DD vs Nayanthara: ”என் புடவை கலர்ல நீ கட்டலாமா?” நயன்தாரா இப்படி தான் சொன்னாங்க! சர்ச்சையான பேட்டி
நயன்தாரா டிடியை திட்டியதாகவும் பூஜை முழுவதும் கடும் கோபத்தில் இருந்ததாகவும் செய்திகள் வெளியாகின.. இதுக்குறித்து டிடி விளக்கமளித்துள்ளது கவனம் பெற்றுள்ளது.

ஒரு ஆங்கர் நீ நான் கட்டுற கலர்ல புடவை கட்டலாமா? என நயன்தாரா பிரபல தொகுப்பாளனி டிடி ய பார்த்து கேட்க, அட என்னப்பா ஒரு சேலையால இவ்வளவு பெரிய பஞ்சாயத்தானு சொல்கிற அளவுக்கு இந்த பிரச்சனையானது மூக்குத்தி அம்மன் 2 திரைப்பட பூஜையில் சர்ச்சை வெடித்தது. மேலும் அந்த விழாவில் நயன்தாரா டிடியை திட்டியதாகவும் பூஜை முழுவதும் கடும் கோபத்தில் இருந்ததாகவும் செய்திகள் வெளியாகின.. இதுக்குறித்து டிடி விளக்கமளித்துள்ளது கவனம் பெற்றுள்ளது.
டிடி-நயன்தாரா
கடந்த ஆண்டு ஒரு நிகழ்ச்சியில் பேசிய டிடி ஒரு பெரிய பிரபல நடிகை என்னை என்ன விட நீ நல்லா ட்ரெஸ் இருக்க, வேற டிரஸ் இருந்தா மாத்திகோங்க என்று கூறியதாக ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். அது நயன்தாரா தான் என்று பலறும் பல விதமாக பேச டிடி நயன்தாரா ஒரே மாதிரியான உடைகளை அணிந்திருக்கும் புகைப்படங்களை ட்ரெண்ட் செய்தனர்.
டிடி விளக்கம்:
இந்த நிலையில் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக டிடி இதுக்குறித்து விளக்கமளித்துள்ளார். ஒரு நேர்க்காணலில் இது குறித்து பேசிய டிடி நான் ஒரு ஹீரோயின் என்ன டிரஸ் மாத்த சொல்லிட்டாங்க ன்னு சொன்னேன் ஆனா பாவம் நயன்தாரா அவங்கதான் அந்த ஹீரோயின் அப்படின்னு எல்லா சேனலையும் எழுத ஆரம்பிச்சுட்டாங்க அது எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்தது .அந்த ஹீரோயின் நயன்தாராவே கிடையாது. அது மட்டும் இல்லாமல் நானும் நயனும் எடுத்த புகைப்படத்தை எல்லாம் ஒன்னா போட்டு அதெல்லாம் ட்ரெண்ட் பண்ணாங்க. இதுக்கும் அதுக்கும் சம்பந்தமே கிடையாது.
இப்படிலாம் எழுதறாங்களே அப்படின்னு எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும். இது அவங்க இல்லன்னு நான் விளக்கம் கொடுத்தாலும் நயன்தாரா சொல்லி தான் நான் விளக்கம் கொடுக்கிறேன் அப்படின்னு எழுதுவாங்க. எனக்கு விளக்கம் கொடுக்கவும் பயமா இருந்துச்சு. அதைப்பற்றி அமைதியாக இருக்கவும் என்னால முடியல சமீபத்துல அவங்க படத்தோட நிகழ்ச்சியை நான் தொகுத்த போது அன்னைக்கு பண்ணிட்டு வந்த டிரஸ் ரொம்ப சூப்பரா இருந்துச்சுன்னு வீட்டுக்கு போயிட்டு எனக்கு மெசேஜ் பண்ணாங்க . இந்த மாதிரி ஒருத்தவங்கள இப்படி கஷ்டப்படுத்துறாங்கலேனு நான் ரொம்ப வருத்தப்பட்டேன். இந்த சேனல் மேடையில தான் ஒரு ஹீரோயின் அப்படின்னு நான் சொன்னேன் அந்த ஹீரோயின் நயன்தாரா இல்லன்னு அதே மேடையில் தெரியப்படுத்தறேன் என்று டிடி விளக்கம் கொடுத்துள்ளார்.






















