![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Alia Bhatt on RRR Rumours: ''உழைப்பை கெடுப்பதாய் இருக்கிறது''... ஆர்.ஆர்.ஆர் பட விவகாரத்தில் மனம் திறந்த ஆலியா!
ஆர்.ஆர்.ஆர் திரைப்பட போஸ்ட்களை எதற்காக நீக்கினேன் என்பது தொடர்பாக ஆலியா பட் விளக்கமளித்துள்ளார்.
![Alia Bhatt on RRR Rumours: ''உழைப்பை கெடுப்பதாய் இருக்கிறது''... ஆர்.ஆர்.ஆர் பட விவகாரத்தில் மனம் திறந்த ஆலியா! Alia Bhatt Breaks Silence via Instagram Story on Rumours Alia upset with SS Rajamouli, RRR team Alia Bhatt on RRR Rumours: ''உழைப்பை கெடுப்பதாய் இருக்கிறது''... ஆர்.ஆர்.ஆர் பட விவகாரத்தில் மனம் திறந்த ஆலியா!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/31/a9b9e426bf6347e0f77155b9d280a30f_original.png?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
சமீபத்தில் வெளியான ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் ராஜமெளலின் முத்திரை அழுத்தமாக பதிந்திருந்தாலும், கதாநாயகர்களுக்கு ஒதுக்கப்பட்ட ஸ்பேஸ், நடிகை ஆலியா பட்டிற்கு கதாபாத்திரத்திற்கு கொடுக்கப்படாத முக்கியத்துவம், சுவாரஸ்சியம் குறைந்த சீன்கள் உள்ளிட்டவை விமர்சனத்திற்கு உள்ளாகி வருகின்றன. அதிலும் குறிப்பாக, ராம்சரணின் காதலியாக வரும் ஆலியா பட்டிற்கு மிக குறைவான சீன்களே ஒதுக்கப்பட்டிருந்ததும், அவருக்கான கதாபாத்திரத்திற்கும் பெரிதளவில் முக்கியத்துவம் கொடுக்கப்படாததும் பேசு பொருளாகி உள்ளன.
இது குறித்து நடிகை ஆலியா பட் கோபமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்தத் தகவலை உறுதிப்படுத்தும் வகையிலேயே ஆலியாபட் தனது இன்ஸ்டாகிராமில் ஆர்.ஆர்.ஆர் படம் தொடர்பாக பதிவிட்ட பெரும்பாலான புகைப்படங்களை நீக்கி இருந்தார்.
இந்நிலையில் தற்போது அதற்கு நடிகை ஆலியா பட் தன்னுடைய தரப்பில் இருந்து ஒரு விளக்கத்தை அளித்துள்ளார்.அதில், “சமூகவலைதளங்களில் ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் தொடர்பான பதிவிகளை நான் நிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. என்னுடைய இன்ஸ்டாகிராமில் நான் எப்போதும் என்னுடைய பதிவுகளை நிர்வாகிப்பது உண்டு. அந்த வகையில் நான் எதர்ச்சையாக சில பதிவுகளை நீக்கினேன்.
ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் நான் ஒரு பகுதியாக இருந்தது எப்போதும் எனக்கு மிகவும் மகிழ்ச்சியான ஒன்று. அந்தப் படத்தில் சீதா கதாபாத்திரத்தில் நடித்தது எனக்கு பிடித்தது. ராஜமௌலியின் இயக்கத்தில் நடித்தது. மேலும் தாரக் மற்றும் ராம்சரண் உடன் நடித்தது எனக்கு சிறப்பாக அமைந்தது. அந்தப் படத்தில் ஒவ்வொரு காட்சிகளும் எனக்கு ஒரு பெரிய அனுபவமாக அமைந்தது.
View this post on Instagram
இயக்குநர் ராஜமௌளி மற்றும் அவருடைய குழு இந்தத் திரைப்படத்திற்காக தீவிரமாக உழைத்துள்ளனர். ஆகவே இதுபோன்ற வதந்திகள் தற்போது பரவி அவர்களுடைய உழைப்பை கெடுக்கும் வகையில் அமைந்துள்ளது. ஆகவே தான் நான் இந்த விளக்கத்தை தற்போது அளிக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)