மேலும் அறிய

Vidamuyarchi : அப்டேட் வந்தால்தான் எங்களுக்கு தீபாவளி... எதிர்பார்ப்பில் அஜித் ரசிகர்கள்

மற்ற நடிகர்கள் அடுத்தடுத்தப் படங்கள் குறித்த அப்டேட்களை வெளியிடும் சூழலில் அஜித் ரசிகர்கள் மட்டும் எந்த உற்சாகமும் இல்லாமல் காத்து வருகிறார்கள்

ஸ்டார்களின் அடுத்தடுத்த அப்டேட்கள்

 சமீப காலங்களில் தமிழ் சினிமா நடிகர்கள் புதிய ட்ரெண்ட் ஒன்றை பின்பற்றி வருகிறார்கள்.  ஒரு படத்தின் படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கும் அதே நேரத்தில் தங்களது அடுத்தடுத்தப் படங்கள் பற்றிய தகவல்களையும் வெளியிட்டு வருகிறார்கள். இந்த தகவல்கள் ரசிகர்களை உற்சாகப் படுத்தவும் செய்கிறது. உதாரணமாக

ரஜினிகாந்த்

ஜெயிலர் திரைப்படத்தைத் தொடர்ந்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தலைவர் 170 படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கியிருக்கிறார். மஞ்சு வாரியர், அமிதாப் பச்சன், ரானா டகுபதி, ரித்திகா சிங், துஷாரா விஜயன், ஃபகத் ஃபாசில் உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடிக்க அனிருத் இசையமைக்கிறார் . த.செ ஞானவேல் இந்தப் படத்தை இயக்குகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்புத் தொடங்கிய அதே நேரத்தில்  தலைவர் 171 படம் குறித்த அப்டேட் வெளியானது. லோகேஷ் கனகராஜ் இந்தப் படத்தை இயக்க அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார்.

கமல்ஹாசன்

விக்ரம் படத்தைத் தொடர்ந்து எச் வினோத் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் இயக்கும் படம் KH233. இதனைத் தொடர்ந்து  மனிரத்னம் இயக்கும் KH234 படத்தில் நடிக்க இருக்கிறார் கமல்ஹாசன் ஏ.ஆர் ரஹ்மான் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். விரைவில் இந்தப் படத்தின் ப்ரோமோ வெளியாக இருக்கிறது.

விக்ரம்

சமீபத்தில் விக்ரம் நடித்துள்ள  துருவ நட்சத்திரம் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே  நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி இருக்கும் தங்கலான் திரைப்படத்தின் ரிலீஸ் தேதியும் டீசர் ரிலீஸ் தேதியும் படக்குழு அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து இன்று மாலை சியான் விக்ரம் நடிக்க இருக்கும் 62 ஆவது படம் குறித்த தகவலும் வெளியாக இருக்கிறது.

சூர்யா

சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கும் கங்குவாத்  திரைப்படத்தின் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து வெற்றிமாறன் இயக்க இருந்த வாடிவாசல் படத்தில் சூர்யா நடிக்க இருந்தார். வெற்றிமாறன் தற்போது இயக்கிவரும் விடுதலை 2 படத்தின் தாமதம் காரணமாக வாடிவாசல் படப்பிடிப்பைத் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் தற்போது சுதா கொங்காராவுடன் இரணடாவது முறையாக இணந்துள்ளார் சூர்யா. புறநாநூறு என்று இந்தப் படத்திற்கு டைட்டில் வைக்கப் பட்டுள்ல நிலையில் துல்கர் சல்மான், நஸ்ரியா நஸிம், விஜய் வர்மா உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடிக்க இருக்கிறார்கள்

விஜய்

லியோ படத்தைத் தொடர்ந்து தற்போது வெங்கட் பிரபு இயக்கும் தளபதி 68 இல் இணைந்துள்ளார் நடிகர் விஜய். மீனாக்‌ஷி செளதரி, பிரஷாந்த், மோகன், பிரபுதேவா, பிரேம்ஜீ, சினேகா, லைலா உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடிக்கிறார்கள். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

தனுஷ்

கேப்டன் மில்லர், தேரே இஷ்க் மே, D50, D51 என எடுத்தடுத்தப் படங்களை வரிசையில் வைத்திருக்கிறார் நடிகர் தனுஷ். அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் கேப்டன் மில்லர் படம் வருகின்ற டிசம்பர் 15 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

அஜித்

மற்ற நடிகர்களின் ரசிகர்கள் இப்படி கை நிறையத் தகவலுடன் இருக்க அஜித் ரசிகர்கள் அஜித்  நடித்து வரு விடாமுயற்சி படத்தின் அப்டேட் வராமல் காத்து வருகிறார்கள். ஒவ்வொரு வருடமும் அஜித் ரசிகர்கள் அஜித் குமார் படங்களுக்காக இப்படி காத்திருப்பது வழக்கமாகி விட்டது. ஊரே தீபாவளியை சிறப்பாக கொண்டாடும் நேரத்தில் தன்னுடைய ரசிகர்களை கருத்தி கொண்டு அவர்களுக்கு விடாமுயற்சி படம் குறித்த அப்டேட் ஏதாவது அஜித் குமார் தருவார் என்று எதிர்பார்க்கலாம்.

