என் க்யூட்டியே... காதல் மனைவிக்கு திருமண நாள் வாழ்த்து கூறிய அல்லு அர்ஜூன்.. இதயங்களை பறக்கவிடும் ரசிகர்கள்!
தங்களது பொதுவான நண்பர்கள் மூலம் தன் மனைவி ஸ்நேகாவை சந்தித்து, பார்த்த நொடியே காதலில் விழுந்த நடிகர் அல்லு அர்ஜூன், 2011ஆம் ஆண்டு இரு வீட்டார் சம்மதத்துடன் அவரைத் திருமணம் செய்து கொண்டார்.
நடிகர் அல்லு அர்ஜூன் இன்று தன் 12ஆவது திருமணநாள் விழாவைக் கொண்டாடி வரும் நிலையில், முன்னதாக தன் மனைவி ஸ்நேகாவுக்கு க்யூட்டான வாழ்த்துச் செய்தியை பகிர்ந்துள்ளார்.
டோலிவுட் சினிமாவின் ஸ்டைலிஷ் ஸ்டார் எனக் கொண்டாடப்படுபவர் நடிகர் அல்லு அர்ஜூன். தெலுங்கு சினிமா தயாரிப்பாளரான அல்லு அரவிந்தின் மகனான அல்லு அர்ஜூன், குழந்தை நட்சத்திரமாக தெலுங்கு சினிமாவில் அறிமுகமானார்.
தொடர்ந்து 2001ஆம் ஆண்டு கதாநாயகனாக டோலிவுட்டில் கங்கோத்ரி எனும் படத்தில் அறிமுகமானார். முதலில் தன் தோற்றத்துக்காக எதிர்மறை விமர்சனங்களை அல்லு அர்ஜூன் பெற்றாலும் தன் அபாரமான நடனத் திறமையால் தன் மீதான விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வத்து அனைத்து தரப்பு ரசிகர்களின் ஆதரவையும் பெற்றார்.
தொடர்ந்து ஆர்யா படத்தின் மூலம் கவனமீர்த்த அல்லு அர்ஜூன், அதன் பின் மெல்ல மெல்ல தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவராக உருவெடுத்தார்.
இந்நிலயில் தங்களது பொதுவான நண்பர்கள் மூலம் தன் மனைவி ஸ்நேகாவை சந்தித்து, பார்த்த நொடியே காதலில் விழுந்த நடிகர் அல்லு அர்ஜூன், 2011ஆம் ஆண்டு இரு வீட்டார் சம்மதத்துடன் அவரைத் திருமணம் செய்து கொண்டார்.
தொடர்ந்து கடந்த 12 ஆண்டுகளாக டோலிவுட்டின் பிரபல ஜோடிகளில் ஒன்றாக வலம் வரும் இந்தத் தம்பதி, காதல் பறவைகளாக வலம் வந்து தொடர்ந்து ரசிகர்களை ஈர்த்து வருகின்றனர்.
இவர்களுக்கு ஆர்ஹா எனும் பெண் குழந்தையும், அயான் எனும் ஆண் குழந்தையும் உள்ள நிலையில், அல்லு அர்ஜூன் - ஸ்நேகா தம்பதி இன்று தங்கள் 12ஆவது திருமண நாளைக் கொண்டாடுகின்றனர்.
இந்நிலையில், அல்லு அர்ஜூன் ஸ்நேகாவுக்கு தன் இன்ஸ்டா ஸ்டோரியில் திருமண நாள் வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார். திருமண நாள் வாழ்த்துகள் க்யூட்டி என அல்லு அர்ஜூன் பதிவிட்டுள்ள நிலையில் சமூக வலைதளங்களில் இந்தப் பதிவு அதிகம் பகிரப்பட்டு லைக்ஸ் அள்ளி வருகிறது.
புஷ்பா 2 படத்துக்கான ஷூட்டிங்கில் தற்போது அல்லு அர்ஜூன் பிசியாக உள்ள நிலையில், வரும் ஏப்ரல் 8ஆம் தேதி அல்லு அர்ஜூனின் பிறந்தநாளை முன்னிட்டு இந்தப் படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியாகும் என முன்னதாகத் தகவல் வெளியானது. மேலும் அர்ஜூன் ரெட்டி இயக்குநர் சந்தீப் ரெட்டி வாங்காவுடன் அல்லு அர்ஜூன் கைக்கோர்த்துள்ள தகவல் கடந்த சில நாள்களை இணையத்தை ஆக்கிரமித்துள்ளது.