மேலும் அறிய

Top 5 Movies: முந்தைய சாதனையை முறியடிக்குமா 'குட் பேட் அக்லி'! அஜித்தின் டாப் 5 பாக்ஸ் ஆபீஸ் மூவிஸ்!

அஜித் நடிப்பில் உருவாகியிருக்கும் 'குட் பேட் அக்லி' இன்று வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று வரும் நிலையில், இதற்க்கு முன் ரூ.100 கோடிக்கு அதிகமாக வசூல் குவித்த அஜித்தின் டாப் 5 மூவிஸ் என்னென்ன தெரியுமா.

2025 ஆம் ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அஜித் குமாரின் 'குட் பேட் அக்லி' இன்று வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அஜித் ரசிகர்களுக்காகவே எடுக்கப்பட்ட படமாக இருப்பதாக பலரும் கூறி வருகின்றனர். இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனும் அஜித் ரசிகர்கள் என்பதால் ஒவ்வொரு காட்சியையும் பார்த்து பார்த்து எடுத்து இப்போது ரசிகர்களை கொண்டாட வைத்திருக்கிறார். 

இது வரையில் அஜித் நடிப்பில் வெளியான எந்தப் படமும் ரூ.200 கோடியை எட்டாத நிலையில் 'குட் பேட் அக்லி' அந்த சாதனையை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அஜித் நடிப்பில் வெளியான படங்களில் அதிக வசூல் குவித்த டாப் 5 பெஸ்ட் மூவிஸ் என்னென்ன என்று இந்த தொகுப்பில் முழுவதும் பார்க்கலாம். 

துணிவு:

கடந்த 2023 ஆம் ஆண்டு திரைக்கு வந்த படம் தான் 'துணிவு'. முழுக்க முழுக்க ஆக்‌ஷன் காட்சிகளை மையப்படுத்திய இந்தப் படம் வங்கி கொள்ளையை மையப்படுத்தி எடுக்கப்பட்டது. இயக்குநர் ஹெச் வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான இந்தப் படம் உலகளவில் ரூ.194 கோடிக்கும் அதிகமாக வசூல் குவித்துள்ளது. இந்தப் படத்தில் அஜித்துடன் இணைந்து மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, ஜான் கொக்கைன் மகாநதி சங்கர், பால சரவணன், பவானி ரெட்டி, மமதி சாரி ஆகியோர் பலர் நடித்திருந்தனர். இந்தப் படம் கலவையான விமர்சனங்களை எதிர்கொண்டிருந்தாலும் வசூலில் ரூ.194 கோடிக்கு அதிகமாக குவித்து வெற்றி படமாக அமைந்துள்ளது.


Top 5 Movies: முந்தைய சாதனையை முறியடிக்குமா 'குட் பேட் அக்லி'! அஜித்தின் டாப் 5 பாக்ஸ் ஆபீஸ் மூவிஸ்!

விஸ்வாசம்:

இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் குமார், நயன்தாரா ஆகியோர் முன்னணி ரோலில் நடித்து வெளியான படம் தான் 'விஸ்வாசம்'. முழுக்க முழுக்க குடும்பக் கதையை மையப்படுத்திய இந்தப் படம் ஒரு அப்பாவிற்கும் - மகளுக்குமான பாசப்பிணைப்பை வெளிக்காட்டியது. இந்தப் படத்தில் அஜித் உடன் இணைந்து தம்பி ராமையா, ரோபோ சங்கர், விவேக், கோவை சரளா, ஜகபதி பாபு ஆகியோர் பலர் நடித்திருந்தனர். இந்த படம் உலகளவில் பாக்ஸ் ஆபிஸில் ரூ.180 கோடிக்கு மேல் வசூல் குவித்தது.

வலிமை:

நேர்கொண்ட பார்வை படத்திற்கு பிறகு எச் வினோத் மற்றும் அஜித் குமார் கூட்டணியில் உருவான 2ஆவது படம் தான் வலிமை. முழுக்க முழுக்க ஆக்‌ஷன் கதையை மையப்படுத்திய இந்தப் படம் போதைப் பொருள் தடுப்பு கதையை பிரதிபலித்தது. இந்தப் படம் ரூ.152 கோடி வரையில் வசூல் குவித்து ஒரு சராசரி பாக்ஸ் ஆபிஸ் படமாக அமைந்தது. இந்தப் படத்தில் அஜித் உடன் இணைந்து ஹூமா குரேஷி, கார்த்திகேயா, குர்பானி ஜட்ஜ் ஆகியோர் பலர் நடித்திருந்தனர்.

விவேகம்:

இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் 2ஆவது முறையாக இணைந்து நடித்து 2017ல் வெளியான படம் தான் விவேகம். இந்தப் படத்தில் அஜித்துடன் இணைந்து காஜல் அகர்வால், விவேக் ஓபராய், அக்‌ஷரா ஹாசன் ஆகியோர் பலர் நடித்திருந்தனர். இந்தப் படம் உலகளவில் பாக்ஸ் ஆபிஸில் ரூ.121 கோடிக்கும் அதிகமாக வசூல் குவித்தது. கலவையான விமர்சனங்களை எதிர்கொண்ட இந்தப் படம் வசூலில் பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.


Top 5 Movies: முந்தைய சாதனையை முறியடிக்குமா 'குட் பேட் அக்லி'! அஜித்தின் டாப் 5 பாக்ஸ் ஆபீஸ் மூவிஸ்!

