மேலும் அறிய
Advertisement
Alya Manasa - Sanjeev: கோடிகளில் கனவு இல்லம் கட்டிய சின்னத்திரை தம்பதி ஆல்யா - சஞ்சீவ்.. குவியும் வாழ்த்துகள்!
Alya Manasa - Sanjeev : சஞ்சீவ் – ஆல்யா மானசா அவர்களின் விருப்பப்படி ஆசை ஆசையாக கனவு இல்லத்தை கட்டியுள்ளதை அடுத்து அவர்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துக்களும் குவிந்து வருகிறது.
சின்னத்திரையின் மிகவும் பிரபலமான ஜோடிகளின் ஒருவரான சஞ்சீவ் – ஆல்யா மானசா இருவரும் தான் தற்போது ட்ரெண்டிங் ஜோடியாக வலம் வருகிறார்கள். அதற்கு முக்கியமான காரணம் பல கோடி ரூபாய் செலவில் அவர்கள் கட்டியுள்ள கனவு இல்லம்.
'மானாட மயிலாட' நடன நிகழ்ச்சி மூலம் திரையில் அடியெடுத்து வைத்த ஆல்யா மானசாவுக்கு சீரியல்களில் நடிக்க வாய்ப்புகள் வந்தன. அப்படி அவர் அறிமுகமான சீரியல் தான் விஜய் டிவியில் ஒளிபரப்பான 'ராஜா ராணி' சீசன் 1. இந்த சீரியலில் செம்பா என்ற லீட் ரோலில் நடித்த ஆல்யாவுக்கு ரசிகர் கூட்டம் தாறுமாறாகக் குவிந்தது. முதல் சீசனைத் தொடர்ந்து இரண்டாவது சீசனிலும் நடித்து இருந்தார். அவரின் அப்பாவித்தனமான பேச்சும், குழந்தை தனமான அணுகுமுறையும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது.
ராஜா ராணி சீரியலில் ஆல்யாவுக்கும் அவரது ஜோடியாக நடித்த சஞ்சீவ் இருவருக்கும் இடையே காதல் மலர, அவர்கள் இருவரும் 2019ம் ஆண்டு திடீர் திருமணம் செய்து கொண்டு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார்கள். மிகவும் க்யூட்டான இந்த காதல் ஜோடிக்கு ஒரு பெண் குழந்தை மற்றும் ஆண் குழந்தை உள்ளது. சீரியலில் எந்த அளவுக்கு ரசிகர்களைப் பெற்றுள்ளார்களோ அதை விட பல மடங்கு அதிகமாக யூடியூபில் சப்ஸ்க்ரைபர்களை பெற்றுள்ளனர்.
தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகவும் இனியா தொடரில் ஆல்யா மனசாவும், கயல் தொடரின் ஹீரோவாக சஞ்சீவும் நடித்து வருகிறார்கள். அவர்கள் இருவரும் சேர்ந்து கனவு இல்லம் ஒன்றைக் காட்டியுள்ளனர். அது தான் தற்போது சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங்காக உள்ளது. ஓட்டுமொத்த சின்னத்திரை பிரபலங்களும் ஆல்யா - சஞ்சீவ் கனவு இல்லத்திற்கு வருகை தர அதன் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாக பகிரப்பட்டு வருகின்றன. விரைவில் புதுமனைப் புகுவிழா நிகழ்ச்சி நடைபெற்ற உள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்கெனவே இந்தத் தம்பதியினருக்கு சொந்தமாக ஒரு பிளாட் உள்ள நிலையில், அவர்களுக்கு பிடித்ததது போல வில்லா ஒன்றைக் கட்ட வேண்டும் என்பது தான் இருவரும் ஆசையாக இருந்துள்ளது. அதை நனவாkகும் விதமாக சீ வியூ, விசாலமான கிச்சன், வீட்டுக்குள் ஜிம், லிஃப்ட், பிளே ஏரியா என பல சொகுசு வசதிகளுடன் மிகவும் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளது. இந்த வீடு கட்ட எவ்வளவு செலவானது என்பது கூட அவர்கள் இருவருக்கும் தெரியாதாம். அவர்களுக்கு வரும் சம்பள பணத்தை அப்படியே எடுத்துக் கொண்டு போய் வீடு கட்டும் பணிகளுக்கு கொடுத்து விடுவார்களாம்.
மற்றவர்கள் பார்த்து பொறாமைப்படும் அளவுக்கு அடுத்தடுத்த கட்டத்தை நோக்கி சிறப்பாக பயணித்து வரும் ஆல்யா மானசா - சஞ்சீவ் ஜோடிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
வணிகம்
தமிழ்நாடு
இந்தியா
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion