மேலும் அறிய

Blue Star: காதல் டூ கல்யாணம்: அசோக் செல்வன் - கீர்த்தி பாண்டியனின் ப்ளூ ஸ்டார் படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

திருமணத்திற்கு பின் அசோக் செல்வன் மற்றும் கீர்த்தி பாண்டியன் இணைந்து நடித்து வெளியாகவுள்ள ப்ளூ ஸ்டார் படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு உள்ளது

அசோக் செல்வன் மற்றும் கீர்த்தி பாண்டியன் இணைந்து நடித்துள்ள ப்ளூ ஸ்டார் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. 

அசோக் செல்வன் - கீர்த்தி பாண்டியன் 

வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் நடிகர் அசோக் செல்வன் குறிப்பிடத் தகுந்தவர். ஓ மை கடவுளே, போர் தொழில் , நித்தம் ஒரு வானம் ட், தெகிடி என அவர் தேர்வ் செய்து நடித்து வரும் படங்கள் கவனமீர்க்கின்றன.  அசோக் செல்வனுக்கும் நடிகை கீர்த்தி பாணியனுக்கும் சமீபத்தில் திருமணம்  நடைபெற்றது. அசோக் செல்வனைப் போல் கீர்த்தி பாண்டியனும் தனது சினிமா பயணத்தை தொடங்கியுள்ளார், சமீபத்தில் அவர் நடித்த கண்ணகி திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. மேலும் அசோக் செல்வன் நடித்த சபா நாயகன் திரைப்படம் நல்ல விம்ரசனங்களைப் பெற்றது. இந்த இரண்டு படங்களும் ஒரே நாளில் வெளியாக இருந்தன, திருமணத்திற்கு பிறகு  கணவன் மனைவி நடித்த இரண்டு படங்கள் ஒரே நாளில் வெளியாவதை ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்தனர். ஆனால் ஒரு சில காரணங்களால் சபா நாயகன் திரைப்படம் தாமதமாக வெளியானது. 

ப்ளூ ஸ்டார்

அசோக் செல்வன் மற்றும் கீர்த்தி பாண்டியனை ஒரே சமயத்தில் திரையில் பார்க்கும் வகையில் இருவரும் இணைந்து நடித்துள்ள ப்ளூ ஸ்டார் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப் பட்டுள்ளது. அறிமுக இயக்குநர் ஜெய் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் அசோக் செல்வன் , சாந்தனு பாக்கியராஜ், கீர்த்தி பாண்டியன் உள்ளிட்டவர்கள்  நடித்துள்ளார்கள் . கோவிந்த் வசந்தா இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார் . சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் ’ரயிலின் ஒலிகள்’ பாடல் பயங்கரமாக வைரலானது. இதைத் தொடர்ந்து இரண்டாவது பாடலாக அரக்கோணம் பாடலும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

கிரிக்கெட்டை மையப்படுத்தி 90 களில் நடக்கும் கதைக்களத்தில் இந்தப் படம் உருவாகியிருக்கிறது. ப்ளூ ஸ்டார் படம் வரும் ஜனவரி 25 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தில் திரையரங்க  வெளியீட்டு உரிமத்தை சக்தி ஃபிலிம் ஃபாக்டரி பெற்றுள்ளது. நிஜ வாழ்க்கையில் கீர்த்தி பாண்டியன் மற்றும் அசோக் செல்வனின் கெமிஸ்ட்ரி அனைவரும் ரசிப்பது போல் திரையில் இவர்கள் இருவரின் கெமிஸ்ட்ரி அனைவரையும் கவரும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

மேலும் படிக்க : 2024 Big Budget Movies : அதிரப்போகும் பாக்ஸ் ஆஃபிஸ்... இந்த ஆண்டு வெளியாகும் பெரிய பட்ஜெட் திரைப்படங்கள்...

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்”என்னை கொல்ல போறாங்க” தலையில் கட்டுடன் சி.டி.ரவி! தட்டித் தூக்கிய POLICE”வெட்கமா இல்லையா ராகுல்” சுற்றிவளைத்த MP-க்கள்! கூலாக பதில் சொன்ன ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
Embed widget