Baakiyalakshmi Serial Promo: இனியா கொடுத்த அதிர்ச்சி.. கேப்பில் கிடா வெட்டிய கோபி.. வைரலாகும் பாக்கியலட்சுமி ப்ரோமோ..
Baakiyalakshmi serial today promo:பாக்கியலட்சுமி ப்ரோமோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்தப் ப்ரோமோவில், “ மகள் எனக்கும் ஒரு ஸ்டைலான ஒரு அம்மா இருந்திருக்கலாம் என சொல்ல குஷியான கோபி, நான் ஸ்டைலான ஒருவரை கல்யாணம் செய்து கொள்ளட்டுமா என்று கேட்கிறார் கோபி. அப்பா ஏதோ சும்மா சொல்கிறார் என நினைத்த மகள், செய்துகொள்ளுங்கள் அப்பா என்று கூறுகிறார்.
அதனைத்தொடர்ந்து பேசிய கோபி, ஒருவேளை நானும் அம்மாவும் பிரிந்தால் நீ யார் பக்கம் நிற்பாய் என்று கேட்க, நிச்சயம் உங்கள் பக்கமே இருப்பாய் என்று கேட்க, நிச்சயம் உங்கள் பக்கம்தான் இருப்பேன் என்று கூறுகிறார். இந்த ப்ரோமோ அந்த சீரியலின் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏகோபித்த வரவேற்பு:
விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் முன்னணி சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இல்லத்தரசி ஒருவர் தன் வாழ்கையில் சந்திக்கும், பிரச்னைகளை மையமாக கொண்டு இந்தத்தொடர் நகர்கிறது. கதையின் மைய கதாபாத்திரமான பாக்கியலட்சுமி கேரக்டரில் சுசித்ராவும், அவரது கணவர் கோபிநாத் கேரக்டரில் ராஜூவும் நடித்து வருகின்றனர்.
முன்னாள் காதலி ராதிகாவுடன் சுற்றும் கோபிநாத், அவளை திருமணம் செய்ய நினைக்கிறார். இதனால் தனது மனைவியான பாக்யாவை விவாகரத்து செய்ய முயல்கிறார். இதை அறியாத வெகுளி பாக்யா விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து போட்டு குடும்ப நல நீதிமன்றம் வரை சென்றுவிடுகிறார்.
View this post on Instagram
சூழ்நிலை இப்படி இருக்க, பகலில் ராதிகா வீட்டில் இருந்த கோபிநாத், இரவில் தன் வீட்டிற்கு வருவதை வழக்கமாக வைத்திருந்த நிலையில் இப்போதெல்லாம் ராதிகா வீட்டிலேயே இருந்து விடுகிறார். செழியன் சுயநலவாதி என்பது அப்பட்டமாக தெரிந்தாயிற்று. சூழ்நிலை இப்படி நகர்ந்து கொண்டிருக்க, நடுவில் பாக்யா, எழில், ஜெனி குடும்பத்தை நடத்த கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்