விஜயின் தி கோட் வசூலை மிஞ்சியதா குட் பேட் அக்லி...முன்பதிவு வசூலில் யார் உண்மையான கிங்
விஜயின் தி கோட் படம் முன்பதிவில் ரூ 63 கோடி வசூலித்த நிலையில் அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் ரூ 28 கோடி மட்டுமே வசூலித்துள்ளது

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள குட் பேட் அக்லி திரைப்படம் நாளை ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. அர்ஜூன் தாஸ் ,பிரபு , த்ரிஷா , சுனில் , யோகிபாபு , ரெடின் கிங்ஸ்லி , பிரசன்னா , பிரியா பிரகாஷ் வாரியர் , சிம்ரன் என பெரும் நட்சத்திர பட்டாளம் இப்படத்தில் நடித்துள்ளார்கள். ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளார்கள்.
குட் பேட் அக்லி முன்பதிவு
அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான விடாமுயற்சி திரைப்படம் பாசிட்டிவான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல் ரீதியாக பின் தங்கியது. சுமாரான ப்ரோமோஷன் , பட ரிலீஸ் தாமதம் , கலவையான விமர்சனங்கள் என பல அம்சங்கள் படத்திற்கு பாதகமாக அமைந்தன. விடாமுயற்சி படத்தைக் காட்டிலும் குட் பேட் அக்லி படத்திற்கு பல மடங்கு அதிக வரவேற்பு ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது.
கடந்த ஏப்ரல் 4 ஆம் தேதி இப்படத்தின் டிக்கெட் முன்பதிவுகள் தொடங்கின. முன்பதிவுகள் தொடங்கிய சில மணி நேரத்தில் எல்லா காட்சிகளும் நிறைந்தன. தற்போது வரை குட் பேட் அக்லி படம் முதல் நாளில் 28 கோடி வரை வசூல் செய்துள்ளது. வேறு எந்த படமும் வெளியாகதால் குட் பேட் அக்லி படத்திற்கு இரண்டு வாரங்கள் வரை மக்கள் வரத்து இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. படம் பாசிட்டிவான விமர்சனங்களைப் பெறும் பட்சத்தில் வசூலும் அதிகரிக்கும்
தி கோட் பட வசூலை மிஞ்சியதா குட் பேட் அக்லி
குட் பேட் அக்லி படத்திற்கு பெரியளவில் எதிர்பார்ப்பு இருந்தாலும் விஜயின் தி கோட் பட சாதனைக்கு மிக தூரத்தில் உள்ளது. வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான தி கோட் திரைப்படம் , முன்பதிவுகளில் மட்டுமே ரூ 63 கோடி வசூலித்தது. தி கோட் படத்துடன் ஒப்பிடுகையில் குட் பேட் அக்லி திரைப்படம் இன்னும் பாதி கடைலையே தாண்டியிருக்கிறது.
தமிழ் மற்றும் தெலுங்கில் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு இருந்தாலும் வட மாநிலங்களில் படத்திற்கு பெரியளவில் திரையரங்குகள் கிடைக்கவில்லை. மேலும் இந்தியில் இப்படத்திற்கு படக்குழு சார்பாக எந்த ப்ரோமோஷனும் செய்யவில்லை. இதனால் குட் பேட் அக்லி பட வசூலில் கனிசமான அளவு தாக்கம் ஏற்படும் என எதிர்பார்க்கப் படுகிறது.





















