Agent Kannayiram Santhanam: தாய் மகன் பாசப்போராட்டம்.. இதுவரை பார்க்காத சந்தானம்.. ஏஜெண்ட் கண்ணாயிரம் டைரக்டர் பேட்டி!
'ஏஜென்ட் கண்ணாயிரம்' படத்தில் இதுவரை பார்க்காத சந்தானத்தை பார்ப்பீர்கள் என்று அந்தப்படத்தின் இயக்குநர் மனோஜ் பீதா பேசியிருக்கிறார்.
'ஏஜென்ட் கண்ணாயிரம்' படத்தில் இதுவரை பார்க்காத சந்தானத்தை பார்ப்பீர்கள் என்று அந்தப்படத்தின் இயக்குநர் மனோஜ் பீதா பேசியிருக்கிறார்.
இயக்குனர் மனோஜ் பீதா இயக்கத்தில், நடிகர் சந்தானத்தின் நடிப்பில் உருவாகியுள்ள படம் ''ஏஜென்ட் கண்ணாயிரம்'' இதில் சந்தானத்திற்கு ஜோடியாக ரியா சுமந்த் நடித்துள்ளார். இவர்களுடன், முனிஷ் காந்த், குக் வித் கோமாளி புகழ், குரு சோமசுந்தரம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.
இந்தப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அந்தப்படத்தின் இயக்குநர் மனோஜ் பீதா செய்தியாளர்களிடம் பகிர்ந்து கொண்டதாவது, "தெலுங்கில் வெற்றி பெற்ற 'ஏஜென்ட் சாய் ஸ்ரீனிவாச ஆத்ரேயா' படத்தின் ரீமேக் தான் இந்த ஏஜென்ட் கண்ணாயிரம். இந்த படம் தொடர்பாக சந்தானத்திடம் பேசும் போது, தெலுங்கில் இருப்பது போலவே தமிழில் இந்த கதையை நான் சொல்ல விரும்பவில்லை.
காமெடி மற்றும் பஞ்ச் இரண்டையும் தான் உங்கள் ரசிகர்கள் உங்களிடமிருந்து எதிர்பார்ப்பார்கள். அதை தவிர்த்து வேறு ஒரு பரிமாணத்தில் சந்தானத்தை இந்த படத்தில் பார்க்க நான் விரும்புகிறேன் என்று அவரிடம் சொன்னேன். அதன் பிறகு அவரும் ஒத்துக் கொண்டு இந்த கதைக்குள் வந்தார். நாங்கள் இருவரும் இணைந்து இந்த படத்தை கொடுத்திருக்கிறோம். இதில் வழக்கமான சந்தானத்தை பார்க்க முடியாது.
View this post on Instagram
அதிகம் பேசாமல், அதேசமயம் அதிக அளவில் எமோஷன்களை காட்டி நடித்துள்ளார். இது ஒரு தாய்க்கும், மகனுக்குமான பாசப் போராட்டம். அதில் அந்த மகனின் கதாபாத்திரம் ஒரு டிடெக்டிவ் ஏஜென்ட். அப்படித்தான் இந்த கதையை நான் கட்டமைத்து இருக்கிறேன். கதாநாயகி ரியா சுமன், குரு சோமசுந்தரம், முனீஸ் காந்த், புகழ் ஆகியோரும் சிறப்பாக நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜாவின் இசை படத்திற்கு பெரிய பலமாக அமைந்துள்ளது. குறிப்பாக ஒப்பாரி பாடல் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்துள்ளது. வரும் 25ஆம் தேதி இப்படம் தியேட்டரில் வெளியாகிறது. என்னுடைய முதல் படமான ‘வஞ்சகர் உலகம்’ படத்திற்கு நீங்கள் கொடுத்த ஆதரவை போல் இந்த படத்திற்கும் தர வேண்டும்” என்றார்.