மேலும் அறிய

AK62 : மகிழ் திருமேனியை காபி அடித்தாரா லோகேஷ் கனகராஜ் ? ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்... AK62 லேட்டஸ்ட் அப்டேட்  

மகிழ் திருமேனி அன்று செய்ததை இன்று செய்து அப்லாஸ் வாங்கிய லோகேஷ் கனகராஜ் என ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்.

துணிவு பட வெற்றிக்குப் பிறகு ஏகே 62 படத்தை வரும் பிப்ரவரி மாதம் முதல் விக்னேஷ் சிவன் இயக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியிருந்த நிலையில், தற்போது விக்னேஷ் சிவன் ஏகே 62 படத்தை இயக்கவில்லை என்ற தகவல் சில தினங்களுக்கு முன்னர் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

 

AK62 : மகிழ் திருமேனியை காபி அடித்தாரா லோகேஷ் கனகராஜ் ? ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்... AK62 லேட்டஸ்ட் அப்டேட்  

கைமாறிய AK62 :

ஹெச். வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடித்த துணிவு திரைப்படம் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் திரைப்படமாக வெற்றி பெற்று வசூலிலும் சாதனைகளை படைத்தது. இதனால் விக்னேஷ் சிவன் - அஜித் கூட்டணியில் உருவாக இருந்த AK62 திரைப்படம் மீது ரசிகர்களுக்கு அளவுக்கு அதிகமான எதிர்பார்ப்பு இருந்தது. AK62 திரைப்படம் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்னரே ஓடிடி உரிமையை கைப்பற்றிய தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பகிரப்பட்டு வந்தன. இந்த சூழ்நிலையில் விக்னேஷ் சிவன் AK62 திரைப்படத்தை இயக்க போவதில்லை என்றும் இயக்குனர் மகிழ் திருமேனி அப்படத்தை இயக்கப்போவதாகவும் தகவல்கள் வெளியாகின. விக்னேஷ் சிவன் கூறிய ஸ்க்ரிப்ட் மீது அஜித்திற்கு ஈடுபாடு இல்லை என்பது தான் காரணமாக கூறப்படுகிறது. 

அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் :

AK62 திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளது. ஆக்ஷன் படங்களுக்கு பெயர் போன மகிழ் திருமேனி இயக்க உள்ளார் என்ற அதிகாரப்பூர்வமான தகவலை தயாரிப்பு நிறுவனம் விரைவில் அறிவிக்கும் என எதிர்பாக்கப்படுகிறது. இந்த தகவல் அஜித் ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்தாலும் விக்னேஷ் சிவன் கூட்டணி மிஸ் ஆனதை நினைத்து சற்று வேதனையும் கொடுக்கத்தான் செய்கிறது. இருப்பினும் தவறிய இந்த வாய்ப்பு நிச்சயமாக எதிர்காலத்தில் நடக்கும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. 

மீகாமன் அட்வான்ஸ் வெர்ஷன்தான் விக்ரம் :

மகிழ் திருமேனி இயக்கத்தில் 2014ம் ஆண்டு ஆர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் 'மீகாமன்'. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான பிளாக் பஸ்டர் ஹிட் திரைப்படமான 'விக்ரம்' திரைக்கதையும் 'மீகாமன்' திரைக்கதையும் ஒரே மாதிரியாகத்தான் இருந்தது. அது மட்டுமின்றி  இரண்டு படங்களிலும் இருந்த தேள் சிம்பிள், சிட்டி - சந்தானம், அவினாஷ் - ஜோஷ், பாரதி - பிஜாய், குரு - அடைக்கலம், அருள் - விக்ரம், ஜோதி - ரோலெக்ஸ் என அனைத்து கதாபாத்திரங்களின் ஒற்றுமை காணப்பட்டன. லோகேஷ் கனகராஜ் சொல்ல வந்த கான்செப்டை 2014-ஆம் ஆண்டே 'மீகாமன்' திரைப்படம் மூலம் ரசிகர்களுக்கு கொடுத்துவிட்டார் மகிழ் திருமேனி என லோகேஷை ட்ரோல் செய்து வருகிறார்கள் நெட்டிசன்கள். எனவே அஜித் - மகிழ் திருமேனி கூட்டணி சேரும் AK62 திரைப்படம் மீது ரசிகர்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

விக்ரம் வெற்றியின் காரணம் :

இருந்தாலும் விக்ரம் படத்திற்கு கிடைத்த வரவேற்பும் வசூலும் சிறிதளவு கூட 'மீகாமன்' திரைப்படத்துக்கு கிடைக்கவில்லை. அதற்கு முக்கியமான காரணம் விக்ரம் திரைப்படத்தில் ரசிகர்களுக்கு சிறிதும் சலிப்பு இல்லாமல் கூறப்பட்ட இமோஷன் சேர்ந்த திரைக்கதைதான்.

தலைப்பு செய்திகள்

கமல் பட நடிகையை கடிக்கப் பாய்ந்த நாய்... பதறிப்போன ரசிகர்கள்! வைரலாகும் வீடியோ
கமல் பட நடிகையை கடிக்கப் பாய்ந்த நாய்... பதறிப்போன ரசிகர்கள்! வைரலாகும் வீடியோ
இது இல்லையென்றால் ரஜினி படமாக இருந்தாலும் தயாரிக்க மாட்டோம்..ஓப்பனாக பேசிய அர்ச்சனா கல்பாத்தி
இது இல்லையென்றால் ரஜினி படமாக இருந்தாலும் தயாரிக்க மாட்டோம்..ஓப்பனாக பேசிய அர்ச்சனா கல்பாத்தி
மிஸ் ஆகும் பழைய மேஜிக்...ஆல்பம் ஹிட் கொடுத்த ஜிவி பிரகாஷ் என்ன ஆனார்?
மிஸ் ஆகும் பழைய மேஜிக்...ஆல்பம் ஹிட் கொடுத்த ஜிவி பிரகாஷ் என்ன ஆனார்?
'செய்! செய்யாதே!' இசை, டிரெய்லர் வெளியீடு... சமூக விழிப்புணர்வு படத்திற்கு பிரபலங்கள் வாழ்த்து
'செய்! செய்யாதே!' இசை, டிரெய்லர் வெளியீடு... சமூக விழிப்புணர்வு படத்திற்கு பிரபலங்கள் வாழ்த்து

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
Iran Missile Plan: ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
BYD Flex Fuel Hybrid SUV: பட்டையை கிளப்பும் BYD.! இனி பெட்ரோல், எத்தனால், EV எல்லாம் ஒரே காரில்.! Flex Fuel ஹைப்ரிட் SUV அறிமுகம்
பட்டையை கிளப்பும் BYD.! இனி பெட்ரோல், எத்தனால், EV எல்லாம் ஒரே காரில்.! Flex Fuel ஹைப்ரிட் SUV அறிமுகம்
Mojtaba Khamenei: மிகவும் கவலைக்கிடமான நிலையில் மொஜ்தபா.? ஈரானில் பரவிய தகவலால் தலைவர்களிடையே உச்ச பதற்றம்
மிகவும் கவலைக்கிடமான நிலையில் மொஜ்தபா.? ஈரானில் பரவிய தகவலால் தலைவர்களிடையே உச்ச பதற்றம்
E3 Trion EV Scooter Variants Price: 52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
Embed widget