Anushka Sharma : சினிமாவில் இருந்து விலகும் அனுஷ்கா சர்மா... வருத்தத்தில் ரசிகர்கள்...இதுதான் காரணமா?
குழந்தையுடன் அதிக நேரம் செலவழிக்க விரும்புவதால் ஆண்டிக்கு ஒரு படம் மட்டுமே செய்யப்போகிறேன் என முடிவெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார் பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா.
உலகளவில் மிகவும் பிரபலமான தம்பதிகளாக விளங்குபவர்கள் பிரபல கிரிக்கெட் வீரர் விராட் கோலி மற்றும் பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா ஜோடி. 2013ம் ஆண்டு ஷாம்பூ விளம்பரம் ஒன்றில் இருவரும் இணைந்து நடிக்கும் போது இருவருக்கும் இடையில் நட்பு ஏற்பட்டு அது டேட்டிங் வரை சென்று 2017ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் இருவரும் 2021ம் ஆண்டு தங்களின் மகள் வாமிகாவை வரவேற்றனர்.
சிறந்த நடிகை :
பாலிவுட் திரையுலகில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தவர் நடிகை அனுஷ்கா சர்மா. அவர் தான் நடிக்கும் படங்களின் கதாபாத்திரங்களை மிகவும் கவனத்துடன் தேர்ந்து எடுத்து நடித்து வருகிறார். தனது வசீரகமான தோற்றம் மற்றும் நடிப்பு திறமையால் ஏராளமான ரசிகர்களை கவர்ந்த அனுஷ்கா சர்மா ஒரு புதிய முடிவை எடுத்துள்ளார். இது அவரின் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
வாமிகாவிற்கு முன்னுரிமை :
சமீபத்தில் நடைபெற்ற நேர்காணல் ஒன்றில் இனிமேல் குறைவான படங்களில் மட்டுமே கவனம் செலுத்த போவதாக தெரிவித்துள்ளார். தனது மகள் வாமிகாவிற்கு முன்னுரிமை கொடுக்கும் நோக்கத்திலும் அவள் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காகவும் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறியுள்ளார். தனது பிஸியான ஷெட்யூல் காரணமாக குழந்தையுடன் அதிக நேரம் செலவழிக்க முடியாததால் தனது ஷெட்யூலை சற்று குறைத்து கொள்ள விரும்புகிறார். ஆண்டிற்கு ஒரு படம் என சுருக்கிக்கொள்ள போவதாக தெரிவித்துள்ளார்.
ஆண்டிற்கு ஒரு படம் :
கணவர் விராட் கோலியும் அனுஷ்காவும் சேர்ந்து எடுத்த முடிவின் படி குழந்தைக்கு அம்மாவின் அரவணைப்பு அதிகம் தேவை என்பதை உணர்ந்து ஆண்டிற்கு ஒரு படத்தில் மட்டுமே நடிப்பதால் குழந்தையின் தேவைகளை பூர்த்தி செய்ய முடியும் என்பதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். ஒரு தந்தையாக விராட் கோலி சிறப்பாக செய்யப்படுகிறார் அதை போலவே ஒரு தாயாக இருந்து நானும் எனது கடமைகளை செய்ய வேண்டும் என விரும்புகிறேன் எனவும் அனுஷ்கா கூறியுள்ளார்.
காலத்தின் கட்டாயம் :
மேலும் அனுஷ்கா கூறுகையில் நடிப்பின் மீது எனக்கு மிகுதியான விருப்பம் இருந்தாலும் காலத்தின் கட்டாயத்தால் நான் அதை கொஞ்சம் குறைத்துக் கொள்கிறேன். வருடத்திற்கு ஒரு படம் செய்வதால் வீட்டிலும் குழந்தையுடன் இருக்க அதிக நேரம் கிடைக்கும். விராட்டும் இதையே தான் செய்கிறார். நாங்கள் இந்த வாழ்க்கையில் சந்தோஷமாகவும் திருப்தியாகவும் இருக்கிறோம்" எனத் தெரிவித்து இருந்தார்.
கிரிக்கெட் வீரர் வாழ்க்கை வரலாறு :
சிறப்பான நடிப்பிற்காக, சக்திவாய்ந்த கதாபாத்திரங்களில் நடித்ததற்காக என்றும் திரையுலகத்தினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அதிகம் மதிக்கப்படுபவர் அனுஷ்கா சர்மா. நடிப்பின் மீது அவருக்கு இருக்கும் காதலை வெளிப்படுத்தினாலும் திரையுலக வாழ்க்கையையும், தனிப்பட்ட வாழ்க்கையையும் சமநிலையில் வைத்திருக்க விரும்புகிறார். வாமிகாவின் விஷயத்தில் கணவன் மனைவி இருவரும் மிகவும் கண்டிப்புடன் இருக்கிறார்கள். குழந்தையின் புகைப்படத்தை கூட இதுவரையில் சோசியல் மீடியாவில் வெளியிடவில்லை.
முன்னதாக இந்த ஆண்டு பிரான்சில் நடைபெற்ற கேன்ஸ் விழாவில் ஐவரி ரிச்சர்ட் க்வின் கோச்சர் கவுனில் மிகவும் அழகாக தோற்றமளித்தார். தற்போது 'சக்தா எக்ஸ்பிரஸ்' படத்தில் நடித்து வருகிறார். முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஜூலன் கோஸ்வாமியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்ட விளையாட்டை மையப்படுத்திய சார்ந்த படத்தில் நடித்து வருகிறார். இப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் பிரத்யேகமாக ஸ்ட்ரீமிங் செய்யப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.