மேலும் அறிய

என்னை ஹீரோவாக வேண்டாம் என்றார்கள்.. உறுதியாக நின்ற இயக்குநர்..அர்ஜூன் தாஸ் பகிர்ந்த தகவல்

ஒன்ஸ் மோர் திரைப்படத்தில் தன்னை ஹீரோவாக நடிக்க வைக்க வேண்டாம் என பல தயாரிப்பாளர்கள் படத்தின் இயக்குநரிடம் கூறியதாக நடிகர் அர்ஜூன் தாஸ் தெரிவித்துள்ளார்

அர்ஜுன் தாஸ் ஹீரோவாக நடிக்க வேண்டாம் என பல தயாரிப்பு நிறுவனங்கள் கூறியபோதும், அவர்தான் இந்தக் கதையின் நாயகனாக நடிக்க வேண்டும் என்பதில் இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் உறுதியாக இருந்ததாக நடிகர் அர்ஜுன் தாஸ் தெரிவித்துள்ளார். ‘ஒன்ஸ் மோர்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் அவர் பகிர்ந்த இந்தத் தகவல் தற்போது கவனம் பெற்றுள்ளது.

மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் சார்பில் யுவராஜ் கணேசன் தயாரித்துள்ள ‘ஒன்ஸ் மோர்’ திரைப்படத்தை அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கியுள்ளார். அர்ஜுன் தாஸ், அதிதி ஷங்கர் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தில் மாடல் சோனா ஒலிக்கல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். காதல், உணர்வுகள் மற்றும் உறவுகளை மையமாகக் கொண்ட இப்படம் வரும் ஆகஸ்ட் 28ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

அர்ஜூன் தாஸ் வேண்டாம் என்ற தயாரிப்பாளர்கள்

இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா படக்குழுவினர் மற்றும் திரையுலகப் பிரபலங்கள் முன்னிலையில் நடைபெற்றது. விழாவில் பேசிய அர்ஜுன் தாஸ், இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் முதலில் படத்தின் ஒன்லைனை மட்டுமே தன்னிடம் கூறியதாக தெரிவித்தார். பின்னர் முழு திரைக்கதையையும் தயாரித்த இயக்குநர், பல தயாரிப்பு நிறுவனங்களிடம் கதையை எடுத்துச் சென்றுள்ளார். அப்போது, அர்ஜுன் தாஸை ஹீரோவாக நடிக்க வைக்க வேண்டாம் என்றும், வேறு கதாநாயகனை தேர்வு செய்யலாம் என்றும் சிலர் அறிவுறுத்தியதாக அவர் கூறினார்.

உறுதியாக இருந்த இயக்குநர்

ஆனால், ரகு கதாபாத்திரத்தில் அர்ஜுன் தாஸை மட்டுமே நடிக்க வைக்க வேண்டும் என்பதில் விக்னேஷ் ஸ்ரீகாந்த் உறுதியாக இருந்துள்ளார். தன்னை முழுமையாக நம்பி இந்தக் கதைக்காக நின்ற இயக்குநருக்கு அர்ஜுன் தாஸ் நன்றி தெரிவித்தார். ரகு கதாபாத்திரத்தை தன்னால் செய்ய முடியுமா என்று சில நேரங்களில் தனக்கே சந்தேகம் இருந்ததாகவும், ஆனால் இயக்குநர் தன் மீது முழுமையான நம்பிக்கை வைத்திருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கிய கைதி படத்தில் வில்லனாக மூலம் பரவலாக கவனமீர்த்தார் அர்ஜூன் தாஸ். இதனைத் தொடர்ந்து மாஸ்டர் , விக்ரம் ஆகிய படங்களில் வில்லனாக நடித்தார்.  அநீதி, ரசவாதி , பாம்ப் ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்தாலும் இந்த படங்கள் வசூல் ரீதியாக அவருக்கு கைகொடுக்கவில்லை. சமீபத்தில் வெளியான கான் சிட்டி திரைப்படம் மக்களிடையே ஓரளவு கவனமீர்த்தது. இந்த நிலையில் அடுத்தபடியாக வெளியாக இருக்கும் ஒன்ஸ் மோர் திரைப்படம் அர்ஜூன் தாஸை ஒரு தேர்ந்த ரொமாண்டிக் ஹீரோவாகவும் மக்கள் மனதில் பதிய வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Advertisement

தலைப்பு செய்திகள்

அதிமுக ஆட்சியில் கண்ணீர்...தவெக ஆட்சியில் அங்கீகாரம்...நெகிழ்ச்சியில் புஷ்பவனம் குப்புசாமி
அதிமுக ஆட்சியில் கண்ணீர்...தவெக ஆட்சியில் அங்கீகாரம்...நெகிழ்ச்சியில் புஷ்பவனம் குப்புசாமி
Vijay Sethupathi:
Vijay Sethupathi: "நான் சந்தோஷமா இருந்தால் காய்ச்சல் வரும்.." பத்தா வெற்றி விழாவில் விஜய் சேதுபதி
"என் பாடல்கள் சமுதாயத்திற்கு தீங்கா?" - விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து ரூ.5 லட்சம் நன்கொடை அளித்த அசல் கோலார்!
”போலி ஆபாச வீடியோ...பாலியல் வன்கொடுமைக்கு சமம்”... நடிகை ஜான்வி கபூர் ஆவேசம்
”போலி ஆபாச வீடியோ”...”பாலியல் வன்கொடுமைக்கு சமம்”... நடிகை ஜான்வி கபூர் ஆவேசம்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

கேப்டனை கொல்ல சதி மிகப்பெரிய கட்டிடம் டார்கெட் கோ பைலட் பகீர் வாக்குமூலம்
Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்
TVK MLA vs Cong MP | காங்.MP-தவெக MLA மோதல்! மெழுகுவர்த்தியை தட்டிவிட்ட MLA.. அமைச்சர் முன்பே வாக்குவாதம்
Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ABP Nadu Exclusive:
ABP Nadu Exclusive: "தவெக அரசுதான் தமிழ் உணர்வோடு செயல்படுகிறது.. கேட்காமலே பதவி.." புஷ்பவனம் குப்புசாமி ஏபிபி நாடுக்கு பிரத்யேக பேட்டி
"தொட்டு தொட்டுப் பேசும் சுல்தானா... இயல் இசைக்கு இனி நீதானா.." தவெக ஆட்சியில் புஷ்பவனம் குப்புசாமிக்கு முக்கிய பதவி!
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
GOLD LOAN : அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
New Car Launches in Oct.: டஸ்டர் ஹைப்ரிட் முதல் ஹூண்டாய் பேயான் வரை.. இந்த மாதம் வரிசைகட்டும் புதிய கார்கள்; முழு விவரம்
டஸ்டர் ஹைப்ரிட் முதல் ஹூண்டாய் பேயான் வரை.. இந்த மாதம் வரிசைகட்டும் புதிய கார்கள்; முழு விவரம்
Plague Scare In Russia: பிளேக் பீதியில் ரஷ்யா.! புதிய தொற்றால் பலியான ஆய்வக ஆராய்ச்சியாளர்; தனிமைக்குள்ளான நூற்றுக்கணக்கானோர்
பிளேக் பீதியில் ரஷ்யா.! புதிய தொற்றால் பலியான ஆய்வக ஆராய்ச்சியாளர்; தனிமைக்குள்ளான நூற்றுக்கணக்கானோர்
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
Embed widget