மேலும் அறிய

AV33 | ஷூட்டிங் ஸ்பாட்டில் காயமடைந்த அருண் விஜய் ! - சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட உருக்கமான பதிவு!

கிராமத்து கதை பின்ணணியில் உருவாகி வரும் இந்த படத்தில் அருண் விஜய் மற்றும் ஹரி முதன் முதலாக இணைந்து பணிபுரிந்து வருகின்றனர்

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகராக அறியப்பட்டாலும் தொடந்து தனக்கான அடையாளத்தை பெறுவதற்காக போராடிக்கொண்டிருக்கும் நடிகர் அருண் விஜய்.  1995 ஆம் ஆண்டு முதலே அருண் விஜய் நடித்துக்கொண்டிருந்தாலும், கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான என்னை அறிந்தால் திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய அந்தஸ்தை மக்கள் மத்தியில் வாங்கிக்கொடுத்தது.  அந்த படத்தில் அவர் ‘விக்டர்’ என்னும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அஜித்திற்கு வில்லனாக நடித்த அந்த கதாபாத்திரத்தை ரசிகர்கள் கொண்டாடினார்கள். மேலும் படம் பார்த்துவிட்டு தியேட்டருக்கு வந்த அவரை ரசிகர்கள் சூழந்துக்கொண்டு பாராட்டிய தருணத்தில் அவர் நெகிழ்ந்து அழுத புகைப்படங்களும் வீடியோக்களும் கூட சமூக வலைத்தளங்களை கலக்கின. 

View this post on Instagram
 
A post shared by Arun Vijay (@arunvijayno1)

தற்போது இயக்குநர் ஹரி இயக்கத்தில் அருண் விஜய்  33 (AV 33)  என்ற படத்தில் நடித்து வருகிறார். கிராமத்து கதை பின்ணணியில் உருவாகி வரும் இந்த படத்தில் அருண் விஜய் மற்றும் ஹரி முதன் முதலாக இணைந்து பணிபுரிந்து வருகின்றனர். இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது விறு விறுப்பாக நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில் அருண் விஜய்க்கு படப்பிடிப்பு தளத்தில்  காயம் ஏற்பட்டதாக அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக ஒரு மணி நேரம் படப்பிடிப்பு தளத்தில் கார்டியோ உடற்பயிற்சி செய்து ஓய்வெடுத்துக்கொண்டதாகவும். இந்த காயம் காரணமாக அடுத்த ஐந்து நாட்களுக்கு எவ்வித பளு தூக்கும் உடற்பயிற்சியும் தன்னால் செய்ய முடியாது என வருத்தமாக தெரிவித்துள்ளார் அருண் விஜய் . 

AV33 | ஷூட்டிங் ஸ்பாட்டில் காயமடைந்த அருண் விஜய் ! - சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட உருக்கமான பதிவு!
அருண் விஜய் மற்றும் ஹரி கூட்டணியில் உருவாகும் இந்த புதிய படம், கிராமத்து கதையை மையமாக  கொண்ட கதை. இந்த படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்து வருகிறார். அருண் விஜய்க்கு வில்லனாக பிரகாஷ் ராஜ் நடித்து வருகிறார். இது தவிர யோகி பாபு , ’குக் வித் கோமாளி ‘ புகழ் , ராதிகா சரத்குமார், கருடா ராம் உள்ளிட்டவர்களும் நடித்து வருகின்றனர்.  கொரோனா  முதல் அலையில் வழங்கப்பட்ட தளர்வுகளின் அடிப்படையில் கடந்த மார்ச் மாதம்  இந்த படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கின. ஆனால் இரண்டாம் அலையின் தாக்கம் காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்புகள் மீண்டும் தடைப்பட்டது. இந்நிலையில் படப்பிடிப்பு நடத்திக்கொள்ள மீண்டும் அரசு அனுமதி அளித்ததால் வருகிற  ஜூலை 28 ஆம் தேதி படப்பிடிப்பு நடத்திக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டு தற்போது படப்பிடிப்பு நடந்து வருகிறது.  ராமேஸ்வரம் , தூத்துக்குடி மாவட்டங்களின் சுற்றுவட்டார பகுதிகளில் இதன் முதற்கட்ட படப்பிடிப்புகள் நடைப்பெற்று வருகிறது. ஷூட்டிங் சமயத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் கூட சமீபத்தில் அருண் விஜய் தனது சமூக வலைத்தள பக்கங்களில் பதிவிட்டிருந்தார்.

தலைப்பு செய்திகள்

Mansoor Ali Khan: ஆண்மை இருக்கா.. நான் என்ன பிச்சையா கேட்டேன்.. சூர்யா, RJ பாலாஜியை விளாசிய மன்சூர் அலிகான்
Mansoor Ali Khan: ஆண்மை இருக்கா.. நான் என்ன பிச்சையா கேட்டேன்.. சூர்யா, RJ பாலாஜியை விளாசிய மன்சூர் அலிகான்
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
Viswanath & Sons Review: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
Actress Khushbu: தமிழால் தடுமாறிய காதல்.. விஜயால் கதறி அழுத மகள்.. நேர்காணலில் பகிர்ந்த குஷ்பு
Actress Khushbu: தமிழால் தடுமாறிய காதல்.. விஜயால் கதறி அழுத மகள்.. நேர்காணலில் பகிர்ந்த குஷ்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
விஜய்யிடம் ‘தகைசால் தமிழர்’ விருது பெற்ற கிருஷ்ணசாமி: குஷியில் காங்கிரஸ், பாமக! காரணம் என்ன?
விஜய்யிடம் ‘தகைசால் தமிழர்’ விருது பெற்ற கிருஷ்ணசாமி: குஷியில் காங்கிரஸ், பாமக! காரணம் என்ன?
Trisha: கோட்டையில் கொடியேற்றப்போகும் நண்பன் விஜய்.. நேரில் வந்த நடிகை த்ரிஷா!
Trisha: கோட்டையில் கொடியேற்றப்போகும் நண்பன் விஜய்.. நேரில் வந்த நடிகை த்ரிஷா!
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
Gold and silver rate today : சுதந்திர தினத்திலும் விடாமல் எகிறிய தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.? இன்றைய விலை இதோ..
சுதந்திர தினத்திலும் விடாமல் எகிறிய தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.? இன்றைய விலை இதோ..
Embed widget