மேலும் அறிய

Video : 15 Years of Shivaji : வெளியாகி 15 ஆண்டுகளைக் கடந்த சூப்பர் ஸ்டாரின் `சிவாஜி’ தி பாஸ்.. இதுவரை வெளிவராத மேக்கிங் வீடியோ

இந்த ஜூன் 15 அன்று, திரையரங்கங்களில் வெளியாகி 15 ஆண்டுகள் ஆனதைக் கொண்டாடுகிறது தமிழ் சினிமாவின் மிகப்பெரிய வெற்றித் திரைப்படங்களுள் ஒன்றான `சிவாஜி: தி பாஸ்’.

இந்த ஜூன் 15 அன்று, திரையரங்கங்களில் வெளியாகி 15 ஆண்டுகள் ஆனதைக் கொண்டாடுகிறது தமிழ் சினிமாவின் மிகப்பெரிய வெற்றித் திரைப்படங்களுள் ஒன்றான `சிவாஜி: தி பாஸ்’. இதனைக் கொண்டாடும் விதமாக, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், மறைந்த நடிகர் விவேக் ஆகியோர் நடித்த முக்கியமான காட்சி ஒன்றின் படப்பிடிப்புக் காட்சியை வெளியிட்டுள்ளது படத்தைத் தயாரித்த ஏவிஎம் ப்ரொடக்‌ஷன்ஸ் நிறுவனம். 

கடந்த 2007ஆம் ஆண்டு, ஜூன் 15 அன்று வெளியான `சிவாஜி: தி பாஸ்’ திரைப்படம் மக்களின் பெரு வரவேற்பைப் பெற்றதுடன், பெரியளவில் வெற்றியும் பெற்றது. பிரம்மாண்ட இயக்குநர் எனப் பெயர் எடுத்த சங்கர், தமிழின் டாப் நடிகராக இருந்த ரஜினிகாந்த் ஆகிய இருவரும் முதல் முறையாக இணைந்ததால் தயாரிப்பின் போதே இந்தத் திரைப்படம் பெரிதும் எதிர்பார்ப்புகளுடன் தொடங்கப்பட்டது. 

அமெரிக்காவில் இருந்து மென்பொருள் உருவாக்கத்தின் மூலமாக பணம் ஈட்டிய எஞ்சினீயர் ஒருவர் மீண்டும் இந்தியாவுக்குத் திரும்பி, இலவசமாக கல்வி, மருத்துவம் ஆகியவற்றை மக்களுக்கு வழங்க நினைக்கிறார். அவரை ஊழல்வாதிகளான அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் தடுக்க நினைக்க, அதனை அவர் எப்படி எதிர்க்கிறார், அவரது கனவு நிறைவேறியதா என்பதை பிரமாண்டமாகவும், சுவாரஸ்யமாகவும் பேசியிருந்தது `சிவாஜி: தி பாஸ்’ திரைப்படம். 

Video : 15 Years of Shivaji : வெளியாகி 15 ஆண்டுகளைக் கடந்த சூப்பர் ஸ்டாரின் `சிவாஜி’ தி பாஸ்.. இதுவரை வெளிவராத மேக்கிங் வீடியோ

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் `சிவாஜி’ என்று தனது சொந்தப் பெயரில் முதன்மைக் கதாபாத்திரமாக நடித்துள்ளார். மேலும் இந்தப் படத்தில் விவேக், ஷ்ரேயா சரண், சுமன், ரகுவரன், மணிவண்ணன், வடிவுக்கரசி முதலான நடிகர்கள் நடித்திருந்தனர். மேலும், இதில் ஒரு பாடலில் நடனம் ஆடியுள்ளார் நடிகை நயன்தாரா. இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். மேலும், இதன் சண்டைக் காட்சிகளை பீட்டர் ஹெயின் உருவாக்கியிருந்தார். ஒளிப்பதிவாளராக கே.வி.ஆனந்த், கலை இயக்குநராக தோட்டா தரணி ஆகியோர் பணியாற்றியிருந்தனர். 

