மேலும் அறிய

Adipurush Hanuman Poster: சர்ச்சைகளுக்கு நடுவே புதிய போஸ்டர்... அனுமன் ஜெயந்தி வாழ்த்து சொன்ன ’ஆதிபுருஷ்’ டீம்!

அனுமன் ஜெயந்தியை ஒட்டி ஆதிபுருஷ் படத்தின் அனுமன் கதாபாத்திரத்தின் பிரத்யேக போஸ்டர் ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

வட இந்திய மாநிலங்களில் அனுமன் ஜெயந்தி இன்று கொண்டாடப்பட்டு  வரும் நிலையில், ராமனின் தீவிர பக்தரான அனுமானின் பிரத்யேக போஸ்டரை 'ஆதி புருஷ்' பட தயாரிப்பாளர்கள் வெளியிட்டிருக்கிறார்கள்.

டி-சீரிஸ் மற்றும் ரெட்ரோஃபைல்ஸ் தயாரிப்பில் ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வரும் பிரமாண்டமான திரைப்படம் 'ஆதிபுருஷ்'. ராமாயண காப்பியத்தின் ஒரு பகுதியை அடிப்படையாகக் கொண்டு 3டி தொழில்நுட்பத்தில் இந்தப் படம் உருவாக்கப்பட்டு வருகிறது.

பிரபாஸ் இந்தப் படத்தில் ராமராக நடிக்க, சீதாவாக க்ரித்தி சனோன், ராவணனாக சைஃப் அலி கான், லக்ஷ்மணனாக சன்னி சிங், அனுமனாக தேவதத்தா நாகே ஆகியோர் நடித்து வருகிறார்கள். 

இந்நிலையில், ஏப்ரல் ஆறாம் தேதியான இன்று (ஏப்ரல்.06) அனுமன் ஜெயந்தி வட இந்திய மாநிலங்களில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருவதை ஒட்டி, 'ஆதி புருஷ்' படத்தில் அனுமன் வேடத்தில் தோன்றும் நடிகர் தேவதத்தா நாகேவின் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டிருக்கிறார்கள்.

ராமன் மீது அளவற்ற அன்பும் பக்தியும் கொண்டிருக்கும் அனுமானின் வீரத்தையும் விவேகத்தையும் வெளிப்படுத்தும் வகையில், வலிமை, விடா முயற்சி, விசுவாசம் ஆகியவற்றை கொண்டிருக்கும் அனுமனின் நாளான இன்று, தேவதத்தா நாகே இடம்பெறும் இந்தப் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

பான் இந்தியா படமாக உருவாகி வரும் ஆதி புருஷ் படம் பெரும் பொருட் செலவில் உருவாகி வரும் நிலையில், ஒருபுறம் தொடர் சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறது. முன்னதாக படத்தின் மோஷன் போஸ்டர் வெளியான நிலையில், பிரபாஸின் ராமர் கெட்அப் முதல் சைஃப் அலி கானின் ராவணன் கெட் அப் வரை அனைத்தும் கேலிக்கு உள்ளாகின.

மேலும் முன்னதாக ராமநவமியை முன்னிட்டு ஆதிபுருஷ் படத்தின் புதிய போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்ட நிலையில் அது பெரும் சர்ச்சைக்குள்ளானது. புதிய போஸ்டரில், பிரபாஸும் சன்னியும் வில் மற்றும் அம்பு ஏந்தியபடி கவசமும், வேட்டியும் அணிந்தும், க்ரித்தி சனோன் புடவையிலும் தோற்றமளித்த நிலையில், தேவதத்தா மூவரையும் வணங்குவது போல் இருந்தது. 

