Annaatthe | 'அண்ணாத்த' செகண்ட் லுக் போஸ்டர்ல இதை கவனிச்சீங்களா ? இயக்குநர் சிவாகொடுத்த சர்ப்ரைஸ்!
மோஷன் போஸ்டரில் ரஜினிகாந்த் ராயல் எண்ஃபீல்ட் பைக்கில் கோபமாக வருவது போல வடிமைத்திருப்பார்கள். அதையே சகெண்ட் லுக் போஸ்டர் பைக்கில் அரிவாளுடன் ரஜினி அமர்ந்திருப்பது போல வெளியிட்டிருந்தனர்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த நடிப்பில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் , குஷ்பு , மீனா , பிரகாஷ்ராஜ் , ஜகபதி பாபு என மாபெறும் நட்சத்திர பட்டாளங்களில் கூட்டணியில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அண்ணாத்த’ . இந்த திரைப்படத்தை இயக்குநர் சிவா இயக்கியுள்ளார். படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க டி.இமான் இசையமைத்துள்ளார். இந்நிலையில் மிகவும் எதிர்பாக்கப்பட்ட அண்ணாத்த படத்தின் பர்ஸ்ட் லுக் விநாயகர் சதுர்த்தியான நேற்று காலை 11 மணிக்கு வெளியானது, அதே போல படத்தின் மோஷன் போஸ்டர் மாலை 6 மணிக்கு வெளியாகி ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியது.ரசிகர்கள் மட்டுமல்லாமல் திரை பிரபலங்களும் போஸ்டரை கொண்டாடி வருகின்றனர்.
#AnnaattheFirstLook @rajinikanth @directorsiva #Nayanthara @KeerthyOfficial @immancomposer @khushsundar #Meena @sooriofficial @AntonyLRuben @dhilipaction @vetrivisuals#AnnaattheDeepavali pic.twitter.com/pkXGE022di
— Sun Pictures (@sunpictures) September 10, 2021
அண்ணாத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர்கள் இன்றும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வகையில் மோஷன் போஸ்டரில் ரஜினிகாந்த் ராயல் எண்ஃபீல்ட் பைக்கில் வருவது போல வடிமைத்திருப்பார்கள். அதையே சகெண்ட் லுக் போஸ்டர் பைக்கில் அரிவாளுடன் ரஜினி அமர்ந்திருப்பது போல வெளியிட்டிருந்தனர். அந்த பைக்கில் எண்ணை சிலர் நோட் செய்திருக்க தவறியிருப்பீர்கள் WB 03 SS 1212 என இருக்கும். இதில் SS என்பது SUPER STAR ஐயும் 1212 என்பது ரஜினிகாந்த் பிறந்த நாள் மற்றும் மாதங்களை குறிப்பதாக அமைந்துள்ளது. இயக்குநர் சிவா ரஜினி ரசிர்களுக்காவே இப்படியான ஹிட்டன் செட்டப் ஒன்றை வடிவமைத்துள்ளார். இதையும் ரஜினி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.அண்ணாத்த படம் நவம்பர் மாதம் 4-ந் தேதி தீபாவளி வெளியீடாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்நிலையில் ரஜினியின் அடுத்தபடத்தை யாரோ ஒரு இளம் இயக்குநர் ஒருவருக்கு கொடுக்க இருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் ரஜினி அடுத்தடுத்து இரண்டு படங்களில் நடிக்கப்போவதாக அவருக்கு நெருக்கமானவர்களிடம் பகிர்ந்து கொண்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ரஜினிகாந்தின் அடுத்த படம் அவரது 169-வது படம் . 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ இயக்குநர் தேசிங் பெரியசாமி மற்றும் கார்த்திக் சுப்புராஜ் ஆகியோர் தங்கள் கதைகளை ரஜினிகாந்திடம் விவரித்ததாக கூறப்படுகிறது, ஆனால் ரஜினிகாந்த் இன்னும் 'தலைவர் 169' படத்திற்கான இயக்குநரை தேர்வு செய்யவில்லை.இந்நிலையில் இயக்குநர் தேசிங் பெரியசாமி தான் இயக்கப்போவதில்லை என்ற அதிகாரப்பூர்வ தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார் . இதனை தொடர்ந்து நடிகர் தனுஷ் ரஜினியின் அடுத்த படத்தை இயக்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தனுஷ் இதற்கு முன்பு பவர் பாண்டி படத்தை இயக்கினார் என்பது நாம் அறிந்ததே. அடுத்து ரஜினியை இயக்கப்போவது யார் என்ற அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது