Rajinikanth Thalaivar 170: நெருப்புடா... அருண்ராஜா காமராஜுடன் இணையும் சூப்பர்ஸ்டார்.. வலிமைக்கு பின் கால்பதிக்கும் போனி கபூர்.. சூப்பர் அப்டேட்ஸ்..
Rajinikanth 170 Movie: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 170-வது படத்தை பாடகர், பாடலாசிரியர், இயக்குநர் அருண்ராஜா காமராஜ் இயக்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த படமான #Thalaivar169 திரைப்படத்தை பீஸ்ட் படத்தின் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்க இருப்பதாக கடந்த சில நாட்களுக்கு அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியானது.இந்த நிலையில், தற்போது, இயக்குநர் நெல்சனை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 170-வது படத்தை பாடகர் பாடலாசிரியர் இயக்குநர் அருண்ராஜா காமராஜ்(arunraja kamaraj) இயக்கத்தில் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது, ஆர்ட்டிக்கிள் 15 இன் தமிழ் ரீமேக்கான உதயநிதி ஸ்டாலினின் நெஞ்சுக்கு நீதி படத்தை இயக்கி வரும் அருண்ராஜா சூப்பர் ஸ்டாருக்காக பிரத்யேகமாக ஒரு ஸ்கிரிப்டை உருவாக்கி இருக்கிறார். இந்த கதை குறித்து ஒரு நாள் அருண்ராஜா காமராஜ் தனது தற்போதைய திரைப்படத்தின் தயாரிப்பாளர்களான போனி கபூர் மற்றும் ராகுல் ஆகியோரிடம் தெரிவித்துள்ளார்.
BREAKING:🔥🔥#ArunKamaraj Director #Thalaivar170
— Bala (@Bala43602770) February 20, 2022
and will Produce By #BoneyKapoor pic.twitter.com/O5Mx5Pt2hF
இதைகேட்டு உற்சாகமடைந்த போனி கபூர் மற்றும் ராகுல் ஆகியோர் இணைந்து ரஜினிகாந்துடன் அருண்ராஜாவிற்கு கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டது. மூவரும் நடிகர் ரஜினிகாந்த் அவரது போயஸ் கார்டன் இல்லத்தில் சந்தித்தனர். அருண்ராஜாவின் கதையைக் கேட்ட ரஜினிகாந்த், ஸ்கிரிப்ட் தனக்குப் பிடித்திருப்பதாகவும், அதில் நடிக்க ஒப்புக்கொண்டதாகவும் கூறியுள்ளார்.
இயக்குநர் அருண்ராஜா மற்றும் ரஜினிகாந்த் ஏற்கனவே கபாலியில் நெருப்புடா பாடலை எழுதி பாடினார். அந்த பாடலும் மிகப்பெரிய ஹிட் அடித்தது. அதேபோல், காலா மற்றும் தர்பாரில் போன்ற படங்களில் அருண்ராஜா பாடலாசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.
முன்னதாக, இந்தியில் ஹிட்டான ‘ஆர்டிக்கிள் 15’ திரைப்படத்தை தமிழில் ரீமேக் செய்து ‘நெஞ்சுக்கு நீதி’ என்ற பெயரில் வெளியாக உள்ளது. இப்படத்தை அருண்ராஜா காமராஜ் இயக்க, உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடித்து வருகிறார். இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
மேலும், போனி கபூர் தற்போது வலிமை, நெஞ்சுக்கு நீதி, ஏகே 61 போன்ற படங்களை தொடர்ந்து ரஜினிகாந்தின் 170-வது படத்தையும் இயக்க இருக்கிறார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்