மேலும் அறிய

Demonty Colony 2: ரசிகர்களை அச்சுறுத்தும் அருள்நிதி! டிமான்டி காலனி எப்போது ரிலீஸ் தெரியுமா?

அருள்நிதி நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள டிமான்டி காலனி 2ம் பாகம் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாக உள்ளது.

தமிழ் திரையுலகில் பேய் படங்களுக்கு என்று எப்போதும் தனி இடம் உண்டு. அந்த வகையில் 2015ம் ஆண்டு வெளியான டிமான்டி காலனி படத்திற்கு என்று தமிழ் சினிமாவில் தனி இடம் உண்டு. அஜய் ஞானமுத்து இயக்குனராக அறிமுகமான அந்த படம் நடிகர் அருள்நிதி திரைவாழ்க்கையில் மறக்க முடியாத வெற்றிப்படமாக அமைந்தது.

டிமான்டி காலனி 2ம் பாகம்:

அருள்நிதி மற்றும் அஜய் ஞானமுத்து இருவரது திரை வாழ்க்கையிலும் இந்த படம் மிகப்பெரிய வெற்றியைத் தந்தது. இதையடுத்து, இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய அஜய் ஞானமுத்துவிற்கு கோப்ரா படம் தோல்விப்படமாக அமைந்தது.

இந்த நிலையில், அஜய் ஞானமுத்து மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்ப டிமான்டி காலனியையே கையில் எடுத்தார். முதல் பாகத்தின் நாயகனான அருள்நிதியையே கதாநாயகனாக வைத்து தற்போது டிமான்டி காலனி இரண்டாம் பாகத்தை எடுத்துள்ளார். இந்த படத்திற்கான அறிவிப்பு வெளியானது முதலே பெரும் எதிர்பார்ப்பு எழுந்து வந்த நிலையில், தற்போது டிமான்டி காலனி படம் எப்போது வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சுதந்திர தின வெளியீடு:


வரும் ஆகஸ்ட் 15ம் தேதி டிமான்டி காலனி படம் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. சுதந்திர தின கொண்டாட்டமாக டிமான்டி காலனி 2ம் பாகம் வெளியாக இருப்பது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள இந்த படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிட உள்ளனர். இந்த படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார்.

இந்த படத்தில் அருள்நிதியுடன் சேர்ந்து அருண் பாண்டியன், பிரியா பவானிசங்கர், மீனாட்சி கோவிந்தராஜன், பிக்பாஸ் புகழ் அர்ச்சனா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். முதல் பாகத்துடன் தொடர்புள்ள வகையில் இந்த படத்தின் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. முதல் பாகத்தில் வில்லனாக நடித்து அசத்திய அன்டி ஜாஸ்கெலெய்னென் இந்த படத்திலும் நடித்துள்ளார்.

ஏற்கனவே டிமான்டி காலனி 2ம் பாகத்தின் ட்ரெயிலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்தது. இந்த படம் அருள்நிதிக்கும், அஜய் ஞானமுத்துவிற்கும் ஒரு கம்பேக் படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

சீன் திரைப்படத்தின் 3 நாள் வசூல் அறிவித்த படக்குழு...சூர்யா காட்டில் வசூல் மழைதான்
சீன் திரைப்படத்தின் 3 நாள் வசூல் அறிவித்த படக்குழு...சூர்யா காட்டில் வசூல் மழைதான்
பிரபுதேவா – வடிவேலு நடிப்பில் ‘பேங் பேங்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு
பிரபுதேவா – வடிவேலு நடிப்பில் ‘பேங் பேங்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு
அனிருத் - காவ்யா மாறன் திருமணம்.. கிரீஸ் புறப்பட்ட மு.க.ஸ்டாலின் குடும்பம்!
அனிருத் - காவ்யா மாறன் திருமணம்.. கிரீஸ் புறப்பட்ட மு.க.ஸ்டாலின் குடும்பம்!
தீபாவளிக்கு நமக்கு சாம்பார் தான்...முத்துக்குமரன் வீடியோவுக்கு வகிதா கொடுத்த ரியாக்‌ஷன்
தீபாவளிக்கு நமக்கு சாம்பார் தான்...முத்துக்குமரன் வீடியோவுக்கு வகிதா கொடுத்த ரியாக்‌ஷன்

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: செய்தியை கேட்டதும் ரொம்ப வேதனையா போச்சு.. ரூ.40 லட்சம் அறிவித்த முதல்வர்.. டைம் பார்த்து அடித்த இபிஎஸ்
CM Vijay: செய்தியை கேட்டதும் ரொம்ப வேதனையா போச்சு.. ரூ.40 லட்சம் அறிவித்த முதல்வர்.. டைம் பார்த்து அடித்த இபிஎஸ்
"உங்க ஊர்ல மழை இருக்கா?" - கனமழை எச்சரிக்கை மாவட்டங்களின் லிஸ்ட்டை வெளியிட்ட வானிலை!
துணை சபாநாயகர் அடித்தாரா? வதந்திகளை நம்ப வேண்டாம் - பாதிக்கப்பட்டவர் பரபரப்பு வீடியோ
துணை சபாநாயகர் அடித்தாரா? வதந்திகளை நம்ப வேண்டாம் - பாதிக்கப்பட்டவர் பரபரப்பு வீடியோ
DMK: தவெக ஆட்சியின் கொலை தீபாவளி..! 11 சம்பவங்கள் - லிஸ்ட் போட்டு கடுமையாக சாடிய திமுக
தவெக ஆட்சியின் கொலை தீபாவளி..! 11 சம்பவங்கள் - லிஸ்ட் போட்டு கடுமையாக சாடிய திமுக
"நான் அப்படி ஒரு புத்தகமே எழுதல.." மதுரை கலைஞர் நூலகத்தில் பொருளாதார நிபுணர் பெயரில் போலி புத்தகம்!
சீன் திரைப்படத்தின் 3 நாள் வசூல் அறிவித்த படக்குழு...சூர்யா காட்டில் வசூல் மழைதான்
சீன் திரைப்படத்தின் 3 நாள் வசூல் அறிவித்த படக்குழு...சூர்யா காட்டில் வசூல் மழைதான்
6 லட்சம் பேர் திரளும் பிரமாண்டம்..! கந்தசஷ்டிக்கு திருச்செந்தூரில் தடபுடல் ஏற்பாடுகள் - தண்ணீர் டூ போலீஸ்
6 லட்சம் பேர் திரளும் பிரமாண்டம்..! கந்தசஷ்டிக்கு திருச்செந்தூரில் தடபுடல் ஏற்பாடுகள் - தண்ணீர் டூ போலீஸ்
TVK Ravi Shankar: கெட்ட வார்த்தையில் திட்டி கண்மூடித்தனமாக தாக்கிய துணை சபாநாயகர்? வைரலாகும் வீடியோ!
TVK Ravi Shankar: கெட்ட வார்த்தையில் திட்டி கண்மூடித்தனமாக தாக்கிய துணை சபாநாயகர்? வைரலாகும் வீடியோ!
Embed widget