மேலும் அறிய
விடாமுயற்சியில் த்ரிஷாவுக்கு ஆக்ஷன் காட்சிகளா? வெளியான புது எக்ஸ்க்ளூசிவ் தகவல்கள்..
Vidaamuyarchi Trisha Role: ஹோம்லி லுக்கில் ரசிகர்களை கவர்ந்த த்ரிஷா விடாமுயற்சி படத்தில் ஸ்டைலிஷ் கேரக்டரிலும், ஆக்ஷன் காட்சிகளிலும் நடிப்பதாக கூறப்படுகிறது.
Vidaamuyarchi Trisha Role: அஜித் நடிக்கும் விடா முயற்சி படத்தில் த்ரிஷாவுக்கு ஆக்ஷன் காட்சிகள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த ஆண்டு தொடக்கத்தில் துணிவு படம் வெளியானதை தொடர்ந்து அஜித் அடுத்ததாக நடிக்கும் படம் விடாமுயற்சி என அறிவிக்கப்பட்டது. மகிழ் திருமேனி இயக்கும் இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, அனிருத் இசையமைக்கிறார். படத்தில் அஜித்துடன் இணைந்து த்ரிஷா, ரெஜினா, ஆரவ், பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்டோர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர். இதேபோல் லியோவில் விஜய்க்கு வில்லனாக வந்து மிரட்டிய அர்ஜூன் விடாமுயற்சி படத்திலும் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.
படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடைபெற்று வருகிறது. இதற்காக அஜித், த்ரிஷா உள்ளிட்டோர் அஜர்பைஜன் சென்றிருந்த புகைப்படங்களும் வைரலாகின. இந்த நிலையில் கடந்த இரண்டு வாரத்திற்கு முன்பு அஜர்பைஜனில் இருந்து சென்னை வந்த அஜித் தனது குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டார். அடுத்தக்கட்ட ஷீட்டிங்கிற்காக அஜித் மீண்டும் அஜர்பைஜனிற்கு சென்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.
It sounds like #AjithKumar is heading to Azerbaijan for the shooting of "#VidaaMuyarchi." Safe travels to him and the team! 🎬✈️ This Schedule 70 Days Plan 2024 February Month Full Shoot Wrapped#Trisha | #Anirudh | #TamilMovie pic.twitter.com/axOU0rTxaV
— Movie Tamil (@MovieTamil4) December 9, 2023
இந்த சூழலில் விடாமுயற்சி படத்தில் த்ரிஷாவின் கேரக்டர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. ஹோம்லி லுக்கில் ரசிகர்களை கவர்ந்த த்ரிஷா விடாமுயற்சி படத்தில் டைலிஷ் கேரக்டரிலும், ஆக்ஷன் காட்சிகளிலும் நடிப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் வரும் த்ரிஷாவை இதுவரை எந்த ஒரு படத்திலும் பார்த்திருக்க முடியாது என்றும் கூறப்படுகிறது. முன்னதாக அஜித்துடன் இணைந்து ஜீ, கிரீடம், என்னை அறிந்தால், மங்காத்தா உள்ளிட்ட படங்களில் த்ரிஷா நடித்துள்ளார். அண்மையில் வெளிவந்த லியோ படத்தில் கியூட்டான ஹோம்லி லுக்கில் நடித்த த்ரிஷா ரசிகர்களின் எவர்கிரீன் நடிகையாக வலம் வருகிறார்.
முன்னதாக அஜித்தின் 62வது படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக கூறப்பட்டது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத விதத்தில் அஜித்தின் 62வது படத்தை மகிஷ் திருமேனி இயக்க ஒப்பந்தமாகியுள்ளார். அண்மையில் அருண் விஜய் நடிப்பில் வெளிவந்த தடம் படம் ஆக்ஷன் காட்சிகளில் அசத்தியது. இதனால், விடாமுயற்சி படத்தில் அஜித்திற்கான அதிரடி ஆக்ஷன் காட்சிகள் இடம்பெற்று அவரது ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுக்கும் என கூறப்படுகிறது.
இதற்கிடையே விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டிசம்பர் 31 அல்லது ஜனவரி 1-ஆம் தேதி வெளியாகும் என கூறப்படுகிறது. அதேநாளில் விஜய் நடிக்கும் தளபதி 68 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
மேலும் படிக்க: Entertainment Headlines: விடாமுயற்சி ஷூட்டிங் முதல் ரெடின் கிங்ஸ்லி திருமணம் வரை.. சினிமா டவுண்ட்-அப் இன்று!
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
விளையாட்டு
தமிழ்நாடு
விளையாட்டு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion