Good Bad Ugly 2nd Look: அஜித்தின் குட் பேட் அக்லி படத்தின் செகண்ட் லுக் இதோ..
Good Bad Ugly Second Look: அஜித் நடித்து வரும் குட் பேட் அக்லி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானதைத் தொடர்ந்து தற்போது இப்படத்தின் செகண்ட் லுக் வெளியாகியுள்ளது
![Good Bad Ugly 2nd Look: அஜித்தின் குட் பேட் அக்லி படத்தின் செகண்ட் லுக் இதோ.. ajith kumar good bad ugly second look movie update Good Bad Ugly 2nd Look: அஜித்தின் குட் பேட் அக்லி படத்தின் செகண்ட் லுக் இதோ..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/27/a8e205718f47831d85e20a18e5262ad91719494029216572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
அஜித் குமார்
நடிகர் அஜித் குமார் தற்போது ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடித்து வருகிறார். அஜித்தின் 62-வது படமான விடாமுயற்சி படத்தை மகிழ் திருமேனி இயக்குகிறார். லைகா ப்ரோடக்ஷன்ஸ் இந்தப் படத்தை தயாரிக்கிறது. அர்ஜூன் , த்ரிஷா , ஆரவ் , ரெஜினா உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடிக்கிறார்கள். அனிருத் இசையமைக்க நிரவ் ஷா மற்றும் ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்கிறார்கள்.
விடாமுயற்சி
கடந்த ஆண்டு தொடங்கிய விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு இடைப்பட்ட காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. விடாமுயற்சி படம் கைவிடப்பட்டதாக பல்வேறு வதந்திகள் சமூக வலைதளத்தில் பரவின. இதனைத் தொடர்ந்து படம் கைவிடப்படவில்லை என்றும் இந்த ஆண்டு தீபாவளிக்கு படம் நிச்சயம் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு உறுதிபடுத்தியுள்ளது. ஒரு சில காரணங்களால் நிறுத்திவைக்கப்பட்டிருந்த படப்பிடிப்பு கடந்த வாரம் மீண்டும் அஜர்பைஜானில் தொடங்கியுள்ளது.
இன்னும் 30 சதவீதம் படப்பிடிப்பு பாக்கியிருக்கும் நிலையில் அடுத்த சில மாதங்களில் முடிவடைந்து படம் ரிலீஸூக்கு தயாராகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குட் பேட் அக்லி
விடாமுயற்சி படப்பிடிப்பு நிறுத்திவைக்கப்பட்ட நேரத்தில் அஜித் நடிக்கும் 63-வது படத்தின் அறிவிப்பு வெளியானது. மார்க் ஆண்டனி படத்தை இயக்கி பாக்ஸ் ஆபிஸ் ஹிட் கொடுத்த ஆதிக் ரவிச்சந்திரன் இந்தப் படத்தை இயக்குகிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் இந்தப் படத்தை தயாரிக்கிறது, தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். 2025ஆம் ஆண்டு பொங்கலுக்கு குட் பேட் அக்லி வெளியாகும் என டைட்டில் அறிவிப்பின்போதே அதிரடியாக அறிவித்த படக்குழு, தொடர்ந்து கடந்த மே மாதம் படப்பிடிப்பைத் தொடங்கியது.
முதற்கட்டமாக ஆக்ஷன் காட்சிகள் ஹைதராபாத்தில் படமாக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. இதில் மூன்று கதாபாத்திரங்களில் அஜித் தோன்றியது படத்தின் மீதான ரசிகர்களின் ஆர்வத்தைத் தூண்டியது. இதனைத் தொடர்ந்து தற்போது படத்தின் அடுத்த அப்டேட் வெளியிட்டுள்ளது படக்குழு.
The second look of #GoodBadUgly !!!
— Mythri Movie Makers (@MythriOfficial) June 27, 2024
God bless u mamae#GoodBadUgly In Cinemas Pongal 2025 🔥
#AjithKumar @MythriOfficial @Adhikravi @ThisIsDSP @suneeltollywood @AbinandhanR @editorvijay @GoodBadUglyoffl @SureshChandraa @supremesundar #Kaloianvodenicharov… pic.twitter.com/bJjpAct9lj
இந்நிலையில், குட் பேட் அக்லி படத்தின் செகண்ட் லுக் தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)