ஆசிரமத்தில் தியானம்; பக்தர்களுக்கு போர்வை தானம்: குட்டி ஆன்மீகப் பயணம் சென்ற விராட் - அனுஷ்கா ஜோடி
அவ்வப்போது விராட் - அனுஷ்கா ஜோடி இந்த ஆசிரமத்துக்குச் சென்று தியானம் செய்தும், தர்ம காரியங்களில் ஈடுபட்டும் வருகின்றனர்.

பாலிவுட் பாப்பரசிக்களின் கண்ணில் மண்ணைத் தூவி விட்டு மதுரா, பிருந்தாவனில் உள்ள ஆசிரமத்துக்கு வருகை தந்த விராட் கோலி - அனுஷ்கா ஜோடி இணையத்தில் லைக்ஸ் அள்ளி வருகின்றனர்.
கிரிக்கெட் மற்றும் பாலிவுட் உலகில் அனைவராலும் ரசித்து கொண்டாடப்படும் க்யூட் ஜோடியாக விராட் கோலி - அனுஷ்கா திகழ்ந்து வருகின்றனர்.
எப்போதும் மீடியா வெளிச்சத்திலேயே இருக்கும் இந்த ஜோடி உத்தரகாண்ட் மாநிலம், மதுரா, பிருந்தாவனில் உள்ள பாபா நீம் கரோலி ஆசிரமத்துக்கு வருகை தருவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.
அவ்வப்போது விராட் - அனுஷ்கா ஜோடி இந்த ஆசிரமத்துக்குச் சென்று தியானம் செய்தும், தர்ம காரியங்களில் ஈடுபட்டும் வருகின்றனர்.
இந்நிலையில் பாலிவுட் பாப்பரசிக்களின் கண்களில் பட்டுவிடாமல், தற்போது மீண்டும் இந்த ஆசிரமத்துக்கு குடும்பமாகச் சென்று விராட் - அனுஷ்கா தியானம் செய்து வழிபட்டுள்ளனர்.
மேலும் வட மாநிலங்களை குளிர் வாட்டி வதைத்து வரும் நிலையில், அங்கிருந்த பக்தர்களுக்கும் ஏழைகளுக்கும் போர்வைகள் தானமாக வழங்கியுள்ளனர்.
அங்கிருந்த ஏழை, எளியோருக்கு பேட்டில் கையொப்பமிட்டும் விராட் வழங்கியுள்ள நிலையில், ஆசிரமத்துக்குள் இவர்கள் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் லைக்ஸ் அள்ளி வருகின்றன.
View this post on Instagram
முன்னதாக கடந்த நவம்பர் மாதம் தங்கள் வாமிகாவுடன் இதேபோல் உத்தரகாண்ட் ஆசிரமத்துக்கு வருகை தந்தது கவனமீர்த்தது.
அதேபோல் முன்னதாக புத்தாண்டுக்கு துபாய் சென்று குடும்பத்துடன் கொண்டாடி மகிழ்ந்த புகைப்படமும் இணையத்தில் வைரலானது.
அனுஷ்கா ஷர்மா தற்போது முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஜுலான் கோஸ்வாமியின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட சக்தா எக்ஸ்பிரஸ் என்ற வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். விரைவில் இந்தப் படம் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகவுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

