Anushka Sharma: பல கோடிகளுக்கு ஓடிடி நிறுவனங்களுடன் ஒப்பந்தம் - அனுஷ்கா ஷர்மா புதிய ப்ளான்
அடுத்தடுத்த வருடங்களில், அமேசான், நெட்ப்ளிக்ஸ் நிறுவனங்களுடன் இணைந்து திரைப்படங்கள் மற்றும் வெப் சீரீஸ்கள் தயாரிக்க உள்ளதாக அனுஷ்கா ஷர்மா நிறுவனம் தெரிவித்துள்ளது.
பிரபல பாலிவுட் நடிகையும், கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் மனைவியுமான அனுஷ்கா ஷர்மா, க்ளீன் ஸ்லேட் ஃபிலிம்ஸ் என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். ஓடிடி தளத்தின் முன்னணி நிறுவனங்களான அமேசான் மற்றும் நெட்ப்ளிக்ஸோடு இணைந்து அனுஷ்கா ஷர்மா படங்கள் தயாரிக்க இருக்கிறார்.
நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பல துறைகள் சவாலான சூழலை எதிர்க்கொண்டுள்ளன. அதில் சினிமா துறையும் அடங்கும். இதனால், தமிழ் திரையுலகம் மட்டுமல்லாது ஒட்டுமொத்த இந்திய திரையுலகமும் பல சிக்கல்களை எதிர்க்கொண்டு வருகிறது. இந்நிலையில் வெளியீட்டிற்காக காத்திருந்த சிறு மற்றும் பெரு பட்ஜெட் படங்கள் அனைத்தும் நஷ்டத்தை சந்திக்கும் நிலை ஏற்பட்டதால், அவற்றை ஓடிடி தளங்களில் வெளியிட்டு வருகின்றனர் படக்குழுவினர்.
ஓடிடியில் வெளியிடப்படும் படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு உள்ளது. இந்நிலையில், தனது சகோதரன் கர்னேஷ் ஷர்மாவுடன் இணைந்து நடத்தி வரும் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை, அமேசான், நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளங்களோடு ஒப்பந்தம் செய்திருக்கிறார் அனுஷ்கா ஷர்மா. அதன்படி, கிட்டத்தட்ட 400 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்தடுத்த வருடங்களில், அமேசான், நெட்ப்ளிக்ஸ் நிறுவனங்களுடன் இணைந்து திரைப்படங்கள் மற்றும் வெப் சீரீஸ்கள் தயாரிக்க உள்ளதாக அனுஷ்கா ஷர்மா நிறுவனம் தெரிவித்துள்ளது.
All aboard the Chakda ‘Xpress! Get ready for a journey of a lifetime with the greatest fast bowler @JhulanG10 herself🎉🥳 https://t.co/Lb4mv1XM8y
— Netflix India (@NetflixIndia) January 6, 2022
இப்போது க்ளீன் ஸ்லேட் ஃபிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் அனுஷ்கா ஷர்மா நடித்து வரும் 'சக்தா எக்ஸ்பிரஸ்' படத்தை தயாரித்துள்ளது. இந்தப் படம் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகவுள்ளது. இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஜுலன் கோஸ்வாமியின் கதாப்பாத்திரத்தில் அவர் நடித்திருக்கிறார்.
2018ஆம் ஆண்டு இயக்குநர் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் அனுஷ்கா ஷர்மா நடிப்பில் வெளியான ஜீரோ படத்துக்கு பிறகு அவர் நடிக்கும் பெரிய படமாக கோஸ்வாமியின் வாழ்க்கை வரலாறு படம் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்