watch video | ‛சமந்தா என்னை நம்பியதற்கு நன்றி’ - மேடையில் அல்லு அர்ஜூன் பெருமிதம்!
அந்த வீடியோவை ஷேர் செய்த சமந்தா “நான் எப்போதுமே உன்னை நம்புவேன் அல்லு அர்ஜூன்’ என பதிவிட்டுள்ளார்.
சமந்தா தற்போது பல படங்களில் அடுத்தடுத்து கமிட்டாகி வருகிறார். என்னதான் முன்னணி நடிகையாக இருந்தாலும் அவர் சமீபத்தில் புஷ்பா படத்திற்காக குத்து பாடலில் ஆடியது அவரது ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. பொதுவாக குத்து பாடல் அதாவது ஐடம் நம்பர் பாடகள் என்றாலே பெண்களை சார்ந்தே பாடல் வரிகள் இருக்கும். ஆனால் சமந்தா ஆடிய பாடலின் வரிகள் ஆண்களை குற்றம் சாட்டுவது போல அமைந்திருந்தது. இதனால் பல ஆண்கள் அமைப்புகள் ஆரம்பத்தில் கொந்தளித்தாலும் பாடல் சூப்பர் டூப்பர் ஹிட். எந்த அளவிற்கு என்றால் புகழ்பெற்ற சமூக வலைத்தளமான யூடியூப் தளத்தில் அதிகம் பார்க்கப்பட்ட முதல் 100 பாடல்கள் லிஸ்டில் சமந்தாவின் o antava maama oo antava முதலிடம் முடித்துள்ளது. இது சமந்தாவை மட்டுமல்லாமல் படக்குழுவினரையும் குஷிப்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் நடிகர் அல்லு அர்ஜுன் புஷ்பா படத்தின் வெற்றி குறித்தும் அதற்காக உழைத்த அனைவருக்கும் நன்றி செலுத்தும் விதமாக பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசியிருந்தார். அப்போது சமந்தா குறித்து பேசிய அல்லு “சமந்தா காரு இந்த பாடலை செய்ததற்கு மிக்க நன்றி. நாங்கள் உங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்காகத்தான் இந்த பாடலை நீங்கள் செய்தீர்கள் என்பது எங்களுக்குத் தெரியும், எனவே அதற்கு நன்றி. இதை செய்வது சரியா தவறா என்று உங்களுக்கு எத்தனை சந்தேகங்கள் இருந்தது அது எனக்கு படப்பிடிப்பின் போதே தெரிந்தது.அதனால்தான் உங்களிடம் ஒன்று மட்டும் சொன்னேன் ’என்னை நம்பி இதை செய் ’ என்றேன். அதன் பிறகு என்னிடம் ஒரு கேள்வி கூட கேட்கவில்லை.எல்லாவற்றையும் செய்ததற்கு நன்றி. நீங்கள் என் இதயத்தையும் மரியாதையையும் வென்றுள்ளீர்கள்” என கூறியுள்ளார்.
And now I will always trust you @alluarjun 🙌🙇♀️ https://t.co/EQOGv6M10F
— Samantha (@Samanthaprabhu2) December 28, 2021
அந்த வீடியோவை ஷேர் செய்த சமந்தா “நான் எப்போதுமே உன்னை நம்புவேன் அல்லு அர்ஜூன்’ என பதிவிட்டுள்ளார். இது தற்போது வைரலாகி வருகிறது. பொதுவாக ஐடம் நம்பர் பாடலில் முன்னணி நடிகை ஒருவர் நடனமாடினால் அவருக்கான மார்கெட் குறைந்துவிடும் என ரசிகர்கள் மத்தியில் ஒரு டாக் உண்டு. சினிமா துறையினரும் ஒரு நடிகை அப்படியான பாடலில் ஆடிவிட்டால் அடுத்தடுத்து அப்படியான ரோலோடுதான் அவரை அனுகுவார்கள். ஆனால் அவற்றிலிருந்து சமந்தா முற்றிலும் மாறுபட்டவராக இருக்கிறார். தற்போது மார்வெல் ஸ்டுடியோ தயாரிக்கும் சர்வதேச அங்கீகரம் கொண்ட படங்களும் சமந்தாவை தேடி வர தொடங்கியிருக்கின்றன. சமந்தா விரைவில் தனது கனவுகளை எட்ட வாழ்த்துக்கள்!