(Source: ECI/ABP News/ABP Majha)
‛என்னை பிடிக்கவில்லை என்றால் பார்க்காதீங்க...’ -ஆலியா பட் பளார் பதில்
Alia Bhat : உங்களுக்கு என்னை பிடிக்கவில்லை என்றால் என்னை பார்க்காதீர்கள். அதற்கு நான் என்ன செய்ய முடியும். உண்மையில் இந்த இடத்திற்கு வருவதற்கு நான் கடுமையாக உழைத்துள்ளேன்.
Alia Bhat about Nepotism and Troll : என்னை ட்ரோல் செய்தவர்களுக்கு எனது படம் மூலம் பதில் அளித்தேன்... ஆலியா பட்
ஒரு பிரபலமான திரை குடும்பத்தை சேர்ந்த நடிகை மட்டுமின்றி தற்போது பாலிவுட்டின் குயினாக வலம் வருபவர் ஆலியா பட். குழந்தை நட்சத்திரமாகவே திரை துறையில் நுழைந்தவர் என்றாலும் 2012ம் வெளியான ஸ்டுடென்ட் நம்பர் 1 திரைப்படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகி இன்று பாலிவுட் திரையுலகில் ஒரு முன்னணி ஹீரோயினாக இருப்பவர் ஆலியா பட்.
இந்தியா கொண்டாடிய ஆலியா பட் :
சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான "கங்குபாய் கத்தியாவாடி" என்ற படத்தில் ஆலியாவின் சிறப்பான நடிப்பிற்கு இந்தியளவில் கொண்டாடப்பட்டவர். தற்போது "தி ஹார்ட் ஆஃப் ஸ்டோன்" எனும் ஹாலிவுட் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் அவரின் கர்ப்பம் குறித்து சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்யப்பட்டது. ஏற்கனவே இதனை கண்டித்து மிகவும் வெளிப்படையாக பதிலித்தார் ஆலியா பட்.
ட்ரோல் குறித்து ஆலியா கருத்து:
மேலும் சமீபத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியின் போது ஆலியா பட்டிடம் உங்களின் உறவுமுறை குறித்தும் ட்ரோல் குறித்தும் உங்களது கருத்து என்ன என்று கேட்கப்பட்டது. அதற்கு ஆலியா மிகவும் தெளிவான பதில் ஒன்றை அளித்தார். "இது போன்றவற்றை சமாளிக்க இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று கட்டுப்படுத்தி கொள்வது. மற்றொன்று இது போன்ற உரையாடல்களுக்கு எனது படங்கள் மூலம் என்னை நிரூபித்து காட்டுவது. இதற்கெல்லாம் பதில் அளிக்கவும் தேவையில்லை அல்லது மோசமாக உணரவும் தேவை இல்லை. ஆனால் நிச்சயம் அது என்னை பாதித்தது. வாய் மூடி கொண்டு வீட்டிற்கு சென்றேன் ஆனால் அதற்கு நான் எனது "கங்குபாய் கத்தியவாடி" போன்ற ஒரு படத்தின் மூலம் பதிலளித்தேன்.
எதுவரையில் சிரிப்பார்கள் என்னுடைய கடைசி பிளாப் படம் வரையில். ஆனால் நான் இன்று மகிழ்ச்சியாக இருக்கிறேன். உங்களுக்கு என்னை பிடிக்கவில்லை என்றால் என்னை பார்க்காதீர்கள். அதற்கு நான் என்ன செய்ய முடியும். நான் பிறந்த இடத்தை எனது பெற்றோரை நான் எப்படி கட்டுப்படுத்த முடியும்? எனது தந்தையின் கடுமையான உழைப்பை நான் எப்படி உதாசீனப்படுத்த முடியும். எனக்கு எல்லாம் எளிதாக கிடைத்து விட்டது என்று நினைக்குறீர்களா? உண்மையில் இந்த இடத்திற்கு வருவதற்கு நான் கடுமையாக உழைத்துள்ளேன்.
Nepotism Product Alia Bhatt frustrated over audience and said "If you don't like me, then don't watch me"#BoycottBollywood #AliaBhatt #BoycottBrahmastra #Brahmastra pic.twitter.com/0APMkqJnMa
— THV News (@ThvNews) August 22, 2022
விரைவில் வெளியாகவுள்ளது "பிரம்மாஸ்திரா" திரைப்படம்:
நெட்ஃப்ளிக்ஸில் ஆலியா பட்டின் டார்லிங்ஸ் படம் வெளியிடப்பட்டுள்ளது. ஜஸ்மீத் கே ரீன் இயக்கிய இப்படத்தில் ஷெபாலி ஷா மற்றும் விஜய் வர்மாவும் நடித்துள்ளனர். தற்போது ஆலியா தனது "பிரம்மாஸ்திரா" திரைப்படத்தின் விளம்பர பணிகளில் மும்மரமாக ஈடுபட்டுள்ளார். அயன் முகர்ஜி இயக்கியுள்ள இப்படம் செப்டம்பர் 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டுள்ளார். அமிதாப் பச்சன், மௌனி ராய் மற்றும் நாகார்ஜுனா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தில் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக ஆலியா நடிக்கிறார். "பிரம்மாஸ்திரா" திரைப்படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் வெளியிடப்படவுள்ளது.
#AliaBhatt opens up on live-in relationship with #RanbirKapoor before marriage | READhttps://t.co/YigOAnVLeI
— DNA (@dna) August 23, 2022