Al Pacino: 83 வயதில் அப்பா... 29 வயது காதலிக்கு பிறந்த குழந்தை... ஹாலிவுட் நடிகர் அல் பசினோவுக்கு குவியும் வாழ்த்து!
‘தி காட்பாதர்’, ‘ஸ்கார்ஃபேஸ்’, ‘சென்ட் ஆஃப் எ வுமன்’ போன்ற படங்களின் மூலம் பிரபலமானவர் ஹாலிவுட்டின் பழம்பெரும் நடிகர் அல் பசினோ.
ஹாலிவுட் நடிகர் அல் பசினோ தனது 83 வது வயதில் அப்பாவாகி உள்ள தகவல் ஹாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பைக் கிளப்பி வருகிறது.
‘தி காட்பாதர்’, ‘ஸ்கார்ஃபேஸ்’, ‘சென்ட் ஆஃப் எ வுமன்’ போன்ற படங்களின் மூலம் பிரபலமானவர் ஹாலிவுட்டின் பழம்பெரும் நடிகர் அல் பசினோ. ஆஸ்கர் விருது வென்றவரான அல் பசினோ, கலிபோர்னியா லாஸ் ஏஞ்சல்ஸ் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம் பெற்றவர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சியிலும் தயாரிப்பாளராக இருந்துள்ளார்.
முன்னதாக அல் பசினோ தனது 29 வயதான காதலி நூர் அல்பல்லா உடன் டேட்டிங் செய்து வந்த நிலையில் ஹாலிவுட் வட்டாரத்தில் இந்தத் தகவல் பரபரப்பாக பேசப்பட்டது. இந்நிலையில் அல் பசினோ - நூர் அல்பல்லா தம்பதிக்கு தற்போது ஆண் குழந்தை பிறந்துள்ளது. அல் பசினோவுக்கு ஏற்கனவே இரண்டு முன்னாள் மனைவிகள் ஜான் டாரன்ட் மூலம் ஜூலி என்ற 33 வயது மகளும் பெவர்லி டி ஏஞ்சலோ மூலம் 18 வயது இரட்டைக் குழந்தைகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இத்தம்பதி தங்கள் குழந்தைக்கு 'பீப்பிள்' எனப் பெயரிட்டுள்ளனர். ஏற்கெனவே இன்னும் சில வாரங்களில் தனது நான்காவது குழந்தையை வரவேற்க ஆவலாக இருப்பதாக அல் பசினோ தெரிவித்து இருந்தார். அல் பசினோ - நூர் இருவரும் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் டேட்டிங் செய்து வந்தனர். அதனை உறுதிப்படுத்தும் வகையில் இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பகிர்ந்தனர்.
தற்போது அல் பசினோவுக்கு நான்காவது குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில், அல் பசினோ அப்பாவாக இருப்பதை எப்போதுமே நேசிப்பவர் என அவரது நண்பர் ஒருவர் கூறியுள்ளார்.
அல் பசினோவைப் போலவே, தி ஐரிஷ்மேன் படத்தில் நடித்த இவரது சக நடிகரும், ஹாலிவுட் ஜாம்பவான் நடிகருமான ராபர்ட் டி நீரோவும் சமீபத்தில் தனது 79ஆவது வயதில் ஏழாவது குழந்தைக்கு அப்பாவானார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹாலிவுட் ரசிகர்கள் மத்தியில் மிகவும் மதிக்கப்படும் ஒரு நடிகராக இருந்து வரும் அல் பசினோ அடுத்ததாக டேவிட் மாமெட்டின் படுகொலை சார்ந்த ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.