Aishwaryaa Rajinikanth: "இதனாலதான் 7 வருஷம் சினிமாவுக்கு கேப் விட்டேன்.." : போட்டு உடைத்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
இயக்குநரான ஐஸ்வர்யா தற்போது பாலிவுட்டில் கால்பதிக்கவுள்ளார்.
நடிகரின் ரஜினியின் மூத்த மகளான ஐஷ்வர்யா இயக்குநராவார். நடிகர் தனுஷை வைத்து 3 திரைப்படத்தையும், நடிகர் கார்த்திக்கின் மகனை வைத்து வை ராஜா வை திரைப்படத்தையும் இயக்கினார். நடனம், பாடல் என திரைத்துறையில் பல்வேறு முகங்களாக இருப்பவர். தற்போது உடற்பயிற்சியில் தீவிர ஆர்வம் காட்டி வருகிறார்.
சமீபத்தில் குடும்ப வாழ்க்கை தொடர்பான அறிவிப்பை வெளியிட்டிருந்தார் ஐஸ்வர்யா. தானும் கணவர் தனுஷும் பிரிவதாக அவர் குறிப்பிட்டிருந்தார். அதன்பின்னர் தனக்கான நேரத்தை செதுக்கிக் கொள்வதில் ஆர்வமாக இருக்கிறார் ஐஸ்வர்யா ரஜினி. இயக்குநரான ஐஸ்வர்யா தற்போது பாலிவுட்டில் கால்பதிக்கவுள்ளார். இந்தியில் நான் ‘ஓ சாத்தி ஜால்' படத்தை இயக்குவதன் மூலம், அங்கு இயக்குநராக களமிறங்கி இருக்கிறேன்.
View this post on Instagram
இது ஒரு மிகச்சிறந்த, உண்மையான காதல் கதை” என்று பதிவிட்டிருந்தார். இந்நிலையில் 7 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இயக்குநர் அவதாரம் எடுப்பது குறித்து பேசியுள்ளார் அவர். அதில், '' நான் இடையே ஒரு இடைவெளி விட்டுவிட்டேன். என் மகன்களிடன் நேரம் செலவழிக்கவே அப்படி செய்தேன். இப்போது அவர்கள் வளர்ந்துவிட்டார்கள்.எனக்கு அப்போதே இந்தி படங்களை இயக்க வாய்ப்பு வந்தது. ஆனால் இப்போதைக்கு வாய்ப்பில்லை என்றே தவிர்த்து வந்தேன். இப்போது நான் மீண்டும் சினிமா இயக்கபோகிறேன். என் மகன்கள் வளர்ந்துவிட்டார்கள் என்றார்.
எதிர்காலத்தில் நடிகர்கள் ஹிருத்திக் ரோஷன் மற்றும் ரன்வீர் சிங் ஆகியோருடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாக தெரிவித்த ஐஸ்வர்யாவிடம் தந்தை ரஜினியை இயக்குவீர்களா எனக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த ஐஸ்வர்யா, “உண்மையாக நான் அதைப் பற்றி யோசிக்கவே இல்லை. அதற்கான வேலையையும் நான் செய்யவில்லை. அவருடைய ரசிகனாக இருக்கும் அனுபவத்தை நான் ரசித்து ரசிக்கிறேன்.
View this post on Instagram
ஆனால் அப்படி ஒரு வாய்ப்பு வந்தால் யார்தான் வேண்டாமென்று சொல்வார்கள் என்றார். மேலும் பேசிய அவர், ''பான் இந்தியா கான்செப்ட் வரவேற்க வேண்டிய ஒன்று. ரசிகர்களால்தான் இது சாத்தியப்படுகிறது. திரைத்துறையை ஊக்குவிக்கின்றனர். இது அடுத்தக்கட்டத்துக்கு செல்லும் வழிதான். திரைத்துறையில் பாலினச் சார்பு குறைந்து வருவதாக தெரிகிறது, மேலும் அனைவருக்கும் சினிமாவின் அனைத்து துறைகளிலும் அதிக வாய்ப்புகள் கிடைக்கத் தொடங்கியுள்ளன. OTT வளர்ச்சியும் சினிமாவுக்கு ஆரோக்கியமான ஒன்றுதான் என்றார்.