பொன்னியின் செல்வன் படத்தில் முதலில் ஐஸ்வர்யா ராய்க்கு பதிலாக மணிரத்னம் தேர்வு செய்த நடிகை யார் தெரியுமா?
பொன்னியின் செல்வன் படத்தின் ஐஸ்வர்யா ராய் ஏற்று நடித்த நந்தினி கதாபாத்திரத்தில், நடிக்க இயக்குநர் மணிரத்னம் முதலில் தேர்வு செய்தவர் பற்றி உங்களுக்கு தெரியுமா?

இயக்குநர் மணிரத்னத்தின் கனவு படம் பொன்னியின் செல்வன். கடந்த 2022 ஆம் ஆண்டு திரைக்கு வந்த இந்தப் படத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய் (இரட்டை வேடம்), கார்த்தி, ரவி மோகன், த்ரிஷா, ஜெயராம், பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா லெட்சுமி, சோபிதா துலிபாலா, பிரகாஷ் ராஜ் என்று ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருந்தார்கள். தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என்று பான் இந்தியா படமாக வெளியான இந்தப் படம் ரூ.500 கோடி வரையில் வசூல் குவித்தது. எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் பொன்னியின் செல்வன் என்ற நாவலை தழுவி இந்தப் படம் எடுக்கப்பட்டது.
இந்தப் படத்தில் ஐஸ்வர்யா ராய் நந்தினி மற்றும் மந்தாகினி தேவி (ஊமை ராணி) என்று இருவேறு கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். கல்கி எழுதிய இந்த நாவலை, இயக்குனர் மணிரத்னம் இயக்க வேண்டும் என சமீபத்தில் நினைக்கவில்லை. 20 வருடங்களுக்கு முன்பே நினைத்தார். இந்த படத்தை இயக்க வேண்டும் என்பதை தன்னுடைய கனவாகவும் வைத்திருந்தார். அப்போதைய சில முன்னணி நடிகர் நடிகைகள் எந்தெந்த கதாபாத்திரத்தில் நடித்தால் நன்றாக இருக்கும் என்பதையும் தீமானித்தார்.
அந்த வகையில், 20... 23 வருடங்களுக்கு முன்... இந்த படத்தில் ஐஸ்வர்யா ராய் ஏற்று நடித்த நந்தினி கதாபாத்திரத்துக்கு பாலிவுட் நடிகை ரேகாவை தான் தேர்வு செய்தார். ஆனால் இந்த படத்திற்கான பட்ஜெட் மிகவும் அதிகம் என்பதால், அப்போது யாரும் இந்த படத்தை தயாரிக்க முன்வரவில்லை.
பின்னர், பல வருடங்கள் கழிந்து தான் பொன்னியின் செல்வன் படத்தை லைகா நிறுவனத்துடன் இணைந்து தயாரித்து இயக்கி இருந்தார். இரண்டு பாகங்களாக வெளியான ஐந்து படத்தில் ஐஸ்வயா ராய் பழுவூர் ராணியாகவும், ஊமைத்தாய் மந்தாகினியாகவும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

