மேலும் அறிய

அக்ஷய் குமாரின் அடுத்தடுத்து இரு படங்கள் ஓடிடி ரிலீஸ்; ரசிகர்கள் குஷி!

பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாரின் மேலும் இரண்டு திரைப்படங்கள் OTT தளத்தில் வெளியாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

ஏற்கனவே அக்ஷய் குமார் நடிப்பில் இயக்குநர் லாரன்ஸ் இயக்கத்தில் வெளியான லட்சுமி பாம் திரைப்படம் நேரடியாக OTTயில் வெளியானது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ரஞ்சித் திவாரி இயக்கத்தில் பூஜா மற்றும் எம்மே ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில் உருவாகி உள்ள பெல் பாட்டம் என்ற திரைப்படம் நேரடியாக OTT தளத்தில் வெளியாகவுள்ளது. 

அக்ஷய் குமார், வாணி கபூர், ஹுமா குரேஷி மற்றும் லாரா டாட்டா இணைந்து நடித்துள்ள இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நிறைவடைந்தது. இதனை தொடர்ந்து 2021ம் ஆண்டு மே மாதம் திரையரங்குகளில் இந்த படம் வெளியாகும் என்று அப்போது படக்குழு அறிவித்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் தற்போது கொரோனாவின் இரண்டாம் இந்திய அளவில் வேகமெடுத்துள்ளதால் திரையரங்குகளில் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

அக்ஷய் குமாரின் அடுத்தடுத்து இரு படங்கள் ஓடிடி ரிலீஸ்; ரசிகர்கள் குஷி!

இதனால் பல திரைப்படங்கள் இணைய வழியாக வெளியாகி வரும் நிலையில் அக்ஷய் குமாரின் பெல் பாட்டம் திரைப்படமும் விரைவில் OTT தளத்தில் வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது. இது ஒருபுறம் இருக்க அக்ஷய் குமார் நடிப்பில் உருவான மற்றொரு படமும் விரைவில் OTTயில் வெளியாக காத்திருக்கிறது. ரோஹித் ஷெட்டி இயக்கத்தில் உருவாகியுள்ள சூர்யவன்ஷி திரைப்படம் கடந்த ஓர் ஆண்டிற்கும் மேலாக வெளியிடப்படாமல் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

மார்ச் மாதம் 2020ம் ஆண்டு இந்த படம் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில் கொரோனா பரவல் காரணமாக படம் வெளியாவது நிறுத்திவைக்கப்பட்டது. அஜய் தேவ்கான் நடிப்பில் வெளியான சிங்கம் மற்றும் ரன்வீர் கபூர் நடிப்பில் வெளியான சிம்பா உள்ளிட்ட படங்களில் தொடர்ச்சியாக அக்ஷய் நடிப்பில் உருவான திரைப்படம் தான் சூர்யவன்ஷி என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது மேற்குறிப்பிட்ட இந்த இரண்டு திரைப்படங்களும் விரைவில் OTT தளத்தில் வெளியாகும் என்று தகவல் வெளிவந்துள்ளது.  

அக்ஷய் குமாரின் அடுத்தடுத்து இரு படங்கள் ஓடிடி ரிலீஸ்; ரசிகர்கள் குஷி!

பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் Saugandh என்ற திரைப்படம் மூலம் 1991ம் ஆண்டு அறிமுகமானார். இதுவரை 60க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள அக்ஷய் குமார் தனது ஸ்டண்ட் காட்சிகளுக்காக மிகவும் பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழில் 2018ம் ஆண்டு வெளியான சூப்பர் ஸ்டாரின் 2.0 திரைப்படம் தான் இவர் தமிழில் நடித்து முதல் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. பஞ்சாபி மற்றும் மராட்டிய திரைப்படங்களிலும் அக்ஷய் நடித்துள்ளார் என்பது  குறிப்பிடத்தக்கது. 

அக்ஷய் குமாரின் அடுத்தடுத்து இரு படங்கள் ஓடிடி ரிலீஸ்; ரசிகர்கள் குஷி!

