Aranthangi Nisha: ராகவா லாரன்ஸின் 'மாற்றம்' சேவையில் இணைந்த அறந்தாங்கி நிஷா...
Aranthangi Nisha joins Raghava Lawrence : நடிகர் ராகவா லாரன்ஸ் புதிதாக மே 1ம் தேதி துவங்க இருக்கும் 'மாற்றம்' சேவையில் இணைந்தவுள்ளார் அறந்தாங்கி நிஷா.
தமிழ் சினிமாவில் படிப்படியாக உயர்ந்து முன்னேறியவர்கள் பலர் உள்ளனர். அந்த வகையில் நடன இயக்குநராக இருந்து மெல்ல மெல்ல நடிகராகி தற்போது இயக்குநராக முன்னேறி தயாரிப்பாளராகவும் உயர்ந்தவர் ராகவா லாரன்ஸ். சினிமா மூலம் தான் சம்பாதிக்கும் பணத்தை கொண்டு பலரும் உதவி வருகிறார்.
ஏழை எளிய மாணவர்களின் கல்வி, மாற்றுத் திறனாளிகள் மற்றும் முதியவர்களுக்கான மருத்துவ உதவி, விவசாயிகளுக்கு உதவி இப்படி பலருக்கும் பல வகையில் தன்னால் முடிந்த அளவு உதவி செய்து வருகிறார். ஒரு அறக்கட்டளை மூலம் ஆதரவற்ற பிள்ளைகள் மற்றும் பல ஏழை எளிய மாணவர்களை படிக்க வைத்தார் ராகவா லாரன்ஸ். அந்த மாணவர்கள் தற்போது வளர்ந்து தன்னுடைய சொந்த காலில் நிற்கிறார்கள். ராகவா லாரன்ஸை பார்த்து வளர்ந்த அந்த மாணவர்கள் அவரின் வழியே பல பேருக்கு உதவிகளை செய்து வருகிறார்கள்.
உதவி என தேடி வருபவர்களுக்கு இல்லை என சொல்லாமல் தன்னால் முடிந்த அளவு உதவிக்கரம் நீட்டி வருகிறார். தேடி தேடி உதவி செய்து வந்த ராகவா லாரன்ஸ் தற்போது மேலும் ஒரு அறக்கட்டளையை உழைப்பாளர்கள் தினமான மே 1ம் தேதி துவங்க உள்ளார் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த அறக்கட்டளை மூலம் தன்னுடைய சேவையை விரிவுபடுத்த உள்ளார்.
லாரன்ஸ் மூலம் வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு முன்னேறிய மாணவர்களும் இந்த அறக்கட்டளை மூலம் மக்களுக்கு உதவ முன்வந்ததுள்ளார்கள். இது குறித்து தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் வீடியோ ஒன்றை போஸ்ட் செய்து இருந்தார். அந்த வீடியோவில் "உங்க எல்லாருடைய ஆசீர்வாதத்தால் 20 ஆண்டுகளுக்கு முன்னால் நான் போட்ட விதை இன்று மரமாகி இருக்கிறது" என கூறி அவர் விதையாக விதைத்த மாணவர்கள் இன்று மரமாக வளர்ந்து நல்ல நிலையில் இருக்கும் அனைவரும் லாரன்ஸ் அறக்கட்டளையில் இணைந்துள்ளனர். அதன் மூலம் அவர்களின் சம்பளத்தில் பாதி தொகையை அறக்கட்டளைக்கு வழங்குவதாக தெரிவித்த அந்த வீடியோவை சோசியல் மீடியாவில் பகிர்ந்து இருந்தார் நடிகர் ராகவா லாரன்ஸ்.
View this post on Instagram
அந்த வகையில் அறந்தாங்கி நிஷா வீடியோ ஒன்றை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் பகிர்ந்து இருந்தார். கல்வி, மருத்துவம், விவசாயம் என பல விஷயங்களுக்காக இல்லாதவர்களை தேடி தேடி சென்று தன்னால் இயன்றதை செய்யும் லாரன்ஸ் அண்ணா இப்போது பெரிய முயற்சியாக 'மாற்றம்' என்கிற சேவையை மே 1ம் தேதி முதல் துவங்க உள்ளார். அவருடன் இந்த மாற்றத்தில் நானும் இணைய போகிறேன். இனி புதிய புதிய மாற்றங்கள் வரப்போகிறது. யாருக்குமே இல்லை என சொல்லாமல் எல்லாருக்கும் இயன்றதை செய்ய போகிறோம்" என அந்த வீடியோவில் குறிப்பிட்டு இருந்தார்.
ராகவா லாரன்ஸ் எடுக்கும் இந்த புதிய முயற்சி வெற்றி பெற பலரும் அவருக்கு வாழ்த்துக்களை குவித்து வருகிறது.