Amitabh Bachchan: ‛மனைவி என்றால் தான் பயம்...’ நேர்காணலில் ஓபனாக பேசிய அமிதாப்பச்சன்!
பாலிவுட்டின் சூப்பர்ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகர் அமிதாப்பச்சன் தான் பயந்து நடுங்கும் நடிகர் பற்றி மனம் திறந்துள்ளார்.
பாலிவுட்டில் பிரபல நடிகராக வலம் வரும் அமிதாப் பச்சன் தனது 80 ஆவது பிறந்தநாளை கடந்த அக்டோபர் 11 ஆம் தேதி கொண்டாடினார். அதனை முன்னிட்டு பாலிவுட் மட்டுமல்லாது இதர திரையுலகினரும் அவருக்கு சமூக வலைதளங்கள் வாயிலாக பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.
View this post on Instagram
இந்த நிலையில் அவரது பிறந்தநாளை மேலும் சிறப்பிக்கும் விதமாக அமிதாப்பச்சன் கடந்த 22 வருடங்களாக தொகுத்து வழங்கி வரும் கவுன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சியில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.
கொஞ்சம் மாறுதலாக, அமிதாப்பிற்கு பதிலாக அவரது மகன் அபிஷேக் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க, ஹாட் சீட்டில் அமிதாப்பச்சன் அமர்ந்து அவரிடம் கேள்விகளை முன்வைத்தார். நான் ஏன் இங்கு இருக்கிறேன்? நான் குறும்புக்கார பையனா..? சகோதரி ஸ்வேதா பச்சனை அதிகமாக நேசிக்க காரணம் என்ன? உங்களது இன்ப துன்பங்களில் உடன் இருந்தது யார் உள்ளிட்ட பல கேள்விகள் அதில் இடம் பெற்றிருந்தன.
View this post on Instagram
இறுதியாக நீங்கள் பயப்படும் நபர் யார் என்று கேட்ட போது, துளியும் யோசிக்காமல் அமிதாப் மனைவி ஜெயாவை குறிப்பிட்டார். இந்த நிகழ்ச்சியில் அவரது மனைவி ஜெயா, அமிதாப்பை மிகவும் நேசிப்பதாக கூறினார். மேலும் நிகழ்ச்சியில் அவர்களது குடும்ப புகைப்படங்கள் திரையிடப்பட்ட நிலையில், இறுதியில் கேக் வெட்டி அமிதாப்பச்சன் தனது பிறந்தநாளை கொண்டாடினார். இது தொடர்பான பிடிஎஸ் வீடியோவை அபிஷேக்பச்சன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்.