Amitabh Bachchan: காலில் கட்டுடன் குரோர்பதி நிகழ்ச்சியில் இருந்து திடீரென ஓடியது ஏன்? அமிதாப்பச்சன் விளக்கம்..
பாலிவுட்டின் சூப்பர்ஸ்டார் நடிகர் அமிதாப்பச்சன் கடந்த சனிக்கிழமை குரோர்பதி நிகழ்ச்சியில் இருந்து காலில் கெட்டுடன் ஓடியது குறித்தான விளக்கத்தை அளித்திருக்கிறார்.
பாலிவுட்டின் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் அமிதாப்பச்சன், கடந்த சனிக்கிழமை குரோர்பதி நிகழ்ச்சியில் இருந்து காலில் கட்டுடன் ஓடியது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
View this post on Instagram
இந்த சம்பவம் குறித்து தன்னுடைய அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவிட்டு இருக்கும் அவர், “ஒரு உலோகத்துண்டு என்னுடைய இடது காலின் பின்பகுதியை வெட்டியது. அதன் காரணமாக என்னுடைய நரம்பும் அறுந்து போனது. இரத்தம் கட்டுப்படுத்த முடியாத அளவு அதிகமாக வெளியேறி சென்று கொண்டிருந்தது. ஆனால் சரியான நேரத்தில் பணியாளர்கள் என்னை மருத்துவமனையில் அனுமதித்து, மருத்துவர்கள் தையல் போட்டனர். அதன் பின்னரே எனக்கு தைரியம் வந்தது.
A jutting piece of metal sliced my left calve and managed to cut the vein .. the vein when cut spurts out the ‘red’ uncontrollably .. but had the nerve to get the doc and so into an OT and the stitching up .. with the assistance of team of staff and docs in time..,"
மருத்துவர்கள் நிற்க வேண்டாம், காலை அசைக்க வேண்டாம், ட்ரெட்மில்லில் கூட நடக்க வேண்டாம் என்று அறிவுரை வழங்கியுள்ளனர். சில சமயங்களில் அதிகமான திருப்தி மகிழ்ச்சியையோ அல்லது துக்கத்தையோ கொண்டு வரலாம். ஆனால் உச்சபட்ச நிலை நீடிக்காது. ஒன்று அவை அழிந்து போகின்றன அல்லது அழியாத அடையாளத்தை விட்டுச் செல்கின்றன” என்று பதிவிட்டு இருக்கிறார்.
View this post on Instagram
அண்மையில் நடிகர் அமிதாப்பச்சன் தன்னுடைய 80 ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு ரஜினிகாந்த் உட்பட பல திரைபிரபலங்கள் தங்களது வாழ்த்திகளை தெரிவித்தனர். பாலிவுட்டின் சூப்பர்ஸ்டார் என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் அமிதாப்பச்சன், கடந்த 1969ம் ஆண்டு திரைத்துறைக்குள் நுழைந்தார். தொடர்ந்து பல படங்களில் நடித்து முன்னணி நடிகராக உயர்ந்த அவருக்கு 2001-ல் பத்ம பூஷன் விருதும், 2015-ல் பத்ம விபூஷன் விருதும் வழங்கப்பட்டது. இவர் பல வருடங்களாக தொகுத்து வழங்கி வரும் கோன்பனேகா குரோர்பதி நிகழ்ச்சி இந்தியா முழுவதும் மிகவும் பிரபலமான நிகழ்ச்சி ஆகும்.