மேலும் அறிய

Afghan Film Director: ”உயிர் பிழைத்தால் நடந்த சம்பவங்களை படமாக்குவேன் “ - ஆப்கான் இளம் பெண் இயக்குநர் உருக்கம்!

இவரது எழுத்து, இயக்கம் மற்றும் தயாரிப்பில் வெளியாகியிருந்த  Wolf and Sheep படம் கடந்த 2016 ஆம் ஆண்டு Cannes திரைப்பட விழாவில் சிறந்த படைப்புக்கான விருதை பெற்றது.

உலக சினிமாவை உற்று நோக்குபவர்களுக்கு ஷாஹர்பானு சதத் என்ற இளம் பெண் இயக்குநர் பரீட்சியமானவராக இருப்பார். ஆப்கானிஸ்தானை பூர்வீகமாக கொண்ட ஷாஹர்பானு சதத் அந்த மொழியில் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் (Wolf and Sheep) என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். ஆப்கானிஸ்தான் மலையில் வசிக்கும் ஆடுமேய்க்கும் சிறுமியரின் வாழ்வியல் சார்ந்த கதையாக  Wolf and Sheep திரைப்படம் இடம்பிடித்திருந்தது. அந்த சிறுமிகளின் வாழ்க்கை எப்படியானது, அவர்களுக்கு இருக்கும் கனவு எத்தகையது  என்பதை விளக்கும் படத்தில் பாலின சமத்துவம் குறித்தும் விளக்கியிருந்தார்   ஷாஹர்பானு சதத்.  அவரது எழுத்து, இயக்கம் மற்றும் தயாரிப்பில் வெளியாகியிருந்த  Wolf and Sheep படம் கடந்த 2016 ஆம் ஆண்டு Cannes திரைப்பட விழாவில் சிறந்த படைப்புக்கான விருதை பெற்றது. அதுமட்டுமல்லாமல் கடந்த 2019 ஆம் ஆண்டு  Reykjavik சர்வதேச விழாவில் இவரின் அடுத்த படைப்பான ‘ தி ஆர்ஃபனேஜ் ‘ என்ற திரைப்படமும்  சிறந்த படத்திற்கான விருதை பெற்றது குறிப்பிடத்தக்கது.

Afghan Film Director: ”உயிர் பிழைத்தால் நடந்த சம்பவங்களை படமாக்குவேன் “ - ஆப்கான் இளம் பெண்  இயக்குநர் உருக்கம்!

இந்நிலையில் ஆப்கானிஸ்தானை தாலிபன்கள் கைப்பற்றியதை தொடர்ந்து , தனது குடும்பத்துடன் தப்பிக்க வேண்டும் என்ற முனைப்பில் இருக்கும் பல்லாயிர கணக்கான ஆப்கான் மக்களில் ஒருவராக ஷாஹர்பானு சதத்தும் உள்ளார். அவருடன் பிரபல தி ஹாலிவுட் ரிப்போர்டர் பத்திரைக்கை தொலைபேசி வாயிலாக தொடர்புக்கொண்டு பேசியுள்ளது. அப்போது பேசிய  தாலிபான்கள் கட்டுப்பாட்டில் உள்ள ஆப்கானிஸ்தான் நிலை குறித்து விவரித்துள்ளார். மேலும் தனது எதிர்கால கனவுகள் மற்றும் திட்டங்கள் எல்லாம் நாசமாகிவிட்டன என வருத்தம் தெரிவித்திருக்கிறார் இயக்குநர்  ஷாஹர்பானு சதத்.

Afghan Film Director: ”உயிர் பிழைத்தால் நடந்த சம்பவங்களை படமாக்குவேன் “ - ஆப்கான் இளம் பெண்  இயக்குநர் உருக்கம்!

 காபூலின் ஹமீத் கர்சாய் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து வெளியேற முடியும் என்ற செய்திக்காக காத்திருப்பதாக தெவிக்கும்   ஷாஹர்பானு, “ஒரு வேளை நான் இங்கிருந்து தப்பித்துவிட்டால் , இங்கு நடந்த சம்பவங்களை அடிப்படையாக கொண்டு நிச்சயம் ஒரு படத்தை உருவாக்குவேன் “ என தெரிவித்துள்ளார். இது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Afghan Film Director: ”உயிர் பிழைத்தால் நடந்த சம்பவங்களை படமாக்குவேன் “ - ஆப்கான் இளம் பெண்  இயக்குநர் உருக்கம்!

