மாருதி பலேனோ vs ஹூண்டாய் ஐ20: மைலேஜ், அம்சங்கள், பட்ஜெட்- உங்களுக்கு ஏற்ற கார் எது?
புதிய பலேனோவின் ஆரம்ப எக்ஸ் ஷோரூம் விலை ரூ.6.099 லட்சம் ஆகும். ஹூண்டாய் ஐ20 மாடலின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.5.99 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ரூ.6 முதல் 10 லட்சம் பட்ஜெட்டில் புதிய கார் வாங்க திட்டமிடுபவர்களுக்கு, மாருதி பலேனோ மற்றும் ஹூண்டாய் ஐ20 ஆகிய இரண்டும் சிறந்த தேர்வுகளாக உள்ளன. செப்டம்பர் 2026-ல் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய பலேனோ, புதிய இன்ஜின், மேம்பட்ட பாதுகாப்பு மற்றும் பல புதிய அம்சங்களைக் கொண்டுள்ளது. மறுபுறம், ஹூண்டாய் ஐ20 அதன் பிரீமியம் வடிவமைப்பு மற்றும் சிறப்பம்சங்களுக்கு ஏற்கனவே பெயர் பெற்றது.
இந்த இரு கார்களின் விலை மற்றும் அம்சங்களின் ஒப்பீடு இதோ:
விலை விவரங்கள்
புதிய பலேனோவின் ஆரம்ப எக்ஸ் ஷோரூம் விலை ரூ.6.099 லட்சம் ஆகும். ஹூண்டாய் ஐ20 மாடலின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.5.99 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இரு கார்களுக்கும் இடையே ஆரம்ப விலையில் பெரிய வித்தியாசம் இல்லை என்றாலும், வேரியண்ட் மற்றும் அம்சங்களுக்கு ஏற்ப விலை மாறுபடும்.
இன்ஜின் மற்றும் மைலேஜ்
புதிய பலேனோவில் 1.2 லிட்டர் Z12E பெட்ரோல் இன்ஜின் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மேனுவல் வேரியண்ட் லிட்டருக்கு 23.80 கி.மீ மைலேஜும், ஏஜிஎஸ் ஆட்டோமேட்டிக் வேரியண்ட் 24.77 கி.மீ மைலேஜும் தருவதாக நிறுவனம் சான்றளித்துள்ளது. பலேனோ S-CNG மாடலானது ஒரு கிலோவுக்கு 33.61 கி.மீ மைலேஜ் வழங்கும்.
ஹூண்டாய் ஐ20 காரிலும் 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் உள்ளது. இது 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஐவிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கிறது. இதன் ஐ20 என் லைன் மாடலில் மாறுபட்ட டர்போசார்ஜ்டு இன்ஜின் மற்றும் அதிக ஆற்றல் வாய்ந்த செட்டப் கொடுக்கப்பட்டுள்ளது.
வடிவமைப்பு மற்றும் சிறப்பம்சங்கள்
புதிய பலேனோவில் இந்த செக்மென்ட்டிலேயே முதல்முறையாக லெவல் 2 ADAS வசதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், வென்டிலேட்டட் முன் இருக்கைகள், 360 டிகிரி கேமரா, ஹெட்-அப் டிஸ்ப்ளே, வயர்லெஸ் சார்ஜர் மற்றும் 9-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆகியவை உள்ளன.
மறுபுறம் ஹூண்டாய் ஐ20 மாடலில் 10.25-இன்ச் டச்ஸ்கிரீன், வயர்லெஸ் சார்ஜர், சன்ரூஃப், கனெக்டட் கார் அம்சங்கள், 6 ஏர்பேக்குகள் மற்றும் சில வேரியண்ட்களில் போஸ் சவுண்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது.
அதிக மைலேஜ் மற்றும் சிஎன்ஜி தேவை உள்ளவர்களுக்கு பலேனோ சிறந்த தேர்வாக இருக்கும். பிரீமியம் அம்சங்கள் மற்றும் சிறந்த ஆட்டோமேட்டிக் டிரைவிங் அனுபவத்தை எதிர்பார்ப்பவர்கள் ஐ20 காரை வாங்கலாம். பட்ஜெட் மற்றும் பயன்பாட்டின் அடிப்படையில் உங்களுக்கு ஏற்றதை தேர்வு செய்யலாம். வாழ்த்துகள்!
ட்ரெண்டிங் செய்திகள்






















