Hindi : இந்தி தேசிய மொழியா? அப்புறம் என்னத்துக்கு.. அஜய் தேவ்கனுக்குப் பாடமெடுத்த வில்லன்.. கூட சேர்ந்து அடித்த ட்விட்டர்..
நடிகர் கிச்சா சுதீப்பிடம் ட்விட்டரில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அஜய் தேவ்கனுக்கு அவரது ஃபாலோயர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
‘இந்திதான் தேசிய மொழி’ என நடிகர் அஜய் தேவ்கன் நடிகர் கிச்சா சுதீப்புக்கு பாடமெடுத்ததால் டிவிட்டர் ஃபாலோயர்களால் விமர்சிக்கப்பட்டு வருகிறார். அண்மையில் நடந்த நிகழ்வு ஒன்றில் பேசிய நடிகர் கிச்சா சுதீப், ‘இந்தி இனி ஒருபோதும் தேசிய மொழியாக முடியாது’ எனப் பேசியிருந்தார். இதற்கு ட்விட்டரில் பதில் அளித்த அஜய் தேவ்கன், ‘எனது சகோதரா, இந்திதான் எப்போதும் நம் தேசிய மொழி அதனை மாற்ற முடியாது’ எனக் குறிப்பிட்டிருந்தார். அது தற்போது சர்ச்சைக்கு உள்ளாகி வருகிறது.
.@KicchaSudeep मेरे भाई,
— Ajay Devgn (@ajaydevgn) April 27, 2022
आपके अनुसार अगर हिंदी हमारी राष्ट्रीय भाषा नहीं है तो आप अपनी मातृभाषा की फ़िल्मों को हिंदी में डब करके क्यूँ रिलीज़ करते हैं?
हिंदी हमारी मातृभाषा और राष्ट्रीय भाषा थी, है और हमेशा रहेगी।
जन गण मन ।
ட்விட்டர் கணக்காளர்கள், “நமக்கு தேசிய மொழி என்ற ஒன்றே கிடையாது”, “நான் தென்னிந்தியாவைச் சேர்ந்தவன், எங்களுக்கு இந்தி தேசிய மொழி கிடையாது”,”நான் வங்காள மகாராஷ்டிரியர்கள் பிரிவைச் சேர்ந்தவள் அஜய் தேவ்கன் சார். எனக்கு இந்தி தேசிய மொழி இல்லை, கிச்சா சுதீப் சொல்வது சரி” எனப் பல்வேறு கருத்துகள் குவிந்து வருகின்றன.
எது தேசிய மொழி? https://t.co/wupaoCQKa2 | #kichasudeep #AjayDevgn #Hindi #NationalLanguage pic.twitter.com/dHMfVx1QvV
— ABP Nadu (@abpnadu) April 27, 2022
View this post on Instagram
’இந்தி தேசிய மொழி’ என்னும் சர்ச்சைக் கருத்து பல வருடங்களாக பல முக்கிய நபர்களால் நிராகரிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் தொடர்ச்சியாக தமிழ் மொழியை முன்னிலைப்படுத்திப் பேசி வருகிறார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தமிழணங்கு எனப் பகிர்ந்திருந்தார், அண்மையில் இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா ‘டார்க் திராவிடன், ப்ரவுட் தமிழன்’ எனப் பதிவிட்டிருந்தார்.