வேதாளம்:

இயக்குநர் சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வெளியான படம் தான் வேதாளம். அண்ணன் தங்கை கதையை வெளிப்படுத்திய இந்தப் படம் வசூல் ரீதியாக ரூ.119 கோடிக்கும் அதிகமாக எடுத்துக் கொடுத்தது. இந்தப் படத்தில் அஜித் உடன் இணைந்து லட்சுமி மேனன், ஸ்ருதி ஹாசன், சூரி, தம்பி ராமையா, மன்சூர் அலி கான் ஆகியோர் பலர் நடித்திருந்தனர். 

இதற்கு முன் வெளியான படங்களின் வசூல் சாதனையை முறியடித்து... 200 கோடிக்கும் அதிகமாக குட் பேட் அக்லி படம் நிலையான இடத்தை பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. திரைப்பட பாக்ஸ் ஆபீஸ் நிபுணர்களும் கிட்ட தட்ட இந்த கருத்தை தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

Indian 3 : ரிலீஸூக்கு தயாராகும் இந்தியன் 3...லைகா ப்ரோடக்‌ஷன்ஸ் அறிவிப்பு
Indian 3 : ரிலீஸூக்கு தயாராகும் இந்தியன் 3...லைகா ப்ரோடக்‌ஷன்ஸ் அறிவிப்பு
சாரி தல குடும்பத்த பாக்கனும்...ஆதரவு கேட்ட அஜித்திற்கு ரசிகர்கள் கொடுத்த ரகளையான ரிப்ளை
சாரி தல குடும்பத்த பாக்கனும்...ஆதரவு கேட்ட அஜித்திற்கு ரசிகர்கள் கொடுத்த ரகளையான ரிப்ளை
ஜெயிலர் 2 படத்துடன் நேருக்கு நேர் மோதும் அந்த சின்ன பட்ஜெட் படம்...யார் அந்த தைரியசாலி?
ஜெயிலர் 2 படத்துடன் நேருக்கு நேர் மோதும் அந்த சின்ன பட்ஜெட் படம்...யார் அந்த தைரியசாலி?
திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றிய பிக்பாஸ் முத்துக்குமரன்..பெண் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ
திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றிய பிக்பாஸ் முத்துக்குமரன்..பெண் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ

வீடியோ

Congress MLA Abuse : எல்லை மீறிய காங். எம்.எல்.ஏ! ஓடும் பேருந்தில் அநாகரிகம்.. விளாசும் நெட்டிசன்கள்
TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt: அடடே..! வெற்றிப் பயணத்தால் ஆண்களுக்கும் பேருந்து கட்டணம் குறைப்பு - எவ்வளவு, எப்படி தெரியுமா?
அடடே..! வெற்றிப் பயணத்தால் ஆண்களுக்கும் பேருந்து கட்டணம் குறைப்பு - எவ்வளவு, எப்படி தெரியுமா?
TN Govt: சொத்து விவரங்களை தராவிட்டால் பதவி உயர்வு இல்லை - அரசு ஊழியர்களுக்கு விஜய் அரசு அதிரடி உத்தரவு
சொத்து விவரங்களை தராவிட்டால் பதவி உயர்வு இல்லை - அரசு ஊழியர்களுக்கு விஜய் அரசு அதிரடி உத்தரவு
Chennai Airport: சென்னை விமான நிலையத்திற்கு அப்க்ரேட் வருமா? வராதா? 2வது கட்ட ஆய்வு - 8 மாதம், உயரடுக்கு மேம்பாலம்
சென்னை விமான நிலையத்திற்கு அப்க்ரேட் வருமா? வராதா? 2வது கட்ட ஆய்வு - 8 மாதம், உயரடுக்கு மேம்பாலம்
Nana Patekar: ரஜினியின் காலா திரைப்பட வில்லன் நானே படேகர் திடீர் மரணம்..! அதிகாலையில் வீட்டில் நேர்ந்த சோகம்
ரஜினியின் காலா திரைப்பட வில்லன் நானே படேகர் திடீர் மரணம்..! அதிகாலையில் வீட்டில் நேர்ந்த சோகம்
Tata EV Discount: கொளுத்துங்க பட்டாச..! தீபாவளிக்காக ரூ.3.35 லட்சம் வரை தள்ளுபடி - டாடாவின் எந்தெந்த கார்களுக்கு?
கொளுத்துங்க பட்டாச..! தீபாவளிக்காக ரூ.3.35 லட்சம் வரை தள்ளுபடி - டாடாவின் எந்தெந்த கார்களுக்கு?
TN Weather News: 22 மாவட்டங்களுக்கு இன்று வார்னிங், எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை? தமிழக வானிலை அறிக்கை
22 மாவட்டங்களுக்கு இன்று வார்னிங், எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Rasi Palan Today (08.10.2026): மேஷம் சிக்கல்.. கன்னிக்கு தடங்கல்.. அப்ப உங்க ராசிக்கு இன்னைக்கு நல்லது நடக்குமா?
Rasi Palan Today (08.10.2026): மேஷம் சிக்கல்.. கன்னிக்கு தடங்கல்.. அப்ப உங்க ராசிக்கு இன்னைக்கு நல்லது நடக்குமா?
MG Hector Storm: பீஸ்ட் மோடில் ஸ்டோர்ம் சீரிஸை இறக்கிய MG ஹெக்டர்..! சிறப்பம்சங்கள் என்ன? விலைக்கு வொர்த்தா?
பீஸ்ட் மோடில் ஸ்டோர்ம் சீரிஸை இறக்கிய MG ஹெக்டர்..! சிறப்பம்சங்கள் என்ன? விலைக்கு வொர்த்தா?
Embed widget