மேலும் அறிய

Aar Ya paar: டிஸ்னி+ ஹாட் ஸ்டாரின் அடுத்த ஒரிஜினல்.. கவனம் ஈர்க்கும் ஆர் யா பார் ட்ரெய்லர்!

‘ஆர் யா பார்’ இணையத்தொடர் தமிழ், இந்தி, தெலுங்கு, மராத்தி, கன்னடம், பெங்காலி மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் டிசம்பர் 30 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகிறது. 

உயிர், பணம், அதிகாரம் ஆகியவற்றுக்கு இடையிலான போராட்டத்தை கண்முன் நிறுத்தும்  ‘ஆர் யா பார்’ இணையதொடர் டிசம்பர் 30, 2022 முதல், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் தமிழ், இந்தி, தெலுங்கு, மராத்தி, கன்னடம், பெங்காலி மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது.

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளம் தங்கள் அடுத்த ஒரிஜினல் வெளியீடான ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் பிரிவில் ‘ஆர் யா பார்’ தொடரின் டிரெய்லரை தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியிட்டது.  

ஒரு சாதாரண மனிதன் பின்தங்கிய நிலையில் உள்ள தன் பழங்குடியினரைக் காப்பாற்றி நவீன உலகில் வாழ முயலும் கதை தான் இந்த தொடர். ஆக்‌ஷன்- கலந்த இந்த டிராமா தொடரை சித்தார்த் சென்குப்தா உருவாக்கியுள்ளார். Edgestorm Ventures LLP சார்பில் ஜோதி சாகர் மற்றும் சித்தார்த் சென்குப்தா தயாரித்துள்ளனர்.

க்ளென் பரெட்டோ, அங்குஷ் மொஹ்லா மற்றும் நீல் குஹா ஆகியோர் இணைந்து இயக்கியுள்ள இந்தத் தொடர் டிசம்பர் 30, 2022 அன்று டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் தமிழ், இந்தி, தெலுங்கு, மராத்தி, கன்னடம், பெங்காலி மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது.


Aar Ya paar: டிஸ்னி+ ஹாட் ஸ்டாரின் அடுத்த ஒரிஜினல்.. கவனம் ஈர்க்கும் ஆர் யா பார் ட்ரெய்லர்!

இந்த அதிரடி ஆக்சன் டிராமா தொடரை ஆதித்யா ராவல், பத்ரலேகா, சுமீத் வியாஸ், ஆஷிஷ் வித்யார்த்தி, திப்யேந்து பட்டாச்சார்யா, ஆசிப் ஷேக், ஷில்பா சுக்லா, வருண் பகத், நகுல் சேதேவ் மற்றும் பலர் இணைந்து உருவாக்கியுள்ளனர். வில்வித்தையில் அசாத்திய திறமை கொண்ட சர்ஜு எனும் நாயகன் பாத்திரத்தில் ஆதித்யா ராவல் நடித்துள்ளார்; பெரும் குற்றங்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்திய கூலிப்படை கொலையாளியாக அவர் மாறுகிறார். வஞ்சகமும் ஊழலும் மிகுந்த அரசியல்வாதிகள் சூழ்ந்த நவீன உலகில், தான் சார்ந்த பழங்குடியினரின் உயிர்வாழ்விற்காக போராடுகிறார்.


Aar Ya paar: டிஸ்னி+ ஹாட் ஸ்டாரின் அடுத்த ஒரிஜினல்.. கவனம் ஈர்க்கும் ஆர் யா பார் ட்ரெய்லர்!

இது குறித்து நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் மற்றும் தயாரிப்பாளருமான சித்தார்த் சென்குப்தா கூறுகையில்.. “இரண்டு வெவ்வேறு உலகங்கள் ஒன்றாக கலக்கும் போது, அவைகளுக்குள் அடிக்கடி மோதலும் குழப்பமும் ஏற்படும்; பேராசை மிகுந்த அதிகார உலகில் ஒரு இனம் உயிர்வாழப் போராடும் கதையை இந்த தொடர் கூறுகிறது.

அட்டகாசமான திரைக்கதை அருமையான நடிகர்கள், பரபரப்பான திருப்பங்கள் என ரசிகர்களை மகிழ்விக்கும் அனைத்தும் இத்தொடரில் உள்ளது. உலகம் முழுக்க பிரபலமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார் எங்கள் ஆர் யா பார் உலகை உலகளாவிய அளவில் பார்வையாளர்களிடம் கொண்டு செல்லும் என்பது பெருமகிழ்ச்சி’’ என்று பேசியுள்ளார்.
 
நடிகர் ஆதித்யா ராவல் இதுபற்றி கூறுகையில்.. “சர்ஜு எனும் அழகான பாத்திரத்தில் நான் நடித்துள்ளேன். சர்ஜு தனது நிலத்தையும் மக்களையும் பாதுகாக்க விரும்புகிறார்; மேலும் தனது இலக்கை நிறைவேற்ற எந்த எல்லைக்கும் செல்வார். ஒன்றின் பின் ஒன்றாக பல சவால்களை சமாளிக்கும் போது இக்கதாபாத்திரத்தின் வெவ்வேறு சாயல்களை நீங்கள் காணலாம்; ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் தொடரான “ஆர் யா பார்” தொடரில் சர்ஜுவாக நடிக்க எனக்கு வாய்ப்பளித்த சித்தார்த் சென்குப்தா மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஆகியோருக்கு நன்றி’ என்று பேசியுள்ளார்.


