Avatar Booking: ‘அவதார் 2’ புக்கிங் ஓப்பன்.. விறுவிறுவென விற்றுத்தீரும் டிக்கெட்டுகள்..விலை தெரியுமா?
Avatar Booking: அவதார் படம் 5 பாகங்களாக 2 ஆண்டுகள் இடைவெளியில் வெளிவரும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஹாலிவுட்டின் பிரமாண்ட படைப்பாக உருவாகியுள்ள அவதார் படத்தின் டிக்கெட் புக்கிங் சென்னையில் பல திரையரங்குகளில் தொடங்கியுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளை உள்ளடக்கிய இந்திய திரையுலகில் ஹாலிவுட் படங்கள் ஏற்படுத்திய தாக்கம் கொஞ்சம் நஞ்சமல்ல. அதானாலேயே தங்கள் மொழியில் உள்ள முன்னணி நடிகர்களுக்கு கொடுக்கும் வரவேற்பை ஹாலிவுட் படங்களுக்கும் ரசிகர்கள் கொடுக்கின்றனர். அந்த வகையில் கடந்த 2009 ஆம் ஆண்டு டிசம்பர் 18 ஆம் தேதி ஹாலிவுட்டின் பிரமாண்ட இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனின் “அவதார்” படம் வெளியானது.
கிராபிக்ஸ் காட்சிகள் என கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு தொழில் நுட்பத்தில் மிரட்டிய அவதார் படம் ஆஸ்கர் விருது விழாவில் சிறந்த ஒளிப்பதிவு, விஷூவல் எபெக்ட்ஸ், கலை அமைப்பு ஆகிய 3 பிரிவுகளில் விருதுகளைப் பெற்றது. மேலும் பாக்ஸ் ஆபீஸில் சுமார் 2.85 பில்லியன் அமெரிக்க டாலர்களை வசூல் செய்து சாதனைப் படைத்தது. இதனை இதுவரை எந்த படங்களும் முறியடிக்கவில்லை.
View this post on Instagram
இதனிடையே அவதார் படம் 5 பாகங்களாக 2 ஆண்டுகள் இடைவெளியில் வெளிவரும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் டிசம்பர் 16 ஆம் தேதி இப்படத்தின் 2 ஆம் பாகமான அவதார்: தி வே ஆப் வாட்டர் ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தின் ட்ரெய்லர்கள் கடந்த நவம்பர் 2 மற்றும் நவம்பர் 22 ஆம் தேதி வெளியானது.
Our home. Our family. Our fortress.
— Avatar (@officialavatar) November 24, 2022
Experience #AvatarTheWayOfWater only in theaters December 16. Get tickets now: https://t.co/9NiFEIpZTE pic.twitter.com/5GUcB7hNE4
இதேபோல் இந்தியாவின் கடந்த இரு தினங்களுக்கு முன்பு முன்பதிவு தொடங்கிய நிலையில், இன்று சென்னையில் அவதார் படத்தின் டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது. இப்படத்தை ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் காண ரசிகர்கள் ஆர்வம் கொண்டிருக்கின்றனர். சென்னையில் குறைந்தபட்ச டிக்கெட் விலை ரூ.100ல் இருந்து அதிகப்பட்சம் ரூ.500 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ள்ளது.