Krithi Shetty : என்னடா இது க்ரித்தி ஷெட்டிக்கு வந்த சோதன...தமிழில் நடித்த இரண்டு படங்களின் ரிலீஸ் ஒத்திவைப்பு
க்ரித்தி ஷெட்டி நடித்து தமிழில் வெளியாக இருந்த இரு படங்களின் ரிலீஸ் அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டுள்ளது ரசிகர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது

க்ரித்தி ஷெட்டி நடித்துள்ள இரண்டு தமிழ் படங்களின் ரிலீஸ் அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இந்தி , தெலுங்கு , மலையாளம் மற்றும் தமிழ் ரசிகர்களிடையே குறுகிய காலத்தில் பெரியளவில் கவனமிர்த்தவர் க்ரித்தி ஷெட்டி. இவர் நடித்துள்ள வா வாத்தியார் மற்றும் எல்.ஐ.கே ஆகிய இரு படங்கள் இந்த டிசம்பர் மாதம் வெளியாக இருந்த நிலையில் இரண்டு படங்களின் ரிலீஸூம் ஒத்திவைக்கப்பட்டது ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
யார் இந்த க்ரித்தி ஷெட்டி
2021 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான உப்பேனா படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை க்ரித்தி ஷெட்டி. இந்த படத்தில் நடித்தபோது அவருக்கு வயது 17. இப்படத்திற்காக சிறந்த அறிமுக நடிகைக்கான ஃபிலிம்பேர் விருதை வென்றார் . தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் வெங்கட் பிரபு இயக்கிய கஸ்டடி படத்தில் நடித்தார். ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் க்ரித்தி ஷெட்டிக்கு ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.
தமிழில் க்ரித்தி ஷெட்டி தற்போது மூன்று படங்களில் நடித்துள்ளார். கார்த்தி நடித்துள்ள வா வாத்தியார் , பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள லவ் இன்சூரன்ஸ் கம்பேனி மற்றும் ரவி மோகன் நடித்து வரும் ஜீனி. இதில் வா வாத்தியார் மற்றும் லவ் இன்சூரன்ஸ் கம்பேனி ஆகிய இரு படங்கள் டிசம்பர் மாதம் வெளியாக இருந்த நிலையில் இரு படங்களின் ரிலீஸூம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடையே அதிருப்திஐ ஏற்படுத்தியுள்ளது
வா வாத்தியார் ரிலீஸ் ஒத்திவைப்பு
நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி, க்ரித்தி ஷெட்டி நடித்துள்ள படம் வா வாத்தியார். மேலும் சத்யராஜ் , ஆனந்தராஜ் , ராஜ்கிரண் மற்றும் பலர் இந்த படத்தில் நடித்துள்ளார்கள். ஸ்டுடியோ கிரீன் சார்பாக ஞானவேல்ராஜா இந்த படத்தை தயாரித்துள்ளார். இன்று டிசம்பர் 12 ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக இருந்த நிலையில் படத்தை வெளியிட உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. படத்தின் புதிய ரிலீஸ் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை
எல்.ஐ.கே ரிலீஸ் ஒத்திவைப்பு
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் , சீமான் , எஸ்.ஜே சூர்யா , கரித்தி ஷெட்டி , கெளரி கிஷன் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் லவ் இன்சூரன்ஸ் கம்பேனி. சைன்ஸ் ஃபிக்ஷன் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படம் வரும் டிசம்பர் 18 ஆம் தேதி வெளியாக இருந்தது. டிசம்பர் 19 ஆம் தேதி அவதார் 3 ஆம் பாகம் வெளியாக இருப்பதால் எல்.ஐ.கே படத்தின் ரிலீஸ் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.





