 

தலைப்பு செய்திகள்

விஜய் வெற்றியால் முட்டாள்களுக்கும் அரசியல் ஆசை.. தனுஷை விளாசிய ப்ளூ சட்டை மாறன்!
விஜய் வெற்றியால் முட்டாள்களுக்கும் அரசியல் ஆசை.. தனுஷை விளாசிய ப்ளூ சட்டை மாறன்!
Cheran: விஜய் ஆட்சியில் தான் எங்களுக்கு விடிவுகாலம்.. இயக்குநர் சேரன் புகழாரம்.. திமுக,அதிமுக மீது காட்டம்!
Cheran: விஜய் ஆட்சியில் தான் எங்களுக்கு விடிவுகாலம்.. இயக்குநர் சேரன் புகழாரம்.. திமுக,அதிமுக மீது காட்டம்!
திமுக ஆட்சியில் தப்பி வந்த இர்ஃபானை தட்டி தூக்கிய தவெக! மீண்டும் சூடுபிடித்த பாலின வெளிப்படுத்தல் வழக்கு
திமுக ஆட்சியில் தப்பி வந்த இர்ஃபானை தட்டி தூக்கிய தவெக! மீண்டும் சூடுபிடித்த பாலின வெளிப்படுத்தல் வழக்கு
90 நொடி காட்சிக்காக 1.5 கோடி செலவு செய்த ஜனநாயகன் படக்குழு!
90 நொடி காட்சிக்காக 1.5 கோடி செலவு செய்த ஜனநாயகன் படக்குழு!

வீடியோ

Thanjavur Viral Video : ”உன்ன DISMISS பண்ணியாச்சே நீ எப்படி வேலை செய்ற” ரணகளமான அரசு அலுவலகம்
Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt: தமிழ்நாட்டிலிருந்து கனிமவளங்களை ஏற்றுமதி செய்ய இடைக்கால தடை - CM விஜய் அரசு அதிரடி உத்தரவு
தமிழ்நாட்டிலிருந்து கனிமவளங்களை ஏற்றுமதி செய்ய இடைக்கால தடை - CM விஜய் அரசு அதிரடி உத்தரவு
’’நீதி மறுக்கும் நிர்வாகம்; மனோன்மணியம் பல்கலை ஊழியர்களுக்கு இதை செய்ங்க’’ அன்புமணி வலியுறுத்தல்
’’நீதி மறுக்கும் நிர்வாகம்; மனோன்மணியம் பல்கலை ஊழியர்களுக்கு இதை செய்ங்க’’ அன்புமணி வலியுறுத்தல்
Montek Singh: யார் இந்த மான்டேக் சிங் அலுவாலியா? தமிழக அரசுக்காக செய்யப்போகும் வேலை என்ன? வருவாய் உயருமா?
யார் இந்த மான்டேக் சிங் அலுவாலியா? தமிழக அரசுக்காக செய்யப்போகும் வேலை என்ன? வருவாய் உயருமா?
TN Weather News: இன்று வெயில் கொளுத்தும், எந்தெந்த மாவட்டங்களில் கனமழை, சென்னை? தமிழக வானிலை அறிக்கை
இன்று வெயில் கொளுத்தும், எந்தெந்த மாவட்டங்களில் கனமழை, சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Mekedatu Dam: மேகதாது விவகாரம்.. தமிழ்நாட்டிற்கு அதிகாரமில்லை.. மத்திய அமைச்சரின் பதிலால் சர்ச்சை!
Mekedatu Dam: மேகதாது விவகாரம்.. தமிழ்நாட்டிற்கு அதிகாரமில்லை.. மத்திய அமைச்சரின் பதிலால் சர்ச்சை!
Bolero Neo Plus: நாட்டின் மலிவான 9 சீட்டரில் இருக்கும் குறைகள்..! SUV யாருக்கு ஒத்து வராது? மாற்று ஆப்ஷன்கள் என்ன?
நாட்டின் மலிவான 9 சீட்டரில் இருக்கும் குறைகள்..! SUV யாருக்கு ஒத்து வராது? மாற்று ஆப்ஷன்கள் என்ன?
Top 5 Cars: ரூ.10 லட்சம் பட்ஜெட்..! அதிக மறுவிற்பனை மதிப்பை கொண்ட டாப் 5 கார்கள் - முன்னணி ப்ராண்ட் மாடல்கள்
ரூ.10 லட்சம் பட்ஜெட்..! அதிக மறுவிற்பனை மதிப்பை கொண்ட டாப் 5 கார்கள் - முன்னணி ப்ராண்ட் மாடல்கள்
கரூர் சம்பவம்: விஜய் வழங்கிய அரசுப்பணி ஆணை ரத்து! ஆர்டர் போட்ட உயர்நீதிமன்ற மதுரை கிளை!
கரூர் சம்பவம்: விஜய் வழங்கிய அரசுப்பணி ஆணை ரத்து! ஆர்டர் போட்ட உயர்நீதிமன்ற மதுரை கிளை!
Embed widget