Cinema Round-up : அவதார் 2 - ன் புதிய ட்ரெய்லர்.. உறுதியான ஆர்.ஆர்.ஆர் 2.. ட்ரெண்டிங்கில் பூங்குழலி.. - பரபர கோலிவுட் செய்திகள்!
கோலிவுட்டில் கவனத்தை ஈர்த்திருக்கும் டாப் 5 செய்திகளை இங்கு பார்க்கலாம்.
இந்திய சினிமாவில் அடுத்தடுத்து பல படங்களின் அப்டேட்டுகள், தகவல்கள் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறது. அந்த வகையில் நேற்றைய தினம் வெளியான சுவாரஸ்யமான சினிமா தகவல்கள் குறித்து பார்க்கலாம்.
ஆர் ஆர் ஆர் பாகம் 2 :
மாவீரன், பாகுபலி போன்ற வெற்றி படங்களை இயக்கிய ராஜமெளலி, இந்த ஆண்டின் முன்பகுதியில் ஆர் ஆர் ஆர் எனும் படத்தை இயக்கி இருந்தார். இந்தப்படம் நல்ல வரவேற்பை பெற்று, பல விருதுகளை வென்றது. அத்துடன் இப்படமானது ஆஸ்கர் விருதிற்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. முன்பாக, ராஜமெளலி ஆர் ஆர் ஆர் 2 குறித்து பேசியிருந்தார். இப்போது அவரின் தந்தையான ராஜேந்திர பிரசாத், ஆர் ஆர் ஆர்-ன் இரண்டாவது பாகம் எடுக்கப்படும் என்பதை உறுதி செய்துள்ளார்.
ஆதிபுருஷ் படத்தை மிஞ்சும் ஹனுமான டீசர் :
The Ancients Shall Rise Again✊
— Prasanth Varma (@PrasanthVarma) November 21, 2022
Taking you all into a whole new surreal world of #HanuMan 💪#HanuManTeaser OUT NOW❤️🔥
- https://t.co/euGU07T7Ha
🌟ing @tejasajja123 @Actor_Amritha @Niran_Reddy @Chaitanyaniran @Primeshowtweets #PVCU#SuperHeroHanuMan pic.twitter.com/QCcSNvx1Nu
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் பான் இந்திய திரைப்படமாக வெளியாகவுள்ள 'ஹனுமான்' திரைப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.இப்படத்தில் மிகவும் பிரமாண்டமான விஷுவல் எஃபெக்ட்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது. படத்தின் டீசர் காட்சிகளே மிகவும் பிரமாண்டமாக எதிர்பார்ப்பை விடவும் அதிகமாக இருப்பதாக திரை ரசிகர்கள் தெரிவித்து வருகிறார்கள். இப்படம் டிசம்பர் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அவதார் 2 படத்தின் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது :
View this post on Instagram
டிசம்பர் 16 ஆம் தேதி வெளியாகவுள்ள ஹாலிவுட்டின் பிரம்மாண்ட படைப்பான அவதார் 2 படத்தின் ட்ரெய்லர் சில நாட்களுக்கு முன்பு வெளியானது. தற்போது இந்த படத்தின் மற்றொரு ட்ரெய்லர் வெளியாகிவுள்ளது. அத்துடன் இந்தியாவில் உள்ள சில திரையரங்குகளில், அவதார் 2 படத்தின் டிக்கெட் முன்பதிவு தொடங்கி நிலையில், பெங்களூரூ, அஹமதபாத் போன்ற பெரிய நகரங்களில் 600 ரூபாயிலிருந்து 1440 ரூபாய் வரை டிக்கெட் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது .
குறிப்பிட்ட சில திரையரங்குகளில் 24 மணிநேரமும் திரையிடப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த ஷோக்கள் காலை 12 மணியில் இருந்து தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜீவாவின் வரலாறு முக்கியம் படம்:
Our next exhilarating project #VaralaruMukkiyam is all set for Dec 9th release. @JiivaOfficial #Santhoshrajan @kashmira_9 @PragyaNagra @tsk_actor@chinnasamy73 @shaanrahman @sakthisaracam @srikanth_nb @vasukibhaskar @saregamasouth @DoneChannel1 @CtcMediaboy pic.twitter.com/zyykujjZgQ
— Super Good Films (@SuperGoodFilms_) November 21, 2022
நடிகர் ஜீவாவின் வெற்றி படங்களாக கருதப்படும் கச்சேரி ஆரம்பம், ரெளத்திரம் உள்ளிட்ட படங்களை சூப்பர் குட் ஃபிலிம்ஸ் தயாரித்து வழங்கியது. இந்நிலையில், பல வருடங்களுக்கு பிறகு, ஜீவாவின் வரலாறு முக்கியம் படத்தை தயாரித்து வழங்கவுள்ளது. இப்படம் குறித்த தகவல் ஒன்றை, சூப்பர் குட் ஃபிலிம்ஸ் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
ஒளியிலே மிளிரும் தேவதை ஐஸ்வர்யா லட்சுமி :
View this post on Instagram
தனுஷுடன் ஜகமே தந்திரம் படித்து பிரபலமான ஐஸ்வர்யா லட்சுமி, பொன்னியின் செல்வன் படத்தின் பூங்குழலி எனும் முக்கிய கதாபத்திரத்தில் நடித்தார். அடிக்கடி இன்ஸ்டாகிராமில் போட்டோக்களை பதிவு செய்து வரும் இவர், தற்போது பச்சை நிற புடவை அணிந்து ஒளியில் மிளிர்கிறார்.