக!
Affordable 7-Seater Cars: உங்க குடும்பம் பெருசா.? 7 சீட்டர் கார் வாங்கணுமா.? ரூ.10 லட்சம் பட்ஜெட்டில் சிறந்த கார்கள் லிஸ்ட்
உங்க குடும்பம் பெருசா.? 7 சீட்டர் கார் வாங்கணுமா.? ரூ.10 லட்சம் பட்ஜெட்டில் சிறந்த கார்கள் லிஸ்ட்
டாடா EV காருக்கு ரூ.1.45 லட்சம் மெகா தள்ளுபடி: செம சேஃப்டி, ரேஞ்ச், இறுதி விலை- இதோ விவரம்!
டாடா EV காருக்கு ரூ.1.45 லட்சம் மெகா தள்ளுபடி: செம சேஃப்டி, ரேஞ்ச், இறுதி விலை- இதோ விவரம்!
India Team Squad: இந்திய டி20 புது கேப்டன் ஸ்ரேயாஸ்! அறிமுக வீரராக களமிறங்கும் சுட்டிப்பையன் சூர்யவன்ஷி - டீமே மாஸா இருக்கே
India Team Squad: இந்திய டி20 புது கேப்டன் ஸ்ரேயாஸ்! அறிமுக வீரராக களமிறங்கும் சுட்டிப்பையன் சூர்யவன்ஷி - டீமே மாஸா இருக்கே
Embed widget