இந்நிலையில், ஸ்ரீ ராமர் இந்து வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள படி அல்லாமல் இயல்புக்கு மாறான உடையில் இருக்கிறார் எனக்கூறி தயாரிப்பாளர்கள் இயக்குனர் ஓம் ராவத் மீது மும்பை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் ஆஷிஷ் ராய் - பங்கஜ் மிஸ்ரா ஆகியோர் மும்பை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இயக்குநர் ஓம் ராவத் இயக்கத்தில் தயாராகி இருக்கும் 'ஆதி புருஷ்' திரைப்படத்தில் பிரபாஸ், கிருத்தி சனோன், சன்னி சிங் ,சயீஃப் அலி கான், தேவதத்தா நாகே உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்தை டி-சிரீஸ் பூஷன் குமார், க்ரிஷன் குமார், ஓம் ராவத், பிரசாத் சுதார் மற்றும் ரெட்ரோ ஃபைல்ஸின் ராஜேஷ் நாயர் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இந்த திரைப்படம் எதிர்வரும் ஜூன் மாதம் 16ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய இந்திய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Tirupati Laddu: திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு  - ஆய்வில் உறுதி..! பக்தர்கள் அதிர்ச்சி.!
Tirupati Laddu: திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு - ஆய்வில் உறுதி..! பக்தர்கள் அதிர்ச்சி.!
"65 நாடுகளுக்கு ஏற்றுமதி.. சர்வதேச சந்தையில் தனித்துவம்" ஆச்சி குழும தலைவர் பத்மசிங் ஐசக் பேச்சு!
சென்னையில் நான் தான் கிங்கு.. வங்கதேச பவுலர்களை கதறடித்த அஸ்வின்.. மிரட்டல் சதம்!
சென்னையில் நான் தான் கிங்கு.. வங்கதேச பவுலர்களை கதறடித்த அஸ்வின்.. மிரட்டல் சதம்!
7.5 % இட ஒதுக்கீட்டை அரசு உதவிபெறும் பள்ளிக்கும் ஏன் வழங்க கூடாது.? அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.!
7.5 % இட ஒதுக்கீட்டை அரசு உதவிபெறும் பள்ளிக்கும் ஏன் வழங்க கூடாது.? அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Trichy News | திமுக கொடியுடன் ஆடு திருடும் கும்பல்..தீவிரமாக தேடும் போலீஸ்VCK vs PMK  | Graph-ஐ உயர்த்திய திருமா! விசிக ரூட்டில் பாமக?அன்புமணி மாஸ்டர் பிளான்Shakthi Vasudevan | GP Muthu Fight | ரகளை செய்த GP முத்து..BEEP-ல் பூசாரியுடன் சண்டை..என்ன காரணம் தெரியுமா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tirupati Laddu: திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு  - ஆய்வில் உறுதி..! பக்தர்கள் அதிர்ச்சி.!
Tirupati Laddu: திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு - ஆய்வில் உறுதி..! பக்தர்கள் அதிர்ச்சி.!
"65 நாடுகளுக்கு ஏற்றுமதி.. சர்வதேச சந்தையில் தனித்துவம்" ஆச்சி குழும தலைவர் பத்மசிங் ஐசக் பேச்சு!
சென்னையில் நான் தான் கிங்கு.. வங்கதேச பவுலர்களை கதறடித்த அஸ்வின்.. மிரட்டல் சதம்!
சென்னையில் நான் தான் கிங்கு.. வங்கதேச பவுலர்களை கதறடித்த அஸ்வின்.. மிரட்டல் சதம்!
7.5 % இட ஒதுக்கீட்டை அரசு உதவிபெறும் பள்ளிக்கும் ஏன் வழங்க கூடாது.? அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.!
7.5 % இட ஒதுக்கீட்டை அரசு உதவிபெறும் பள்ளிக்கும் ஏன் வழங்க கூடாது.? அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.!
பாஸ்போர்ட் விண்ணப்பிக்க போறீங்களா..? - இத கட்டாயம் தெரிஞ்சிகோங்க
பாஸ்போர்ட் விண்ணப்பிக்க போறீங்களா..? - இத கட்டாயம் தெரிஞ்சிகோங்க
Group 4 Vacancy: குரூப் 4 தேர்வர்களுக்கு ஸ்வீட் நியூஸ்… காலியிடங்களை அதிகரிக்க டிஎன்பிஎஸ்சி முடிவு- அறிவிப்பு எப்போது?
Group 4 Vacancy: குரூப் 4 தேர்வர்களுக்கு ஸ்வீட் நியூஸ்… காலியிடங்களை அதிகரிக்க டிஎன்பிஎஸ்சி முடிவு- அறிவிப்பு எப்போது?
புதிய உருமாறிய கொரோனா.. மீண்டும் மிரட்ட வருகிறது.. மருத்துவர்கள் கூறுவது என்ன?
புதிய உருமாறிய கொரோனா.. மீண்டும் மிரட்ட வருகிறது.. மருத்துவர்கள் கூறுவது என்ன?
கன்னியாகுமரியில் அணுக் கனிம சுரங்கம்.! மத்திய அரசு திட்டம்.!
கன்னியாகுமரியில் அணுக் கனிம சுரங்கம்.! மத்திய அரசு திட்டம்.!
Embed widget