தலைப்பு செய்திகள்

Venkat Prabhu: வெங்கட் பிரபுவிற்கு கால்ஷீட் கொடுத்து ஏமாற்றிய பிரபல நடிகர்! யாரு அந்த ஹீரோ?
Venkat Prabhu: வெங்கட் பிரபுவிற்கு கால்ஷீட் கொடுத்து ஏமாற்றிய பிரபல நடிகர்! யாரு அந்த ஹீரோ?
Azhagae Azhagu: தங்கராஜிடம் வசமாக மாட்டிய பெண்கள் குரூப்.. அழகே அழகு சீரியலில் இந்த வாரம் நடப்பது என்ன?
Azhagae Azhagu: தங்கராஜிடம் வசமாக மாட்டிய பெண்கள் குரூப்.. அழகே அழகு சீரியலில் இந்த வாரம் நடப்பது என்ன?
முதல் பாதியில் கேள்விகள்... 2-ஆம் பாதியில் அதிரடி திருப்பங்கள்: மிரட்ட வரும் 'கிட்டி'..
முதல் பாதியில் கேள்விகள்... 2-ஆம் பாதியில் அதிரடி திருப்பங்கள்: மிரட்ட வரும் 'கிட்டி'..
எவனோ முட்டாள் சொன்னானு சண்டைக்கு போகாதீங்க...ரசிகர்களுக்கு சூர்யா அறிவுரை
எவனோ முட்டாள் சொன்னானு சண்டைக்கு போகாதீங்க...ரசிகர்களுக்கு சூர்யா அறிவுரை

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
RTI Act: இதுதான் விஜயின் வெளிப்படைத்தன்மையா? புதிய அரசாணையால் RTI ஆர்வலர்கள் ஆவேசம் - குவியும் எதிர்ப்பு
இதுதான் விஜயின் வெளிப்படைத்தன்மையா? புதிய அரசாணையால் RTI ஆர்வலர்கள் ஆவேசம் - குவியும் எதிர்ப்பு
CM Joseph Vijay: சொல்ல முடியாத சோகம்.. கரூர் சம்பவத்தின் ஓராண்டு.. வேதனையுடன் அஞ்சலி செலுத்திய விஜய்!
CM Joseph Vijay: சொல்ல முடியாத சோகம்.. கரூர் சம்பவத்தின் ஓராண்டு.. வேதனையுடன் அஞ்சலி செலுத்திய விஜய்!
Chennai Airport: போரூர் பைபாஸ் டூ சென்னை ஏர்போர்ட்டிற்கு நேரடி மேம்பால சாலை - அடையாறு ஆறின் மீது திட்டம்
போரூர் பைபாஸ் டூ சென்னை ஏர்போர்ட்டிற்கு நேரடி மேம்பால சாலை - அடையாறு ஆறின் மீது திட்டம்
Virat Kohli: சண்டே ஜாலிடே.. 86வது சதத்தை விளாசினார் கோலி! செஞ்சுரி மெஷின் இஸ் பேக்!
Virat Kohli: சண்டே ஜாலிடே.. 86வது சதத்தை விளாசினார் கோலி! செஞ்சுரி மெஷின் இஸ் பேக்!
Tasmac: 43 டாஸ்மாக் கடைகளை தூக்கியே ஆகனும்..! தலைமை செயலாளருக்கே லெட்டர் போட்ட ரயில்வே, ஏன்? எங்கே?
43 டாஸ்மாக் கடைகளை தூக்கியே ஆகனும்..! தலைமை செயலாளருக்கே லெட்டர் போட்ட ரயில்வே, ஏன்? எங்கே?
Toyota Innova flex fuel: 1 கிமீ-க்கு ரூ.25 செலவில் சொகுசுப் பயணம்.! இன்னோவா 100% Flex Fuel அறிமுகம்; நிதின் கட்கரி முக்கிய தகவல்
1 கிமீ-க்கு ரூ.25 செலவில் சொகுசுப் பயணம்.! இன்னோவா 100% Flex Fuel அறிமுகம்; நிதின் கட்கரி முக்கிய தகவல்
IND vs WI: 296 ரன்கள் டார்கெட்.. இமாலய இலக்கை நோக்கி இந்தியா! வெற்றியுடன் தொடங்குமா கில் படை?
IND vs WI: 296 ரன்கள் டார்கெட்.. இமாலய இலக்கை நோக்கி இந்தியா! வெற்றியுடன் தொடங்குமா கில் படை?
Mahindra Thar OG Review: புதிய மஹிந்திரா தார் OG உண்மையிலேயே கெத்து காட்டுதா.? அதன் நிறை, குறைகள பற்றி தெரிஞ்சுக்கோங்க
புதிய மஹிந்திரா தார் OG உண்மையிலேயே கெத்து காட்டுதா.? அதன் நிறை, குறைகள பற்றி தெரிஞ்சுக்கோங்க
Embed widget