மேலும் அறிய

Anant Ambani - Radhika: அம்பானி வீட்ல சர்க்கஸா, பணம் இருந்தா இப்படி செய்வீங்களா.. அனுராக் காஷ்யப் மகள் காட்டம்!

அம்பானி வீட்டுத் திருமணம் குறித்து இயக்குநர், நடிகர் அனுராக் காஷ்யப் மகள் ஆலியா பதிவிட்டுள்ளது பேசுபொருளாகி உள்ளது.

ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவரும் இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவருமான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும் தொழிலதிபர் வீரேன் மெர்ச்சன்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சன்ட்டுக்கும் இன்று (ஜூலை.12) மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்ட் கன்வென்க்ஷன் சென்டரில் மிகவும் பிரமாண்டமாக பாரம்பரிய முறைப்படி திருமணம் நடைபெற்று வருகிறது.

கடந்த ஜனவரி மாதம் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக திருமணத்துக்கு முன்னதான கொண்டாட்டங்கள் என அனைத்துமே மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. கடந்த மார்ச் மாதம் குஜராத் மாநிலம் ஜாம் நகரில் விழா தொடங்கப்பட்டபோது இந்தியத் திரை பிரபலங்கள் மட்டுமின்றி சர்வதேச அளவில் உள்ள ஏராளமான பிரபலங்கள் இந்த விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 

Anant Ambani - Radhika: அம்பானி வீட்ல சர்க்கஸா, பணம் இருந்தா இப்படி செய்வீங்களா.. அனுராக் காஷ்யப் மகள் காட்டம்!

சில தினங்களுக்கு முன்னர் மெஹந்தி மற்றும் சங்கீத் நிகழ்ச்சிகள் கோலாகலமாக நடைபெற்றது. அதிலும் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.  அம்பானி இல்லத் திருமண கொண்டாட்டங்கள் உலக அளவில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. 

உள்நாடு மற்றும் வெளிநாட்டில் இருந்து திருமணத்தில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த முக்கியப் பிரமுகர்களை தங்க வைக்க ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் ரூம்ஸ் ரிசர்வ் செய்யப்பட்டுள்ளது. சிறப்பு விருந்தினர்களின் பயன்பாட்டிற்காக விமான வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தொடர்ச்சியாக ஜூலை 12 முதல் 15ஆம் தேதி வரையில் திருமணக் கொண்டாட்டங்கள் நடைபெற உள்ளதால் அந்த நேரத்தில் போக்குவரத்து நெரிசல்  ஏற்படக்கூடாது என்பதற்காக போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இப்படியாக அம்பானி இல்ல திருமணம் மும்பையில் களைகட்டி வருகிறது. 

இந்நிலையில் பாலிவுட் திரையுலகின் முன்னணி இயக்குநரும் தமிழ் சினிமாவில் நடிகராக கவனமீர்த்து வருபவருமான அனுராக் காஷ்யப் மகள் ஆலியாவுக்கும் அம்பானி வீட்டு திருமணத்தில் கலந்து கொள்ள அழைப்பு விடப்பட்டு இருந்தது.  ஆனால் அவரோ இந்தத் திருமணத்தில் கலந்து கொள்ள தனக்கு விருப்பமில்லை என மறுத்துவிட்டார். மேலும் இது குறித்து தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ள போஸ்ட் பேசுபொருளாகியுள்ளது.

Anant Ambani - Radhika: அம்பானி வீட்ல சர்க்கஸா, பணம் இருந்தா இப்படி செய்வீங்களா.. அனுராக் காஷ்யப் மகள் காட்டம்!

அவர் பதிவிட்டுள்ள போஸ்டில் “அம்பானி வீட்டு திருமணம் ஒரு திருமணமே இல்லை. சர்க்கஸ் நிகழ்ச்சியை போல ஆகிவிட்டது. எனக்கும் திருமண விழாவில் கலந்து கொள்ள அழைப்பு வந்தது. விளம்பரத்திற்காக தான் அழைக்கிறார்கள் என தெரியும், அதனால் நான் மறுத்துவிட்டேன். எனக்கு சுயமரியாதை இருக்கிறது.

பணத்திற்காக திருமண விழாவுக்கு செல்ல எனக்கு விருப்பமில்லை. பணம் அதிகமாக இருக்கிறது என்பதற்காக இப்படி எல்லாம் செய்கிறார்கள். எங்களிடமும் அதிகமாக பணம் இருக்கிறது. ஆனால் அதை வைத்து என்ன செய்ய முடியும்" என காரசாரமாக தன்னுடைய கருத்தை பதிவிட்டு இருந்தார் நடிகர் அனுராக் காஷ்யப் மகள் ஆலியா. இந்தப் பதிவு சோசியல் மீடியாவில் வைரலாகியுள்ளது.

தலைப்பு செய்திகள்

Mansoor Ali Khan: ஆண்மை இருக்கா.. நான் என்ன பிச்சையா கேட்டேன்.. சூர்யா, RJ பாலாஜியை விளாசிய மன்சூர் அலிகான்
Mansoor Ali Khan: ஆண்மை இருக்கா.. நான் என்ன பிச்சையா கேட்டேன்.. சூர்யா, RJ பாலாஜியை விளாசிய மன்சூர் அலிகான்
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
Viswanath & Sons Review: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
Actress Khushbu: தமிழால் தடுமாறிய காதல்.. விஜயால் கதறி அழுத மகள்.. நேர்காணலில் பகிர்ந்த குஷ்பு
Actress Khushbu: தமிழால் தடுமாறிய காதல்.. விஜயால் கதறி அழுத மகள்.. நேர்காணலில் பகிர்ந்த குஷ்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
விஜய்யிடம் ‘தகைசால் தமிழர்’ விருது பெற்ற கிருஷ்ணசாமி: குஷியில் காங்கிரஸ், பாமக! காரணம் என்ன?
விஜய்யிடம் ‘தகைசால் தமிழர்’ விருது பெற்ற கிருஷ்ணசாமி: குஷியில் காங்கிரஸ், பாமக! காரணம் என்ன?
Trisha: கோட்டையில் கொடியேற்றப்போகும் நண்பன் விஜய்.. நேரில் வந்த நடிகை த்ரிஷா!
Trisha: கோட்டையில் கொடியேற்றப்போகும் நண்பன் விஜய்.. நேரில் வந்த நடிகை த்ரிஷா!
Drone Training : 10ஆம் வகுப்பு பாஸ் போதும்! ட்ரோன் இயக்க சூப்பர் சான்ஸ்- விண்ணப்பிப்பது எப்படி.? தமிழக அரசு அறிவிப்பு
10ஆம் வகுப்பு பாஸ் போதும்.! ட்ரோன் இயக்க சூப்பர் சான்ஸ்- விண்ணப்பிப்பது எப்படி.? தமிழக அரசு அறிவிப்பு
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
Embed widget