மேலும் அறிய

Alia Bhatt: என் குட்டிப்புலி.. குழந்தையின் முதல் பிறந்தநாளில் நடிகை அலியா பட் உருக்கமான பதிவு!

“எங்கள் வாழ்வின் ஒவ்வொரு நாளையும் ஒரு ருசியான க்ரீம் கேக் துண்டு போல் உணர வைக்கிறாய். பிறந்தநாள் வாழ்த்துக்கள் குட்டிப் புலி” - அலியா பட்

தன் குழந்தை ராகாவின் முதலாம் ஆண்டு பிறந்தநாளில் நடிகை அலியா பட் பகிர்ந்துள்ள பதிவு ரசிகர்களை நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.

திருமணம் டூ தாய்

பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வரும் அலியா பட், நடிகர் ரன்பீர் கபூரைக் காதலித்து, கடந்த ஆண்டு திருமணம் செய்துகொண்டார். பாலிவுட்டின் பிரபல கபூர் குடும்பத்துக்கு திருமணமாகிச் சென்ற அலியா, கடந்த ஆண்டு இறுதியிலேயே தாயானார்.

பெண் குழந்தைக்கு தாயான அலியா, தொடர்ந்து சினிமாவிலும் கவனம் செலுத்து நடித்து வரும் நிலையில், 2021ஆம் ஆண்டு வெளியான ‘கங்குபாய்  கத்தியாவாடி’ படத்துக்காக சமீபத்தில் தன் முதல் தேசிய விருதினைப் பெற்றார்.

குடும்பம் , வாழ்க்கை இரண்டிலும் வெற்றிகரமாக வலம் வரும் அலியா பட், தன்  தொடக்ககால சினிமா வாழ்வில் கடுமையாக ட்ரோல்களை சம்பாதித்த நிலையில், அதற்கு நேரெதிராக தற்போது பலராலும் இன்ஸ்பிரேஷனாக பார்க்கப்பட்டு வருகிறார்.

பாலிவுட் தாண்டியும் தன் தாறுமாறு நடிப்பால் பல ரசிகர்களைப் பெற்றுள்ள அலியா பட், ஹாலிவுட்டிலும் சமீபத்தில் என்ட்ரி தந்தார்.

குழந்தை ராகாவுக்கு உருக்கமான வாழ்த்து

இந்நிலையில், அலியா பட் தன் குழந்தை ராகாவின் முதல் பிறந்தநாளுக்கு வாழ்த்தி உருக்கமான பதிவை பகிர்ந்துள்ளார்.

"எங்கள் மகிழ்ச்சி, எங்கள் வாழ்க்கை.. எங்கள் ஒளி! நீ நேற்று தான் என் வயிற்றில் உதைத்துக் கொண்டிருந்தது போல் இருக்கிறது. உனக்காக இந்த பாடலை நேற்று வாசித்தது போல் இருக்கிறது.. எங்கள் வாழ்வில் நீ வந்ததற்கு நாங்கள் பாக்கியம் செய்துள்ளோம்.

எங்கள் வாழ்வின் ஒவ்வொரு நாளையும் ஒரு ருசியான க்ரீம் கேக் துண்டு போல் உணர வைக்கிறாய். பிறந்தநாள் வாழ்த்துக்கள் குட்டிப் புலி.. உன்னை அதிகமாக நேசிக்கிறோம்” எனப் பதிவிட்டுள்ளார்.

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Alia Bhatt 💛 (@aliaabhatt)

நடிகர் ரன்பீர் கபூர் சமூக வலைதளங்களில் இல்லாத நிலையில், அவருக்கும் சேர்த்து அலியா நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். மேலும் குழந்தையின் கைகளை ஃபோட்டோவாக அலியா பதிவிட்டுள்ள நிலையில், இந்தப் பதிவு இணையத்தில் லைக்ஸ் அள்ளி வருகிறது.

தொடர் ஹிட் படங்கள்

முன்னதாக தன்னை அறிமுகப்படுத்திய கரண் ஜோகர் இயக்கத்தில் அலியா நடித்த ‘ராக்கி ஆர் ராணி கி ப்ரேம் கஹானி’ படம் நூறு கோடிகள் வசூலைக் கடந்து கவனமீர்த்தது. தீபிகா படுகோனின் கணவரும் நடிகருமான ரன்வீர் சிங் உடன் அலியா இரண்டாம் முறையாக ஜோடி சேர்ந்த நிலையில், அலியாவின் நடிப்பு, லுக்ஸ் என அனைத்தும் வழக்கம்போல் கவனம் ஈர்த்து அப்ளாஸ் அள்ளியது.

அலியா நடிப்பில் ஜிக்ரா எனும் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படத்தின் கதை இதுவா!
சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படத்தின் கதை இதுவா!
திரையரங்கிலும் ஓடிடியிலும் நாளை வெளியாகும் முக்கிய படங்கள், வெப் சீரிஸ்கள்
திரையரங்கிலும் ஓடிடியிலும் நாளை வெளியாகும் முக்கிய படங்கள், வெப் சீரிஸ்கள்
'துரந்தர்' உலக சாதனை... இந்த ஆண்டில் நெட்ஃப்ளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட Non-English திரைப்படம்!
'துரந்தர்' உலக சாதனை... இந்த ஆண்டில் நெட்ஃப்ளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட Non-English திரைப்படம்!
"கருத்து சுதந்திரத்திற்கு எல்லை உண்டு" – உதயநிதி கைது விவகாரத்தில் நடிகர் விஷால் கருத்து

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
Sekar Babu: ”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
Indias Best SUV: இங்க எஸ்யுவி-னாலே நாங்க தான்..! உள்ளூரில் கோலோச்சும் டாப் 5 கார் மாடல்கள் - விலையும், வசதிகளும்..
இங்க SUV-னாலே நாங்க தான்..! உள்ளூரில் கோலோச்சும் டாப் 5 கார் மாடல்கள் - விலையும், வசதிகளும்..
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
Embed widget