தாலிபன்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியவுடன் , ஆட்சி பொறுப்பை ஏற்க தொடங்கியுள்ளனர். கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு பிறகு ஆப்கானிஸ்தானை, ‘ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய அமீரகம்' என பெயர் மாற்றம்  செய்துள்ளனர். மேலும்  தாலிபான் அமைப்பின் தலைவர் முல்லா அப்துல் கனி பராதர் தற்போது நாட்டின் புதிய அதிபராக பொறுப்பேற்றுள்ளார்.ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்துக்கு பல்வேறு நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் தாலிபான்களுடன் நட்புறவு கொள்ள தயார் என சீனா தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ப பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் இதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளார். முன்னாள் அதிபர் அஷ்ரப் கனி நாட்டை விட்டு தப்பியோடிய நிலையில்  “ மக்கள் ரத்தம் சிந்துவதை தவிர்க்கவே தான் அவ்வாறு செய்ததாக ”ட்விட்டரில் விளக்கம் ஒன்றையும் கொடுத்துள்ளார். மற்ற இஸ்லாமிய நாடுகளில் அவருக்கு அனுமதி மறுக்கப்படுவதாக தெரிகிறது. எனவே அவர் அமெரிக்காவில் தஞ்சம் அடைய வாய்ப்பிருப்பதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ISRO Chairman: தமிழ்நாடே பெருமிதம் - இஸ்ரோவின் புதிய தலைவராக வி.நாராயணன் நியமனம், யார் இவர்?

Pranab Mukherjee: மன்மோகன் சிங்கிற்காக போராடிய காங்கிரஸ், பிரணாப் முகர்ஜிக்காக களமிறங்கிய பாஜக, வெளியான அறிவிப்பு

Rasipalan January 8:  சிம்மத்திற்கு வெற்றியான நாள், கன்னிக்கு அமைதி வேண்டிய நாள்: உங்க ராசிக்கான பலன்?

ஆப்ட்ரால் நீ ஒரு ஐபிஎஸ் என சொன்ன சீமான் : நீதிமன்றத்தில் நிறுத்திய வருண்குமார் ஐபிஎஸ்: வழக்கில் நடந்தது என்ன?

ABP Premium

வீடியோ

Allu arjun meet Sritej | ”பையனை நான் பாத்துக்குறேன்”தந்தையிடம் கண் கலங்கிய அல்லு அர்ஜுன் | Pushpa 2Anita Anand | அடுத்த கனடா பிரதமர் யார்? ரேஸில் தமிழ் பெண்! யார் இந்த அனிதா ஆனந்த்? | Canada“இது கூட தெரியாதா விஜய்” கலாய்க்கும் திமுகவினர்திருப்பி அடிக்கும் தவெகவினர்!TVK Vijay on TN Assembly : ஆளுநருக்கு கண்டனம்!அதிமுகவுக்கு SUPPORT.. ஆட்டம் காட்டும் விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ISRO Chairman: தமிழ்நாடே பெருமிதம் - இஸ்ரோவின் புதிய தலைவராக வி.நாராயணன் நியமனம், யார் இவர்?
ISRO Chairman: தமிழ்நாடே பெருமிதம் - இஸ்ரோவின் புதிய தலைவராக வி.நாராயணன் நியமனம், யார் இவர்?
Pranab Mukherjee: மன்மோகன் சிங்கிற்காக போராடிய காங்கிரஸ், பிரணாப் முகர்ஜிக்காக களமிறங்கிய பாஜக, வெளியான அறிவிப்பு
Pranab Mukherjee: மன்மோகன் சிங்கிற்காக போராடிய காங்கிரஸ், பிரணாப் முகர்ஜிக்காக களமிறங்கிய பாஜக, வெளியான அறிவிப்பு
Rasipalan January 8:  சிம்மத்திற்கு வெற்றியான நாள், கன்னிக்கு அமைதி வேண்டிய நாள்: உங்க ராசிக்கான பலன்?
Rasipalan January 8: சிம்மத்திற்கு வெற்றியான நாள், கன்னிக்கு அமைதி வேண்டிய நாள்: உங்க ராசிக்கான பலன்?
ஆப்ட்ரால் நீ ஒரு ஐபிஎஸ் என சொன்ன சீமான் : நீதிமன்றத்தில் நிறுத்திய வருண்குமார் ஐபிஎஸ்: வழக்கில் நடந்தது என்ன?
ஆப்ட்ரால் நீ ஒரு ஐபிஎஸ் என சொன்ன சீமான் : நீதிமன்றத்தில் நிறுத்திய வருண்குமார் ஐபிஎஸ்: வழக்கில் நடந்தது என்ன?
Delhi Election: ராகுலை கழற்றிவிட்ட கெஜ்ரிவாலின் கனவு பலிக்குமா.? டெல்லி கோட்டையை பிடிக்கப்போவது யார்.?
ராகுலை கழற்றிவிட்ட கெஜ்ரிவாலின் கனவு பலிக்குமா.? டெல்லி கோட்டையை பிடிக்கப்போவது யார்.?
Ajith Car Accident: அப்பளமாக நொறுங்கிய கார்! ரேஸில் ஈடுபட்ட அஜித் விபத்தில் சிக்கியதால் பரபரப்பு!

UGC Update: இனி உதவிப் பேராசிரியர் பணிக்கு தகுதித்தேர்வு கட்டாயமில்லை; யுஜிசி புது விதிகள் சொல்வது என்ன?

EPS IT Raid: கூட்டணிக்கு வரலனா அவ்ளோதான்; அதிமுகவுக்கு செக்வைத்த பாஜக? ஐ.டி ரைடால் சட்டசபைக்கு வராத இபிஎஸ்.!

Embed widget