The Kerala Story: கேரளா ஸ்டோரி ஒரு பிரச்சாரப் படம்: அனுராக் கஷ்யப் விமர்சனம்
தி கேரளா ஸ்டோரி திரைப்படம் ஒரு பிரச்சாரப் படம் என்று விமர்சித்துள்ளார் இயக்குநர் அனுராக் கஷ்யப்.இதற்கு முன் கமல்ஹாசன் இந்தப் படத்தை விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
![The Kerala Story: கேரளா ஸ்டோரி ஒரு பிரச்சாரப் படம்: அனுராக் கஷ்யப் விமர்சனம் anurag kashyab criticizes the kerala story movies as fake propaganda The Kerala Story: கேரளா ஸ்டோரி ஒரு பிரச்சாரப் படம்: அனுராக் கஷ்யப் விமர்சனம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/29/ccf111350076d784960be4f8943116031685377475225571_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
உலகநாயகன் கமல்ஹாசன் தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை விமர்சித்ததைத் தொடர்ந்து தற்போது பாலிவுட் இயக்குனர் அனுராக் கஷ்யப் படம் குறித்த தனது விமர்சனத்தை பதிவு செய்திருக்கிறார்.
வெளியாகி கிட்டதட்ட ஒரு மாத காலம் ஆகியும் தி கேரளா ஸ்டோரி ஏதோ வகையில் விமர்சனங்களை எதிர்கொண்டேதான் வருகிறது.ஒரு பக்கம் படம் பெரிய வெற்றியடைந்தததாகவும் 200 கோடிக்குமேல் வசூல் செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கும் நிலையில் படத்தின் மீதான விமர்சனம் இன்னும் மாறாமல் தான் இருக்கிறது.
தி கேரளா ஸ்டோரி இஸ்லாமிய மத்தத்திற்கு எதிராக வெறுப்பு பிரச்சாரம் செய்வதாக அந்தப் படத்தின் மேல் விமர்சனங்கள் படத்தின் ட்ரெய்லர் வெளியான நாளில் இருந்து வைக்கப்படுகின்றன. மேலும் மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் தி கேரளா ஸ்டோரி படம் தடைசெய்யப்பட்டது. பல மாநிலங்களில் படத்தை வெளியிடுவதற்கு எதிரான போராட்டங்கள் வெடித்தன. அண்மையில் சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற உலகநாயகன் கமல்ஹாசன் கேரளா ஸ்டோரி ஒரு பிரச்சாரத் திரைப்படம் என்றும் பிரச்சாரத் திரைப்படங்களுக்கு தான் முற்றிலும் எதிரானவர் என்றும் கருத்துத் தெரிவித்தைருந்தார்.
கமல்ஹாசனைத் தொடர்ந்து தர்போது பாலிவுட் இயக்குனர் அனுராக் கஷ்யப் தி கேரளா ஸ்டோரி படத்தின் மீதான தன் விமர்சனத்தை பதிவுசெய்துள்ளார். ஆரம்பத்தில் தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை தடை செய்தபோது தனது ட்விட்டர் பக்கத்தில் “ஒரு படம் எவ்வளவு மோசமானதாக இருந்தாலும் அதை தடை செய்வதற்கு தான் எதிரானவர்” என்று எதிர்ப்புத் தெரிவித்தார். தற்போது ” தி கேரளா ஸ்டோரி ஒரு பிரச்சாரப் படம். இன்றைய சூழலில் நாம் அரசியலில் இருந்து தப்ப முடியாது. அரசியல் இல்லாத சினிமா மிக கடினமான ஒன்று. அதே நேரத்தில் கேரளா ஸ்டோரி மாதிரியான பிரச்சார சினிமாக்களை நான் ஆதரிக்க மாட்டேன். படங்களை தடை செய்வதற்கு எதிரானவன் நான். மறுபக்கம் இந்த மாதிரியான பிரச்சார சினிமாக்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நானும் ஒரு பிரச்சார சினிமாவை எடுக்க விரும்பவில்லை” என தன் தரப்பை கூறியுள்ளார் அனுராக் கஷ்யப்.
அனுராக் கஷ்யம் இயக்கியிருக்கு கென்னடி திரைப்படம் ஃபிரான்சில் நடந்த சர்வதேச கான் திரைப்பட விழாவில் முதல் முறையாக திரையிடப்பட்டது. ராஹுல் பட் , சன்னி லியோன் ஆகியவர்கள் நடித்திருக்கிறார்கள். கென்னடி படத்தில் ஆரமபத்தில் சியான் விக்ரமை நடிக்க திட்டமிருந்ததாகவும் தெரிவித்தார் அனுராக் கஷ்யப். ஆனால் சில காரணங்களால் இந்தப் படத்தில் விக்ரம் நடிக்க முடியாமல் போனதற்கான விளக்கமும் விக்ரம் சார்பில் தரப்பட்டது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)