19 வயதில் ஆடையின்றி நடிக்க காரணம் இதுதான்... ஹாலிவுட் நடிகை அமண்டா செய்ஃபிரைட் பேச்சு
கடந்த 2004 ஆம் ஆண்டு Mean Girls என்ற ஹாலிவுட் படத்தின் மூலம் அறிமுகமான அமண்டா செய்ஃபிரைட் தொடர்ந்து Nine Lives, American Gun, Gypsies, Gringo, Fathers and Daughters என பல படங்களில் நடித்துள்ளார்.
பிரபல ஹாலிவுட் நடிகை அமண்டா செய்ஃபிரைட் தான் ஏன் இளம் வயதில் ஆபாசக் காட்சிகளில் நடித்தேன் என விளக்கமளித்துள்ளார்.
View this post on Instagram
கடந்த 2004 ஆம் ஆண்டு Mean Girls என்ற ஹாலிவுட் படத்தின் மூலம் அறிமுகமான அமண்டா செய்ஃபிரைட் தொடர்ந்து Nine Lives, American Gun, Gypsies, Gringo, Fathers and Daughters என பல படங்களில் நடித்துள்ளார். இவருக்கு தற்போது 36 வயதாகி வரும் நிலையில், தனது 19 வயதில் Mean Girls என்ற முதல் படத்தில் மேலாடையின்றி ஆபாச காட்சி ஒன்றில் நடித்திருந்தார். இது படம் ரிலீசான சமயத்தில் கடும் சர்ச்சைகளை கிளப்பியது.
View this post on Instagram
இதற்கிடையில் நேர்காணல் ஒன்றில் நடிகை அமண்டா செய்ஃபிரைட் தனது திரையுலக வாழ்க்கை குறித்தும், அதில் எதிர்கொண்ட சவால் குறித்தும் மனம் திறந்து பேசியுள்ளார். அதில் அந்த ஆபாச காட்சி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அமண்டா செய்ஃபிரைட், 19 வயதில் அப்படி நடித்ததை எல்லாரும் கேலி செய்தார்கள். ஏன் செய்தேன் என நன்றாக எனக்கு நினைவிருக்கிறது. அந்த சமயத்தில் வேலையில் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே எனக்குள் இருந்தது. எனக்கு மறைமுக வற்புறுத்தல் இருந்ததால் அப்படி நடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. நிறைய பேர் குறிப்பாக ஆண்கள் என்னை கேலி செய்தார்கள். இதனால் நான் உடைந்து போனேன் என தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்