Angadi Theru Sindhu: சோகத்தில் திரையுலகம்.. புற்றுநோயுடன் நீண்ட போராட்டம்.. அங்காடித் தெரு நடிகை சிந்து மறைவு..
அங்காடித் தெரு படத்தில் நடித்திருந்த நடிகை சிந்து, இன்று அதிகாலை 2.15 மணியளவில் ’அங்காடி தெரு’ சிந்து இயற்கை எய்தினார்.
![Angadi Theru Sindhu: சோகத்தில் திரையுலகம்.. புற்றுநோயுடன் நீண்ட போராட்டம்.. அங்காடித் தெரு நடிகை சிந்து மறைவு.. angadi theru Sindhu: Actress Sindhu, who acted in the film angadi theru, died today at 2.15 am Angadi Theru Sindhu: சோகத்தில் திரையுலகம்.. புற்றுநோயுடன் நீண்ட போராட்டம்.. அங்காடித் தெரு நடிகை சிந்து மறைவு..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/07/7829f040be51f47414f67d3258bb69cc1691374912425571_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
இயக்குநர் வசந்தபாலன் இயக்கத்தில் கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியான படம் அங்காடித் தெரு. இந்த படத்தில் மகேஷ், அஞ்சலி உள்ளிட்ட பலரும் நடித்த நிலையில், இந்த படம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது.
View this post on Instagram
இந்த படத்தில் நடித்திருந்த நடிகை சிந்து, இன்று அதிகாலை 2.15 மணியளவில் ’அங்காடி தெரு’ சிந்து இயற்கை எய்தினார் என்னும் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து நடிகை கொட்டாச்சி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட பதிவில், “இன்று அதிகாலை 2.15 அளவில் திரைப்பட நடிகை அங்காடி தெரு சிந்து இயற்கை எய்தினார். அவர், ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்” என குறிப்பிட்டு இருந்தார்.
புற்றுநோய் பாதிப்பு:
அங்காடித் தெரு படத்தின் மூலம் பிரபலமானவர் சிந்து. இவர் அங்காடித் தெருவை தொடர்ந்து பல்வேறு தமிழ் படங்கள் மற்றும் சீரியல்களிலும் நடித்துள்ளார்.
கடந்த 2020 ம் ஆண்டு தனக்கு மார்பக புற்றுநோய் பிரச்சினை இருப்பதாக ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அந்த வீடியோ கடந்த சில ஆண்டுகளாகவே எனக்கு மார்பக புற்றுநோய் பாதிப்பு இருந்து வருகிறது. இந்த நோயுக்கு சிகிச்சை பெற பண உதவி வேண்டும் என தெரிவித்திருந்தார். இதையடுத்து, இவருக்கு ராகவா லாரன்ஸ், தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், ரோபோ ஷங்கர் உள்ளிட்ட பலரும் உதவி செய்தனர். இந்தநிலையில், நடிகை சிந்து இன்று அதிகாலை மரணமடைந்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)