2016ம் ஆண்டு வெளியான rustom என்ற திரைப்படத்திற்காக அக்ஷய்க்கு தேசிய விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது. மேலும் 2017ம் ஆண்டு இவர் நடிப்பில் வெளியான Pad Man திரைப்படம் சிறந்த படத்திற்கான தேசிய விருதை பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் அந்த திரைப்படம் பொதுமக்கள் மத்தியிலும் பெரிய அளவில் பாராட்டை பெற்றது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

Soori: புதிய அவதாரம் எடுக்கும் சூரி... இனிதே தொடங்கியது பூஜை! இயக்குனர் இவரா?
Soori: புதிய அவதாரம் எடுக்கும் சூரி... இனிதே தொடங்கியது பூஜை! இயக்குனர் இவரா?
Jailer 2: டைகர் வந்துட்டாரு.. ஜெயிலர் 2 நாளை ரிலீஸ்! கொண்டாட்டத்தை தொடங்கிய ரஜினி ரசிகர்கள்!
Jailer 2: டைகர் வந்துட்டாரு.. ஜெயிலர் 2 நாளை ரிலீஸ்! கொண்டாட்டத்தை தொடங்கிய ரஜினி ரசிகர்கள்!
கைவிடப்பட்ட வேட்டை மன்னன்.. கைவிடாத நெல்சன்.. புதிய உச்சம் தொடுவாரா நெல்சன்?
கைவிடப்பட்ட வேட்டை மன்னன்.. கைவிடாத நெல்சன்.. புதிய உச்சம் தொடுவாரா நெல்சன்?
இதுதான்யா வெறித்தனம்! ‘ஜெயிலர் 2’ ஃபீவர் ஸ்டார்ட்.. ரஜினி ரசிகரின் வேற மாதிரி சாதனை
இதுதான்யா வெறித்தனம்! ‘ஜெயிலர் 2’ ஃபீவர் ஸ்டார்ட்.. ரஜினி ரசிகரின் வேற மாதிரி சாதனை

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: இன்று மிக கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
இன்று மிக கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்! ஆயுதபூஜைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்! முழு விபரம்
ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்! ஆயுதபூஜைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்! முழு விபரம்
Weather Update: அடுத்த 2 வாரம் மிரட்டப்போகும் மழை.. சென்னை தப்புமா? - வெதர்மேன் கொடுத்த அப்டேட்!
Weather Update: அடுத்த 2 வாரம் மிரட்டப்போகும் மழை.. சென்னை தப்புமா? - வெதர்மேன் கொடுத்த அப்டேட்!
10 கோயில்களில் அமல்.. கோயில் அன்னதான திட்டத்தில் வெளியான சூப்பர் அப்டேட்.. நோட் பண்ணுங்க!
10 கோயில்களில் அமல்.. கோயில் அன்னதான திட்டத்தில் வெளியான சூப்பர் அப்டேட்.. நோட் பண்ணுங்க!
மஹிந்திராவின் முதல் CNG கார்... இந்திய சந்தையில் நாளை அறிமுகமாகிறது Mahindra XUV 3XO!
மஹிந்திராவின் முதல் CNG கார்... இந்திய சந்தையில் நாளை அறிமுகமாகிறது Mahindra XUV 3XO!
BS-VII: 3 கட்டங்களாக அமலுக்கு வரும் BS-VII - ஆரம்பமே கார்கள் தான் டார்கெட் - எந்தெந்த SUV-களுக்கு ஆப்பு? உமிழ்வு விதிகள்
3 கட்டங்களாக அமலுக்கு வரும் BS-VII - ஆரம்பமே கார்கள் தான் டார்கெட் - எந்தெந்த SUV-களுக்கு ஆப்பு? உமிழ்வு விதிகள்
TN Govt: கிடுகிடுவென உயர்ந்த விலை..! சன்னரக அரிசியை ரூ.50-க்கு விற்க தமிழக அரசு முடிவு? மக்கள் ஹாப்பி
கிடுகிடுவென உயர்ந்த விலை..! சன்னரக அரிசியை ரூ.50-க்கு விற்க தமிழக அரசு முடிவு? மக்கள் ஹாப்பி
Soori: புதிய அவதாரம் எடுக்கும் சூரி... இனிதே தொடங்கியது பூஜை! இயக்குனர் இவரா?
Soori: புதிய அவதாரம் எடுக்கும் சூரி... இனிதே தொடங்கியது பூஜை! இயக்குனர் இவரா?
Embed widget