மேலும் அறிய

Amitabh bachchan: 'உதவியை வெளியே சொல்வதைவிட செய்வதையே விரும்புவேன்'- விமர்சனங்களுக்கு பதிலளித்த அமிதாப் பச்சன்

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கை மற்றும் நிவாரணத்திற்கு உதவி செய்யவில்லை என்ற விமர்சனத்திற்கு பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் பதிலளித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு மிகவும் தீவிரம் அடைந்து வருகிறது. இதை கட்டுப்படுத்த அனைத்து மாநில அரசுகளும் மத்திய அரசுகளும் முழு முனைப்பில் வேலை செய்து வருகின்றனர். அத்துடன் பல்வேறு தரப்பட்ட மக்களுக்கும் நோய் தொற்று ஏற்பட்டவர்களுக்கு  தங்களால் முயன்ற உதவிகளை செய்து வருகின்றனர். உதாரணமாக இலவசமாக உணவு கொடுத்தும், போதிய உதவிகளையும் செய்து வருகின்றனர். குறிப்பாக கொரோனா முதல் அலையில் பாலிவுட் நடிகர் சோனு சூத் செய்த உதவிகள் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலானது. 

தற்போது இரண்டாவது அலையிலும் கன்னட நடிகர் டிரைவராக இருந்து மக்களுக்கு உதவிய செய்தியும் மக்களை அதிகளவில் ஈர்த்தது. இந்தச் சூழலில் அமிதாப் பச்சன் போன்ற பெரிய நடிகர்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் அதற்கான நிவாரணங்கள் கொடுக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பலர் சமூக வலைத்தளங்களில் குற்றம் சாட்டி வந்தனர். இதற்கு தற்போது அமிதாப் பச்சன் தனது பதிலை அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் ஒரு வலைப்பதிவை எழுதியுள்ளார்.

Amitabh bachchan: 'உதவியை வெளியே சொல்வதைவிட செய்வதையே விரும்புவேன்'- விமர்சனங்களுக்கு பதிலளித்த அமிதாப் பச்சன் 

அதில், "எப்போதும் செய்த உதவியை வெளியே சொல்வதைவிட உதவி செய்வதையே நான் பெரிதாக நம்புபவன். வெளியே சொல்லாததால் நான் உதவிகள் செய்யவில்லை என்ற அர்த்தம் இல்லை. நானும் என்னுடைய மகன் அபிஷேக் பச்சனும் கொரோனா காலங்களில் பல உதவிகளை செய்துள்ளோம். இந்த உதவிகள் தொடர்பாக நாங்கள் யாரிடமும் வெளியே கூறியதில்லை. அத்துடன் இந்த உதவிகளால் பயன் அடைந்தவர்களுக்கு கூட நாங்கள் தான் உதவி செய்தோம் என்று தெரியாது.

விவசாயிகளுக்கு சிலர் பயிர் கடன் கட்டுவது முதல் புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் குடும்பங்கள் வரை நாங்கள் பல உதவிகளை செய்துள்ளோம். கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பால் உணவு இன்றி தவித்த 5000 பேருக்கு தினமும் இருமுறை உணவு அளிக்க உதவி செய்துள்ளோம். மேலும் கொரோனா தடுப்பு பணியில் இருந்த முன்கள பணியாளர்கள் பலருக்கு பிபிஇ கிட், முகக்கவசம் உள்ளிட்டவற்றை வாங்கி கொடுத்துள்ளோம். மும்பையிலிருந்து கடந்த ஆண்டு உத்தரப்பிரதேசம் செல்ல 2800 புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ஒரு ரயில் முழுவதும் ஏற்பாடு செய்து அனுப்பி வைத்துள்ளோம்.

Amitabh bachchan: 'உதவியை வெளியே சொல்வதைவிட செய்வதையே விரும்புவேன்'- விமர்சனங்களுக்கு பதிலளித்த அமிதாப் பச்சன்

இவை தவிர புலம் பெயர் தொழிலாளர்களுக்கு உதவிய சீக்கிய அமைப்புகளுக்கும் நாங்கள் நிதியுதவி செய்துள்ளோம். தற்போது மும்பை மாநகராட்சி மருத்துவமனைக்கு 20 வென்டிலேட்டர்கள் மற்றும் சில மருத்துவ உபகரணங்கள் வாங்கி கொடுத்துள்ளோம். அதேபோல் ஹைதராபாத் பகுதியில் கொரோனா பாதிப்பால் தாய் மற்றும் தந்தையை இழந்த இரண்டு குழந்தைகளுக்கான படிப்பு செலவு முழுவதையும் நாங்கள் ஏற்றுள்ளோம். அவர்கள் 10 வகுப்பு வரை சிறப்பாக படிக்கும் பட்சத்தில் அவர்களுடைய மேற்படிப்பு செலவையும் நாங்கள் ஏற்க உள்ளோம்" எனத் தெரிவித்துள்ளார். 

அமிதாப் பச்சனின் இந்த வலைப்பதிவு அவரை பற்றி குறை கூறி வந்த பலரின் வாயையும் அடைத்துள்ளது. இனிமேலாவது சமூக வலைத்தளங்களில் மட்டும் கருத்து பதிவு செய்யாமல், செயலில் செய்து காட்ட வேண்டும் என்று அமிதாப் உணர்த்தியுள்ளார். 

தலைப்பு செய்திகள்

சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படத்தின் கதை இதுவா!
சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படத்தின் கதை இதுவா!
திரையரங்கிலும் ஓடிடியிலும் நாளை வெளியாகும் முக்கிய படங்கள், வெப் சீரிஸ்கள்
திரையரங்கிலும் ஓடிடியிலும் நாளை வெளியாகும் முக்கிய படங்கள், வெப் சீரிஸ்கள்
'துரந்தர்' உலக சாதனை... இந்த ஆண்டில் நெட்ஃப்ளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட Non-English திரைப்படம்!
'துரந்தர்' உலக சாதனை... இந்த ஆண்டில் நெட்ஃப்ளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட Non-English திரைப்படம்!
"கருத்து சுதந்திரத்திற்கு எல்லை உண்டு" – உதயநிதி கைது விவகாரத்தில் நடிகர் விஷால் கருத்து

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
Japanese SUV: ரூ.9 லட்சம் பட்ஜெட்டில் எஸ்யுவியை இறக்கும் ஜப்பான் நிறுவனம் - டாடாவை மிஞ்சுமா? கார் எப்படி இருக்கும்?
ரூ.9 லட்சம் பட்ஜெட்டில் எஸ்யுவியை இறக்கும் ஜப்பான் நிறுவனம் - டாடாவை மிஞ்சுமா? கார் எப்படி இருக்கும்?
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
டாஸ்மாக்கில் இனி பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலா வாங்கினால் FIR.! ஊழியர்களுக்கு செக்- நீதிமன்றம் அதிரடி
டாஸ்மாக்கில் இனி பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலா வாங்கினால் FIR.! ஊழியர்களுக்கு செக்- நீதிமன்றம் அதிரடி
Embed widget