ரஜினி-மீனா இணைந்த முதல் படம்... 38 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் வெளியான ‛அன்புள்ள ரஜினிகாந்த்’!
Classic Movie: அன்புள்ள ரஜினிகாந்த் திரைப்படம் வெளியாகி சுமார் 38 ஆண்டுகள் நிறைவுபெற்றாலும் அன்றும் இன்றும் என்றும் தமிழ் சினிமா ரசிகர்களின் ஃபேவரட் திரைப்படம்.
ரஜினி அங்கிள் எங்க இருக்கீங்க... 38 ஆண்டுகள் கடந்த பின்னும் தேடும் ரசிகர்கள்
1984 ம் ஆண்டு ஆகஸ்ட் 2 ம் தேதி கே. நடராஜ் இயக்கத்தில் எம். எஸ். அக்பர் தூயவன் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் அன்புள்ள ரஜினிகாந்த். இப்படம் வெளியாகி சுமார் 38 ஆண்டுகள் நிறைவுபெற்றாலும் அன்றும் இன்றும் என்றும் தமிழ் சினிமா ரசிகர்களின் ஃபேவரட் திரைப்படம்.
இந்த திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கதாபாத்திரமாகவே நடித்திருந்தார். நடிகை அம்பிகா முக்கிய கதாபாத்திரத்தில் ரோஸியின் தயாராக நடித்திருப்பார். இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் குழந்தை நட்சத்திரமாக ரோஸி எனும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை மீனா. பல வருடங்களுக்கு பிறகு முத்து, எஜமான் உள்ளிட்ட படங்களில் ரஜினிகாந்திற்கு ஜோடியாக மீனா நடித்தாலும் இன்றும் அவர் மீது அளவு கடந்த மரியாதையோடு இருக்கிறார். சமீபத்தில் சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியான "அண்ணாத்த" திரைப்படத்தில் மீனா ஒரு கதாபாத்திரத்தில் நடித்தது ரசிகர்களுக்கு மிகவும் பிடித்திருந்தது.
மேலும் ராஜ்குமார் சேதுபதி, சுலோக்சனா மற்றும் குழந்தை நட்சத்திரங்களாக சிறிய புஷ்பம் கதாபாத்திரத்தில் உமா ரியாஸ் மற்றும் பீட்டர் கதாபாத்திரத்தில் டிங்குவும் நடித்திருந்தனர். நடிகர் ஜெய்ஷ்ங்கர், கே. பாக்யராஜ், பார்த்திபன், கே. நடராஜ் உள்ளிட்டோர் கெளரவ வேடத்தில் நடித்திருந்தனர்.
எந்த காலத்தில் வெளியான திரைப்படமாக இருந்தாலும் சில படங்கள், கதாபாத்திரங்கள், திரைக்கதை உள்ளிட்டவை நம் மனதை விட்டு நீங்காமல் இருக்கும். அப்படி பட்ட ஒரு நெஞ்சில் நின்ற திரைப்படம் தான் "அன்புள்ள ரஜினிகாந்த்". இன்றும் பல தொலைக்காட்சிகளில் இப்படம் ஒளிபரப்படுகிறது. எத்தனை முறை பார்த்தாலும் சற்றும் சலிப்பு தட்டாத திரைப்படம். இந்த கால தலைமுறையினர் இது போன்ற தொலைக்காட்சி ஒளிபரப்பு மூலமே இது போன்ற நல்ல திரைப்படங்களி பற்றி தெரிந்து கொள்ள முடிகிறது.
அன்புள்ள ரஜினிகாந்த் திரைப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து நடிகை மீனா பல முறை ஊடகங்களிலும், நேர்காணலின் போதும் மீனா பகிர்ந்துள்ளார். 38 ஆண்டுகளுக்கு பிறகும் அந்த இனிமையான அனுபவங்களை நினைத்து மனம் பூரிக்கிறார். குழந்தை நட்சத்திரமாக மீனா இருக்கும் போது அமுல் பேபி போல குண்டாக இருப்பார். அதை பார்த்து பல முறை ரஜினி சார் என்னை கிண்டல் செய்துள்ளார். எனது அம்மாவிடம் சென்று குழந்தைக்கு எந்த கடையில் அரிசி வாங்குவீர்கள் என்று கேட்டு கிண்டல் செய்வாராம் நம்ம சூப்பர் ஸ்டார். மீனா சூப்பர் ஸ்டார் ரஜினி அங்கிள் என்று செல்லமாக கூப்பிடுவது 80'ஸ் கிட்ஸ்களுக்கு மிகவும் பிடிக்கும். ரஜினிகாந்த் அவர்கள் நடிகை மீனாவின் கணவர் இறந்தபோது அவருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக மீனாவின் வீட்டிற்கு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இளையராஜாவின் இசையமைப்பில் இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் காதுகளுக்கு இன்றும் இனிமை சேர்கிறது. குறிப்பாக யேசுதாஸ் அவர்கள் பாடிய "முத்துமணி சுடரே வா" பாடல் இன்றும் நாம் காதுகளில் ஒலிக்கும்.