வயசானவங்க யாரும் லவ் பண்ணக் கூடாதா? கூண்டுக்கு தயாரான நிலையில் கோபி வெளியிட்ட வீடியோ..!
கோபி கதாபாத்திரத்தில் நடித்து வரும் சதீஸ், வயசானவங்க யாரும் லவ் பண்ண கூடாதா என்ன என்று கேள்வி கேட்டு வீடியோ ஒன்றை வெளியிட அது ட்விட்டர் பக்கத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
விஜய் டிவி சீரியலில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களின் ஆல்டைம் பேவரைட்டாக உள்ளது. இந்த சீரியலின் ஹீரோ கோபி குடும்பத்திற்காக மனைவி பாக்யாவை பிடிக்காமல் அவரோடு சகித்து கொண்டு வாழ்த்து வருகிறார். அந்த சமயத்தில் தன்னை சந்திக்கும் முன்னாள் காதலி ராதிகா மீது அவருக்கு மீண்டும் காதல் துளிர்கிறது. இதற்காக கோபி செய்யும் ஒவ்வொரு தகிடு தத்தங்கள் என்னென்ன என்பதான திரைக்கதை சுவாரஸ்யமாக சென்ற நிலையில் கடந்த சில எபிசோட்கள் அடுத்தடுத்து எதிர்பாராத திருப்பங்களை ஏற்படுத்தியது.
இந்த சீரியலில் கோபியாக நடிகர் சதீஷ்குமார், பாக்யலட்சுமியாக நடிகை சுசித்ரா ஷெட்டி, ராதிகாவாக நடிகை ரேஷ்மா ஆகியோர் நடிக்கின்றனர். பாக்யா தான் தன் மனைவி என போதையில் கோபி ராதிகாவிடம் உளறியது, கோபியின் மீதான சந்தேகத்தால் அவரது போனை பாக்யா சோதனை செய்தது. ராதிகா - கோபி இடையேயான சண்டை, நடுவில் ராதிகாவின் முதல் கணவன் ராஜேஷின் எண்ட்ரி, கோபி வீட்டில் உண்மை தெரிந்தது, அவர் விபத்தில் சிக்கியது, கோபிக்கும் ராதிகாவுக்கும் இடையேயான உண்மை பாக்யாவுக்கு தெரிந்தது என இந்த சீரியல் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நகர்கிறது.
தொடர்ந்து, கோபியின் வீட்டில் கோபி மீது கூறப்படும் குற்றச்சாட்டுகளை நம்ப மறுக்கும் அவரது அம்மா ஈஸ்வரி கோபியை எல்லாவற்றுக்கும் என்ன பதில் கேட்க, கோபியோ அமைதியாக இருக்கிறார். உடனே ஈஸ்வரி பாக்யாவிடம் ஹாஸ்பிட்டலில் கோபியை யாரோட நீ பார்த்தாய் என கேட்கிறார். அதற்கு அவர் கோபியிடம் ‘இப்ப நீங்க சொல்றீங்களா...இல்லை நான் சொல்லட்டுமா’ என அவர் கொந்தளிக்கிறார். இறுதியாக கோபி நம்பர் கொடுத்து வர சொன்னது...அவர் மனைவின்னு ஹாஸ்பிட்டல்ல இருந்தது எல்லாமே ராதிகா தான் என கதையின் முடிச்சை ஒருவழியாக பாக்யா அவிழ்த்து விட்டார். இதனைக் கேட்டு மொத்த குடும்பமும் ஆடிப்போனது.
#Gopi #Baakiyalakshmi pic.twitter.com/3DifonWuHy
— Parthiban A (@ParthibanAPN) July 9, 2022
இந்தநிலையில் கோபி கதாபாத்திரத்தில் நடித்து வரும் சதீஸ், வயசானவங்க யாரும் லவ் பண்ண கூடாதா என்ன என்று கேள்வி கேட்டு வீடியோ ஒன்றை வெளியிட அது ட்விட்டர் பக்கத்தில் தற்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ”எல்லாருக்கும் காலை வணக்கம், முதல்ல உங்க எல்லாருக்கும், உங்க டைம் எடுத்து எனக்கு மெசேஜ் பண்ணி உங்க அன்பை தெரிவிக்கும் எல்லா பாலோவர்ஸுகளுக்கும் என் அன்பார்ந்த நன்றிகள். நீங்க எப்படி கோபிய சதீஸா பார்க்குறீங்கன்னு தெரியல, ஆனா சதீஸ் ஒரு சாதாரண மனிசன் அவ்வளவுதாங்க.. அடுத்த வாரம் கூண்டில் ஏற்றப்பட்ட குற்றவாளியா தண்டனைக்கு காத்திருக்கேன். பாவம் கோபி என்ன பண்ண முடியும். காதலுக்காக நிறைய பொய், பித்தலாட்டம் பண்ணா தண்டனை அனுபவிச்சுதான் ஆகணும். வயசாகிருச்சுனா லவ் பண்ணகூடாது இல்லீங்களா. அப்படிதான சட்டம் சொல்லுது. என்ன பண்றது “ என்று அந்த வீடியோவில் தெரிவித்து இருப்பார்.
இனி அடுத்த வார எபிசோட்டில்தான் தன் மீதான குற்றச்சாட்டுக்கு கோபி உண்மையை ஒப்புக் கொள்வாரா? ..ஈஸ்வரி எடுக்கப்போகும் முடிவு என்ன? என்ற கேள்விகளுக்கு விடை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்