2007ஆம் ஆண்டு வெளியான திரைப்படங்களிலேயே மிகப்பெரிய வெற்றியைப் பெற்று, `பிளாக்பஸ்டர்’ என அறிவிக்கப்பட்ட திரைப்படம், `சிவாஜி: தி பாஸ்’. ஊழல், கறுப்புப் பணம் ஆகியவற்றைப் பற்றி பேசிய இந்தத் திரைப்படம், பணமதிப்புநீக்கம் மூலமாக அதனை சரிசெய்ய முடியும் எனக் கூறியிருந்தது. 

Video : 15 Years of Shivaji : வெளியாகி 15 ஆண்டுகளைக் கடந்த சூப்பர் ஸ்டாரின் `சிவாஜி’ தி பாஸ்.. இதுவரை வெளிவராத மேக்கிங் வீடியோ

கடந்த 2007ஆம் ஆண்டுலேயே, இந்தியாவில் 1000 ரூபாய், 500 ரூபாய் நோட்டுகள் தடை செய்யப்பட வேண்டும் என்ற ஐடியா இந்தப் படத்தில் கூறப்பட்டிருந்தது. அதனைக் கடந்த 2016ஆம் ஆண்டு மோடி அரசு இந்தியாவில் அமல்படுத்தியது. எனினும், கறுப்புப் பணம் மீட்கப்படவில்லை எனப் பின்னர் மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

இந்தப் படத்தின் பாடல்களும், அதன் காட்சியமைப்புகளும் இன்றும் கொண்டாடப்படுகின்றன. மேலும், இந்தத் திரைப்படத்திற்காக முதன்முதலான மொட்டையடித்து `மொட்ட பாஸ்’ கெட்டப்பில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
"தொழில்நுட்பத்தை சமூகத்தின் நலனுக்காக பயன்படுத்த வேண்டும்" பிரதமர் மோடி பேச்சு!
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Namakkal woman bus fall video | பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண்! பதறவைக்கும் CCTV காட்சிTeam India Victory Parade | தோளில் உலகக் கோப்பை! இந்திய வீரர்களின் ENTRY! கட்டுக்கடங்காத கூட்டம்Subramanian Swamy | ”சோனியா, ராகுலுடன் டீல்! கொலை வழக்கு பயமா மோடி?” பற்றவைத்த சுப்ரமணியன் சுவாமிTN Cabinet Reshuffle | பதறும் அமைச்சர்கள்.. கட்டம் கட்டிய ஸ்டாலின்! அமைச்சரவையில் மாற்றம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
"தொழில்நுட்பத்தை சமூகத்தின் நலனுக்காக பயன்படுத்த வேண்டும்" பிரதமர் மோடி பேச்சு!
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
TRP Rating 26th Week: புது சீரியலுக்கு அடித்தது ஜாக்பாட்! கயலை தள்ளிவிட்டு  சிங்கநடை போட்ட சிங்கப்பெண்ணே! - இந்த வார டிஆர்பி நிலவரம்
TRP Rating 26th Week: புது சீரியலுக்கு அடித்தது ஜாக்பாட்! கயலை தள்ளிவிட்டு  சிங்கநடை போட்ட சிங்கப்பெண்ணே! - இந்த வார டிஆர்பி நிலவரம்
Pakistan Milk Price: என்னது! ஒரு லிட்டர் பால் விலை ரூ.370 ஆ? - அதிர்ச்சியில் பாகிஸ்தான் மக்கள்! காரணம் என்ன?
Pakistan Milk Price: என்னது! ஒரு லிட்டர் பால் விலை ரூ.370 ஆ? - அதிர்ச்சியில் பாகிஸ்தான் மக்கள்! காரணம் என்ன?
Team India Marine Drive: மிளிரும் டி20 உலகக் கோப்பை.. அதிரும் வான்கடே மைதானம்! வரிசை கட்டி நிற்கும் ரசிகர்கள்
Team India Marine Drive: மிளிரும் டி20 உலகக் கோப்பை.. அதிரும் வான்கடே மைதானம்! வரிசை கட்டி நிற்கும் ரசிகர்கள்
அப்போலோ மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட முன்னாள் துணை பிரதமர் எல்.கே. அத்வானி
அப்போலோ மருத்துவமனையில் இருந்து எல்.கே. அத்வானி டிஸ்சார்ஜ்!
Embed widget